Tuesday, June 10, 2014

பாரு தகதிமிதா எனும் ஒப்பற்றோன்..

என் பெயர் பாரு தகதிமிதா..

எனக்கு சில சந்தேகங்கள்..

உலகமே வியக்கும் அளவு எழுதுகிறேனே..(யார் சொன்னா? நான் தான் சொல்றேன்) அப்டி இருந்தும் ஊரெங்கும் போகுமிடமெல்லாம் செருப்படி மட்டுமே கிடைக்கிறதே, ஏன்?

உடலின் ஜனனேந்திரியங்களை வைத்து வாசகர் ஒவ்வொருவனையும் கிழி கிழி எனக் கிழித்துவிட்டு, நான் மனிதனை தெய்வமாக மதிப்பவன் என எழுதினால் ஏன் ஒருவரும் நம்புவதில்லை?

தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் என பட்டியல் வரும்போதெல்லாம் எத்தனை கதறி, கதறி கேட்டாலும் என்னை ஒரு பயலும் லிஸ்ட்டில் சேர்க்க மாட்டேனென்கிறான்.. இனி, நான் என்ன செய்ய வேண்டும்?

மகள் வயதுப்பெண்ணுடன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சாட்டிங் செய்தேன்.. ஊரே என்ன செருப்பால் அடித்ததே, ஏன்?

நான் கேவலமாக திட்டும் இன்னொரு எழுத்தாளனுக்கு (உத்தமன்) மட்டும் எப்படி 100 பேர், 150 பேர் என வாசகர் கூட்டங்களுக்கு வர தயாராய் இருக்கிறார்கள்? நான் வாசகர் கூட்டம் போட ஒவ்வொருவன் காலையும் (நாகரீகம் கருதி கால்) பிடித்து உருவ வேண்டியிருக்கிறதே..

பங்குனி சம்பல் செய்வது எப்படி என்பதை தானமாக கொடுத்தவனிடமே கேட்டு தெரிந்துகொண்டு அதையும் பதிவாக்கினேனே, அப்படியுமா என் எழுத்தை வாசித்து தமிழ் வாசகர்கள் மயங்குவதில்லை?

நெய், புளி, மீன், கருவாடு, இப்படி தமிழகத்தில் எங்குமே கிடைக்காத பொருட்களைத்தானே நான் என் வாசகர்களிடம் கேட்கிறேன், அதற்கு ஏன் என்னை பிச்சைக்காரனைப்போல பார்க்கிறார்கள்..?

போன தேர்விலேயே (இதை கடந்த 10 வருடங்களாக சொல்லி வருகிறேன்) என்னை உலகின் உச்ச எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால், என் எழுத்துகளை தீவிர வாசகர்கள்கூட மறுபடியும் அதே அரைத்த மாவா எனக் கேட்டு அழுகிறார்களே ஏன்?

நான் இலக்கியம் படைப்பதாக தீவிரமாக நம்புகிறேனே, ஏன் இந்த நம்பிக்கை வாசிப்பவர்களிடம் இருப்பதில்லை?

காசு இல்லாததால்தானே நான் 10 அப்பிங் போன்ற பார்களில் குடிக்கவும், மோல்வின் உள்ளாடைகளையும் வாங்கி அணிகிறேன்.. சில பல ஆயிரங்கள் மட்டும்தான் செலவு. இந்த செலவில்லாத பொருட்களை வாங்க என் வாசகர்கள் என நம்பும் மூடமக்களிடம் காசு கேட்கிறேன் தவறா?

தமிழ் சமூகம் என்றைக்கு என் எழுத்துகளைப் படித்து திருந்தி என் கணக்கிற்கு இன்னும் சில லட்சங்களை அனுப்பி தமிழ் எழுத்தாளனை வாழ வைக்குமோ, அன்றைக்கே இந்த தமிழ் சமுதாயத்துக்குவிடிவுகாலம்..

கொடுத்த காசை என்ன பேங்கில் போட்டா மகிழ்கிறேன், எழுத்துக்கான மூலப்பொருளைப் பெற தாய்லாந்து அழகிகளிடமும், மசாஜ் பார்லர்களிலும் தேடுகிறேன், இதுகூட தவறா? நான் எவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதுகிறேன் என்பதை முட்டை டிகிரியில் காணலாமே..

இனியாவது வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பட்டியலில் சேரும் தகுதி உடைய எழுத்தாளர்கள் பட்டியலிலாவது என்னைச் சேர்த்து விடுங்கள், சாவதற்கு முன்னர் ஏதேனும் ஒரு பட்டியலிலாவது என் பெயரை பார்க்க ஆசை.

சோகபுரம்
08.06.2014

No comments: