எனக்கு ஒரு ப்ளாக் தொடங்கனும்கிற ரொம்பநாள் ஆசைய அக்டோபர் 2ம்தேதி தீத்துக்கிட்டேன்.. கத்தர்ல இருந்துகிட்டு ப்ளாக் போடறோமே துணைக்கு யாராவது இரு்ப்பாங்களா அப்படிங்க்கிற பயமெல்லாம்
முதப் பதிவு போட்டதுமே ஆதவன கண்ட பனி போல விலகிருச்சி..
அண்ணன்
" ரசிகன்" இருக்காக..
நவீன இளவரசர்
"
பாரதிய நவீன இளவரசன் இருக்காக..
அப்புறம்
"கடகம்" இருக்காக..
அப்படின்னு ஆரம்பிச்சாரு நம்ம ரசிகன். அப்ப நம்ம தனியா இல்லபோலயே.. கும்மி அடிக்க ஏகப்பட்ட பேரு இருக்காக போலன்னு ஆனதுக்கப்புறம்தான் கொஞ்சம் தைரியம் வந்துச்சு.
அப்புறம் ரசிகனோட பல முறை பேசி தொடர்புகள உண்டாக்குனதுக்கு அப்புறம் ஒரு பதிவர் மாநாடு (நாலு பேர் சேர்ந்தா மாநாடுங்கிற தமிழ் கலாசாரத்தை அடியொற்றி...!) போட்ரலாம்னு தீவிரமா யோசிச்சு அப்புறம் ஈகைப் பெருநாள் விடுமுறையில போட்ருவோம்னு தீர்மானிச்சு அப்புறம் பல காரணங்களால அதுவும் முடியாம இப்ப சீக்கிறம் சந்திச்சிருவோம்னு முடிவு செஞ்சிருக்கோம்.
கத்தார்ல எல்லோரும் ஓட்டமா ஓடுற வேலைபாத்தாலும் இந்த ப்ளாக் எழுதுறதுக்கு மட்டு எப்படித்தான் நேரம் ஒதுக்குறங்கன்னே தெரியல. அதுலையும் இந்த கடகம் போடுற பதிவுகள பாத்தா வேலைக்குப் போறாரான்னே தெரியல.. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு பதிவு போடுறாரு.. சரக்கு இருக்கு.. போடுறாரு..
பாரதிய நவீன இளவரசன் -- இதுதான்னு இல்லாம எல்லாத் தலைப்புலையும் எழுதி கலக்குறாரு.. குறிப்பா எழுத்துல ஒரு தனி முத்திரை பதிச்ச லா.ச.ராமாமிர்தத்தோட அஞ்சலியில அவரே கைப்பட எழுதுன கடிதங்கள இணைச்சு நல்ல விதமா பதிஞ்சிருக்காரு
இந்த பதிவுல
ரசிகனோட வலைப்பூவே கலக்கலா அமைச்சிருக்கார். ஆப்பு அடிக்கிறதுலஆரம்பிச்சு, சொந்தக் கதை, விமர்சனம், அட்வைஸ் அப்படி இப்படின்னு எல்லாத்தையும் நல்லா ரசிக்கும்படியா எழுதுறார். இவரோட வாசகர் வட்டம் ரொம்ப பெரிசு போல..
நமக்கு அந்த பிரச்சினை எல்லாம் ஏதும் இல்ல. ஏன்னா சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும். அதனால "ஒண்ணுமே எழுதாம இருக்க ப்ளாக் எதுக்கு" அப்படிங்கிற கமெண்டெல்லாம் அனுமதிக்க வேண்டி இருக்கு. என்னா உண்மையத்தானா சொல்றாங்க.
அடுத்த முறை எப்படியாச்சும் சந்திச்சு எங்க வலைப்பதிவர் மாநாடு பற்றிய குறிப்புகளை அலைகடலென திரண்டு வரப்போகும் உங்களுக்கு வழங்குகிறேன்.
(சிறு குறிப்பு. ரெண்டு பேர் சந்திச்சா அதுசந்திப்பு. மூணு பேர் பாத்துகிட்டு அவங்களுக்கு வலைப் பூவும் இருந்துட்டா அது வலைப் பதிவர் மாநாடு என்பதுதான் பின்நவீனத்துவ கலாசாரம்.)