ஒரு முஸ்லிம் தேசத்திற்க்குண்டான அனைத்து கலியான குனங்களை கொண்ட ஒரு நாடு.. சவுதி அரேபியா நாட்டு நிலப்பரப்பு முடிந்து அதனுடன் தொக்கிக்கொண்டிருக்கும் ஒரு மச்சம் போல இருக்கும் சிறிய நாடு இது.
மொத்த மக்கள் தொகை 9 லட்சம் இதில் உள்ளூர் கத்தாரிகள் 20 % மீதமுள்ளவர் வெளிநாட்டினர். அதில் 10% இந்தியர். 20% இதர அரபு நாட்டு மக்கள் மற்றவர்கள் 50%. உலகில் எரிவாயு அதிகமுள்ள நாடுகளில் முதன்மையானது.
*மொழி *:
அரபி, ஆனால் ஆங்கிலம் பரவலாக பேசப்படும் மொழி என்று கூறப்பட்டாலும் போலிஸ், மற்றும் இதர அரசு அலுவலகங்களில் மண்டூப் எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லாமல் போனால் ஒன்னும் நடக்காது. நீங்கள் ஏதாவது சொல்லிகொண்டிருப்பீர்கள் அவரும் ஏதாவது சொல்லுவார். இறுதியில் கைகுலுக்கிவிட்டு திரும்பி வரவேண்டியதுதான்.
*மதம்:*
இஸ்லாம் மட்டுமே. பிற மத வெறுப்பு 2005 வரை இருந்து தற்போது குறைவு. (சிலுவைகள், கிறித்தவ புஸ்தகங்கள், சாமி போட்டோ, டாலர், விபூதி, குங்குமம், இந்து கடவுள் படமிட்ட புத்தகங்கள் எல்லாம் விமான நிலையத்திலேயே ஒரு காலத்தில் பிடுங்கிக் கொண்டிருந்தனர். தற்போது கடைகளில் பகிரங்கமக விற்பனையாகிறது.) ஒரு சர்ச் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ( தற்போது வேலை நடப்பதில்லை. ஏனெனத்தெரியவில்லை) இந்து கோயில் கட்ட இன்னும் அனுமதி கேட்டு வின்னப்பம் கூட அனுப்பவில்லை.
*தொழில்:-*
வேகமாக கார் ஓட்டி தினமும் 1 கத்தாரியாவது அல்லது கத்தாரியால் ஒரு வெளிநாட்டுக்காரனாவது சாதல்.
மீதமுள்ள நேரத்தில் பனி செய்தல். எக்ஸ்பாட்ஸ் எனும் நாங்கள் வெள்ளிக்கிழமை கூட அலுவலகத்தில் வேலை செய்தல்.
மற்றபடி இருக்கும் என்னைய் மற்றும் எரிவாயுவை வெள்ளைக்காரன் பிரித்தெடுக்க கத்தாரிகள் உள்ளுர் ஷேர்மார்க்கெட்டில் அதன் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என பார்ப்பது.
*இதர வேலைகள். *
வெளிநாட்டிலிருந்து புதிதாய் கம்பெனி ஆரம்பிப்பவர்க்கு ஸ்பான்சர் ஆக இருத்தல். ( அவன் சொல்லும் இடங்களில் கையெழுத்திடுதல், விசா வாங்க உதவுதல், கம்பெனியின் முகமாக இருப்பது.- பலசமயங்களில் அதுவே வில்லங்கமாகவும் முடியும்)
*பொழுதுபோக்கு:-*
கத்தாரிகளின் பொழுதுபோக்கு குட்டி குட்டி படகுகளை எடுத்துக்கொண்டு நடுக்கடலில் இருந்து விட்டு வருவது.
பாலைவனத்தில் கழுகுகளை பறக்க விட்டு மற்றும் போட்டிகள் வைத்து பொழுது போக்குவது.
அவ்ர்களின் நிரந்தர பொம்மையான படகு கார்களை அபாயகரமாக ஓட்டி மற்றவர்களை பயமுறுத்தி ஓடச்செய்வது. விபத்தில் சிக்குவது மற்றும் விபத்து உண்டாக்குவது.
ஆங்கில சினிமாக்களை அரபி சப்டைட்டிலுடன் பார்ப்பது, அதுவும் தியேட்டரில்.
*பார்க்கவேண்டிய இடங்கள்:-*
01. கார்னிச் எனப்படும் கடற்கரை.
02. டியூன் ட்ரைவெனப்படும் பாலைவன பயனம். ( 4 x 4 வண்டிகளில் பாலைவனத்தில் உலவுதல்)
03. புத்தம் புதிதாய் ஜொலிக்கும் ஷாப்பிங் மால்கள்.
04. நல்ல சாலைகள் என எழுத் ஆசைதான்.. ஆனால் இன்னும் 2 வருடம் கழித்து எழுதினால் சரியாக இருக்கும். எனவேதான் எழுதவில்லை.
05. போஸ்ட் ஆபிஸ். ( நிஜமாகவே ப்ரொபஷனல் இதில் இவர்கள், மற்றும் போஸ்ட் ஆபிஸும் மிக அழகாய் வைத்திருப்பார்கள்)
மேற்கூறியவைகள் மட்டுமே என்னை கவர்ந்தது இந்த இரண்டாண்டு காலத்தில்..
*சட்டம் ஒழுங்கு:-* **
பொதுவாய் அமைதியான நாடு.. அவ்வப்போது போதை மருந்து விற்றவர் பிடிபட்டார் எனும் செய்திகளும், வெளிநாட்டவர் செய்யும் கூட்டு உடலுறவு, நேபாளி ஒருவனை இரண்டு தாய்ல்லாந்து மக்கள் சேர்ந்து கொன்று தின்று விட்டதும் (இது செய்தாள்களில் வரவில்லை), ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான சண்டைகள் அவ்வப்போது கொலைகள், சில சமயங்களில் ப்ரபாகரன் குழுவுக்கும், கருனா குழுவுக்குமான சண்டைகள் இதெல்லாம் அவ்வப்போது வந்து போகும் விஷயங்கள்.
தவிர மற்றபடி இந்த் ஊர் ராஜா எந்த எந்த நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்,, புதிதாய் ஏது சட்டம் வந்ததா என விஷயங்கள் தவிர சாதாரனமான விஷயங்களே செய்திதாழ்களில் இருக்கும்.
விபச்சாரம்:-
துபாய் போல இல்லவிட்டாலும் பரவலாக உள்ளது. ஷெராட்டன், ஓயசிஸ், சோபிடெல் போன்ற ஓட்டல்களில் மாலை வந்தாலே சீன மற்றும் பிலிப்பினோ பென்கள் அழைப்புக்கு காத்திருப்பதைக்கானலாம்.
விமான நிலையத்தை ஒட்டிய ஓட்டலில் பாகிஸ்தானி பென்கள் மாமாக்களுடன் இருப்பர். இரவு 9 மனியிலிருந்து காலை 2 மனிவரை கார்கள் வருவதும் போவதும் பென்கள் கார்கள் மாறி அமர்வதும் தொடரும். இது தவிர ஷேக்குகளுக்கு சப்ளை செய்ய என பாலஸ்தீன, எகிப்திய, சிரிய பென்கள். இவர்களுக்கென தனி இடம். மொத்தத்தில் எல்லாம் கிடைக்கும்..
சினிமா:-
தமிழ் சினிமா அவ்வப்போது வரும்.. ரஜினி படமென்றால் 15 நாட்கள் வரை ஓடும். பிற படங்கள் 4 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஓடும்.. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரும். தோஹா சினிமா, கல்ஃப் சினிமா என்ற இரு தியேட்டர்களில் மட்டும் ஆங்கில படங்களுடன் இந்திய படங்களும் ஓடும். இலங்கை தமிழர்களும் மலையாளிகளும் நம் தமிழ்நாட்டு ரசிகப்ப் பெருமக்களும் படம் பார்க்கிறார்கள். சிவாஜி படம் வெளிவந்து இரண்டாவது நாள் போயிருந்தேன்.. இலங்கை தமிழர்களின் விசில் மற்றும் கைதட்டல் சத்தத்தில் பாதி படம் பார்க்க முடியவில்லை. இதே போன்றுதான் சந்திரமுகி படத்திற்க்கும். இருப்பினும் பொழுதுபோக இங்கு இருக்கும் ஒரே வடிகால் சினிமா மட்டுமே. ( தியேட்ட்ரில் இருக்கும் கத்தாரிகளுக்கு ( வேலை செய்யும்) இந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது இவர்கள் இப்படி ஆர்ப்பாட்டமாய் படம் பார்க்கிறார்களே என அடிக்கடி எட்டிப்பார்ப்பதோடு சரி.
உணவு வகைகள்::-
அரபு உனவுகள் சுவைத்துப்பார்க்க அசைவம் சாப்பிடுபவராய் இருக்க வேண்டும். மற்றபடி அரபிய ரொட்டியாகிய குப்புஸ் அவ்வப்போது சாப்பிடுவதுண்டு. அனைவருக்கும் உனவு கிடைக்கவேண்டும் என்பதற்க்காக அதற்க்கு அரசு மானியம் வழங்குகிறது. ஒரு ரியாலுக்கு ஆறு குப்புஸ் கிடைக்கும். பாகிஸ்தானியர்கள் 1 பாக்கெட் வாங்கி 1 ரியாலுக்கு தயிர் வாங்கி மதிய உணவை முடித்து விடுவார்கள்.
இந்திய பள்ளிகள்:-
அரபிய பள்ளிகளுடன் எனக்கு நேரடி பரிச்சியம் கிடையாது. ஆனால் இந்திய பள்ளிகளில் அரபு குழந்தைகள் படிப்பது அதிகரித்து வருகிறது. நமது இந்திய பள்ளிகளில் குறிப்பிட தகுந்தது பிர்லா பப்ளிக் ஸ்கூல், மற்றும் தோஹா மாடர்ன் இந்தியன் ஸ்கூல் இவையிரண்டும் குறிப்பிட தகுந்தது. நல்ல படிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளை ஊக்குவிப்பர். மற்றபடி .
தென்னிந்தியர்களுக்கு அரபி மொழியின் அரிசுவடி மட்டுமே கற்றுத்தருகிறார்கள். அதை ஆப்ஷனலில் விட்டும்விடலாம். ஆனால் அரபி குழந்தைகளுக்கு ஆங்கில மொழிக்காக மட்டுமே நமது இந்திய பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பாடத்திட்டம் இந்திய சிபிஎஸ்சி திட்டம் எல்லா பள்ளிகளிலும். அமெரிக்கவின் பெரும்பான்மையான பல்கலை கழகங்கள் தனது கிளையை இங்கு வைத்துள்ளன
இந்திய தூதரகம்:-
இந்திய தூதரகம் பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும்.
மிக மிக அன்பான அலுவலர்கள். படிக்காத பாமரன் போனாலும் உதவி கிடைக்கும். ஸ்பான்சர்களால் கைவிடப்பட்ட இந்தியர்களுக்கு உணவும் அவர்களுக்குண்டான பனத்தை பெற்றுத்தருதல் என மும்முரமாக இயங்குகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, சுதந்திர தின விழா போன்ற நாட்களில் கடைநிலை பனியாளர்களை அழைத்து உணவு, கலை நிகழ்ச்சிகள், பரிசு பொருட்கள் என கொடுத்து அவர்களுக்கு இந்திய தூதரகம் பற்றிய தகவல் கொடுத்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை அனுகலாம் என நம்பிக்கை அளித்து அனுப்புகிறார்கள். இது போன்ற நாட்களில் குறைந்தது 3000 பேராவது கூடுகிறார்கள்.
அதற்க்குண்டான பனத்தை அவர்கள் செய்யும் ஒவ்வொரு சேவைக்கும் 1 ரியால் கூடுதல் வசூலித்து இண்டியன் கம்யூனிட்டி பெனெவேலண்ட் ஃபண்ட் என நிதியை உருவாக்கி உதவுகிறார்கள். இந்திய தூதுவர் பெயர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப். மிக அமைதியான அனைவருடனும் எளிதில் பழகும் ஒரு மனிதர். நான் அவரை இருமுறை சந்தித்திருக்கிறேன். என்னைப்பற்றி, எனது வேலை பற்றி எனது குடும்ப சூழ்நிலை பற்றி விசாரிப்பார். வேலை எப்படி இருக்கிறது மற்றும் நமது தூதரகம் வேறு என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என பலதும் விசாரிப்பார்..
கத்தாரின் மிக முக்கியமான ஒரு விஷயம் இவர்கள் அமேரிக்காவுக்கு எழுதி தந்திருக்கும் அடிமை சாசனம்..
நான் வேலை பார்க்கும் கம்பெனியின் பின்புறத்தில்தான் அமெரிக்க தளம் உள்ளது. அதனுள் உள்ளூர் போலிஸ்காரன் கூட போக முடியாது. ( இந்த ஊர் போலிஸ் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் நீதிமன்றம் மாதிரி. விபத்துக்களில் சம்பவ இடத்தில் உள்ள போலிஸ்காரர் சொல்வதுதன் தீர்ப்பு.எனவேதான் போலிஸ்காரர் கூட என்றேன்)
கிட்டதட்ட 5 கிலோமீட்டர் நீளமும் 2 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு தளம் இது. அதன் உள்ளேயே விமான ஓடுதளம், பயிற்சி களம் எல்லாம் உள்ளன. அணாமத்தான விமானங்கள் வரும், போகும். கத்தார் ராணுவத்திற்க்கோ உள்ளூர் போலிஸுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. அவ்ர்கள் எதுவும் கேட்கவும் முடியாது. அமெரிக்காவிலிரிந்து வரும் சரக்குகள் நேரடியாக அவர்கள் விமான நிலையத்திலேயே இற்க்கி கொள்வார்கள். கடல் மூலம் வரும் சரக்குகளுக்கென தனியாக ஒரு போர்ட்டும் உள்ளது. கிட்டத்தட்ட 5000 வீரர்கள் வரை இருக்கலாம்.
கத்தாரின் எந்த சட்டமும் அவர்களை கட்டுப்படுத்தாது. கத்தாருக்கென குறிப்பிடிம்படி ரானுவம் எதுவும் இல்லை, மினிஸ்ட்ரி ஆஃப் டிபன்ஸ் இருந்தும்கூட. மினிஸ்ட்ரி ஆஃப் இண்டீரியர் என்ற ஒரு அமைச்சகம் மட்டும் எல்லா சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களையும் மற்றும் பந்தோபஸ்துக்களையும் கவனிக்கிறது. அமேரிக்காவின் கப்பல்கள் மற்றும் ரானுவ வீரர்கள் கத்தாரையும் சேர்த்து காக்கிறார்கள். இருக்கும் முந்தைய ரானுவ வீரர்கள் அமெரிக்க தூதரகம் மற்றும் ரானுவ தள பாதுகாப்பில் இருக்கிறார்கள். பொதுவாக கத்தாருக்கு எந்த எதீரி நாடும் கீடையாது. மேலும் உலக ரௌடி இங்கிருக்கும்ம்போது எதிரிகள் வர வாய்ப்பும் இல்லை.
கலை மற்றும் நுன்கலைகள்:-
இங்கு கத்தாரில் ஆர்ட் கேலரி மற்றும் ஆர்ட் எக்க்ஷிபிஷன் ஒன்றும் நடந்ததாய் எனக்கு தெரிந்து இல்லை. இவர்களது நிரந்தர கத்தார் தேசிய மியுசியம் மற்றும் கத்தார் ஆயுத மியுசியம் என இர்னடு உள்ளது. தேசிய மியுசியத்தில் அவர்களது பரம்பரியம் மற்றூம் உடைகள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தர் எப்படி இருந்தது என்ற போட்டோக்கள் மற்றும் சில நானயங்கள் இருக்கும்.
ஆயுத எக்ஷிபிஷனில் அவர்களது ஆதி காலத்து ஆயுதங்களான துப்பாக்கிகள், கூர்வாள்கள், பீரங்கிகள் மற்றும் சில கருவிகளிருக்கும்.
இது தவிர அவ்வப்போது கத்தாரிலுள்ள ஆர்டிஸ்டுகள் வரைந்த படங்கள் மேற்கூறிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் காட்சிக்காக வைக்கப்படும். அவ்வளவே. அதிக பட்சம் 15 முதல் 20 படங்கள் இருந்தால் அதிகம்.
இவர்களது படகு கட்டும்திறன், மற்றும் வெள்ளியில் கலைப்பொருட்கள் செய்ய்தல் மற்றும் பிரம்பு, துனி வேலைப்பாடுகள் எல்லாம் பிரசித்தம். இதுபோன்ற உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கு தனியாக ஒரு சூக் எனப்படும் மார்கெட் வைத்துள்ளார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கத்தார் எப்படி இருந்ததோ அதேபோல அமைத்துள்ளார்கள். பாரம்பரியத்தை காக்கும் முயற்சியாக இதை கொள்ளலாம்.
விளையாட்டு & ஆசிய விளையாட்டு போட்டிகள்:-
ஆனால் கத்தாரை விளையாட்டு மற்றும் முக்கிய சந்திப்புகளுக்கான இடங்களாக மாற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆசிய விளையாட்டு போட்டி அவர்களது ஒருங்கினைப்பு திறனுக்கு ஒரு சான்று.
என்னென்ன போட்டிகள் நடந்தது எத்தனை நாடுகள் கலந்து கொண்டன எத்தனை அனிகள் கலந்துகொண்டன எல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
கத்தார் அரசு இந்த விளையாட்டு போட்டிகளுக்காக கிட்டத்தட்ட 7000 பேருந்துகளும் 5000 கார்களும் பயன்படுத்தின. 9 புதிய விளையாட்டு அரங்கங்களும் உருவாக்கப்பட்டன. ஒவ்வோரு விளையாட்டு வீரருக்கும் தனித்தனியான அட்டவனை அவர்களுக்கென தனித்தனி உதவியாளர்கள் மேலும் விளையாட்டுத்திடலில் உதவியாளர்கள் என விளையாட்டு வீரர்களைவிட உதவியாளர்கள் மற்றும் ஒருங்கினைப்பாளார்களை அமர்த்தி எந்த வித குளறுபடிகளுமின்றி நடத்தினர்.
வீரர்கள் தங்க 5 நட்சத்திர வசதிகள் கொண்ட விடுதிகளை ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என அமைத்தனர். மேலும் வசதிக்காக 5 நட்சத்திர வசதிகள் கொண்ட 7 கப்பல்களை தோஹா துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.
அனைத்து நாட்டு வீரர்களும் ஒட்டுமொத்தமாக பாராட்டினர். நமது இந்திய துப்பாக்கி சுடும் வீரர் (ராதோர்) மட்டும் ஒருங்கினைப்பாளர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என குற்றம் சாட்டியது மற்றும் கொரியாவைச்சேர்ந்த குதிரையேற்ற வீரர் களத்தில் இறந்தது தவிர மிக சிறப்பாக நடந்துமுடிந்த விளையாட்டு நிகழ்ச்சி இது.
ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வும் மற்றும் முடிவு நிகழ்ச்சிகளும் இதுவரை எந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் நடந்திராத அளவு மிக மிக பிரம்மாண்டமாக நடந்தது. சீனா இதைவிட சிறப்பாக நடத்த முயலப்போவதாக சொன்னதே இதன் பிரம்மாண்டத்தை உனர்த்தி இருக்கும்.
ஒரு நல்ல தலைமையைக்கொண்ட சரியான பாதையில் அடிபோடும் ஒரு மத்திய கிழக்கு நாடு இது...
11 comments:
உங்கள் பார்வையில் கத்தார் அறிமுகம் அருமை.
எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
குறிப்பாக "ண".
ஷிப்ட் அழுத்தி பயன்படுத்தினால் "ன" என்பது "ண" ஆகி விடும்.
பிரிவியூ பார்த்து விட்டு , பின்னர் பப்ளீஷ் செய்யவும்.
Nice one, you could have split this into two or three smaller posts.
Prakash and Padmakishore thanks for visit and your comments. It is my 4th day in Blogging. I will change accordingly.
கத்தாரைப் பற்றி மிகச்சிறப்பாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள். நன்றி!!!
வெயிலான்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Nanba,
Neengal nere irunthu vivaripathu polave irunthathu. Ezhiya urai nadai. Men-melum sirakka vazhthukal.
Raj
பாலைவனத்தில் இருக்கும் கானகத்தாரே..
எனக்கு தெரியாத கத்தாரின் மறுபக்கத்தையும் அலசியிருந்திங்க...நல்லாயுருந்தது..முதலில் கடகம்,அப்புரம் நீங்க, ஏதேது போற போக்கப் பாத்தாக்கா... நாம சீக்கிறமே கத்தாருல "வலைப்பதிவர் மாநாடு போடலாம் போலிருக்கே.. அட நானும் இப்ப கத்தாருலதாங்க குப்பை கொட்டிகினு இருக்கேன்.ரொம்ப பக்கத்துல இருக்கோம்..அடிக்கடி..வாங்களேன் என் வலை வீட்டுக்கு..உங்க கருத்தயும் கேக்க ஆவலாயிருக்கு.
அன்புடன் ரசிகன்.
//சிவாஜி படம் வெளிவந்து இரண்டாவது நாள் போயிருந்தேன்.. இலங்கை தமிழர்களின் விசில் மற்றும் கைதட்டல் சத்தத்தில் பாதி படம் பார்க்க முடியவில்லை//
முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கணும் சார் நீங்க... அட, டிக்கெட்டுக்கு நின்று க்யூவைப் பார்க்கணுமே... நம்ப ஊரை நியாபகப் 'படுத்தும்' நிகழ்வுகள். :)
மொழி என்ற தலைப்பின் கீழ்... ஹிந்தி மற்றும் மலையாளத்தையும் போட்டுக்கலாம் சார். அலுவலகத்தில், சக ஊழியர்கள், டிரைவர்கள், கடைநிலை ஊழியர்கள் போன்றோர் வட இந்தியர்களாகவோ வங்கதேசத்தினராகவோ, பாக்கிஸ்தானியராகவோ இருப்பின் இந்தி கற்றுக்கொள்ள வசதியாகிவிடுகிறது; தவிர நிறைய மலையாளத்திலும் சம்ஸாரிக்க நேர்கிறது.
கத்தார் பற்றிய விவரங்களை மிக அழகாகத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி. மேலும், 'விண்ணை எட்டும்' வீட்டு வாடகை ஏற்றத்தையும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் அருமையான பதிவு ஐயா.
கத்தார் பற்றிய உங்களின் செய்திகள் பயனுள்ளதாக இருந்தது; அங்கு உங்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
//நேபாளி ஒருவனை இரண்டு தாய்ல்லாந்து மக்கள் சேர்ந்து கொன்று தின்று விட்டதும் (இது செய்தாள்களில் வரவில்லை),//
இல்லை நண்பரே.நான் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் தாய்லாந்து அல்ல.வியட்னாம் தேசத்தவர்கள்.
உங்கள் பதிவு அருமை.தெரியாத விடயங்களைத் தெரிந்துகொண்டேன்.
மியூசியம் எவ்விடத்தில் உள்ளது? வெள்ளிக்கிழமை திறந்திருக்குமா?
ஒருமுறை போய்வரவேண்டும்.
எம்.ரிஷான் ஷெரிஃப், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
வியட்நமிய மக்கள்தான் அது. எழுதும்போது தவறாக வந்துவிட்டது. தகவலுக்கு நன்றி நன்பரே.
அன்புடன், ஜெயக்குமார்
Post a Comment