Tuesday, June 10, 2014

ஏக் து ஜே கேலியே..சில குறிப்புகள்

நேற்றைக்கும் இன்றைக்குமாக பார்த்து முடித்தேன். என்ன ஒரு அழகான திரைக்கதை. லைலா, மஜ்னு கதைதான். ஆனால், அதை செதுக்கிய விதத்தில் பாலச்சந்தர் கலக்கி இருந்தார்.

முரட்டுக்காளை ரதியை முரட்டுக்காளையில் தமிழ் பெண்ணாகவும், இது ஹிந்திப்பெண்ணாகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. 

80களில் இனிமையான பாடல்களை தேன் சொட்டும் பாடல்கள் என விளம்பரம் செய்வார்கள். இதில் ஒவ்வொன்றும் மனதை தொடும் பாடல்கள். அதற்கேற்றார்போல படமாக்கலும்.

மாதவி கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி இருக்கிறார் பாலசந்தர்.

அவர்களின் ரொமான்ஸும், இளமைத்துள்ளலுமாக படம் அப்படியே கட்டிப்போடுகிறது. இப்போது ரீ ரிலீஸ் செய்தாலும் செமையாக ஓடும் என நினைக்கிறேன். இப்போது வரும் படங்களின் தரத்தைப் பார்க்கும்போது இது இன்றும் இளமையாய், புதிதாய் இருக்கிறது.

க்ளைமாக்ஸை ஏன் இப்படி செய்து மனதை கனக்கச் செய்தாரோ கே.பி.

1981ல் வந்த படத்தை 2014ல்தான் பார்க்க வாய்த்துள்ளது. 


ஏக் துஜே கே லியே படத்தில் பிங்க் ஷேட் படம் முழுக்க வருகிறது.. 

ரதி முள்ளாய் இருக்கும் சங்கை கைகளுக்கிடையில் வைத்து நசுக்கினாலும் பிங்க் ரத்தம்தான்.. 

பாட்டுகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.. யுடியூப் க்கு ஒரு கும்பிடு. திடீர்னு தேரே மேரே பீச் மே பாட்டைப் பாக்கனும்னு தோன்றியது.. அப்படியே எல்லா பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

நீங்களும் முழுத்தொகுதியைக்கேட்க / பார்க்க கீழே லிங்க்..
.
http://www.youtube.com/watch?v=moVxfltTU_E

No comments: