Friday, March 28, 2014

ஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...
ஞாநியின் இட்லிவடைக்கான பேட்டியில் தெரிந்த ஒரே விஷயம் அரசியல்வாதியாகி விட்டால் யாரையும், எதையும் ஆதரிக்கும் தைரியமும், தலைவர் என்ன செய்தாலும் அதற்கான சப்பைகட்டும் கட்ட தெளிவும் வந்துவிடும் என்பதே.

ஞாநி சங்கரனைப் போன்றோர் அரசியலுக்கு வந்து முகமூடி இழப்பது நல்லது. அவரையெல்லாம் அறிவுஜீவி என சொல்வோர்களுக்காவது உண்மை புரியும்.

இன்னும் அவரை எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லும் அளவு ஞாநி என நம்பிக்கொண்டிருப்போருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.. இந்தாளையா நாம கருத்து கந்தசாமி என நினைத்துக்கொண்டிருந்தோம் என..

அந்தவகையில் ஞாநி சங்கரன் அரசியலுக்கு வந்ததை அன்புடன் வரவேற்கிறேன்.. 

---------------- 


 ட்ரெயின்ல போனா கேமெரா


சும்மா கைய பொடனியில கட்டிகிட்டு ஹாயா உக்காந்திருந்தா கேமெரா

ரோட்டுல உக்காந்தா, படுத்தா, நடந்தா கேமெரா,..

பல்லுவெளக்குனா, சாப்டா, கைகழுவுனா கேமெரா

நேத்தைக்கு காசியில குளிக்கிறாருன்னு ஒரு படம்..

அப்புறம் பட்டைய போட்டு அண்ணாமலை மாதிரி ஒரு படம்..

இன்னும் ரெண்டே ரெண்டு படம்தான் வரலை.. அதப்போட்டுட்டீங்கன்னா அர்விந்த கேசரிவாலு ஒரு முழு திறந்த புத்தகமா ஆகிருவாரு..

மீடியா மக்களே கொஞ்சம் பாத்துச் செய்யுங்க..


(26.03.2014 at Face Book)

அரசியல் போலிகள்.. கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகியின் போலி மதச்சார்பின்மை

Banu Gomes தங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திரு.வாசுகி அவர்களின் மதச்சார்பின்மை மஹாத்மியம்... 

இந்துக்களை எவ்வளவு முட்டாள்களாய் நினைத்திருக்க வேண்டும், இந்துக்களுக்கு எதிராய் புத்தகம் எழுதிவிட்டு இந்துக்கள் வாழும் பகுதியில் சென்று வாக்குக்கேட்க...?

இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளும், கொலைகளும், லவ் ஜிகாத்துகளும் இந்துக்கள் செய்ததா? அதைப்பற்றி இந்த வாசுகி அம்மையார் என்ன எழுதி இருக்கிறார்கள் இந்தப்புத்தகத்தில் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

மசூதிக்குள் சென்று உங்களுக்கு ஆதரவாய் புத்தகம் எழுதி இருக்கிறேன் எனச் சொல்லி வாக்கு கேட்பார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

சர்ச்சில் சென்று ஆசி பெறுவார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

இந்துக்களை கேவலப்படுத்தியும், அவர்களின் நம்பிக்கையை உதாசீனப்படுத்தியும்விட்டு, வாக்குகள் கேட்க மட்டும் 32 பல்லையும் இளித்துக்கொண்டு வரும் இவர்களுக்கும், நாம் பொதுவாய் ஏமாத்துப்பயக, ஏமாத்தும் பொம்பளை எனச் சொல்லும் மக்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மை என்றால் அந்த எளவே எனக்கு வேண்டாம்..h


ஈராக்கிய தேர்தல் குறித்து எனது பார்வை..

அடுத்த மாதம் ஈராக்கில் தேர்தல்.. தற்போதைய பிரதமரான நூர் அல் மாலிக்கி தலைமையில் ஸ்டேட் ஆஃப் லா என்ற கூட்டணி, முவாதீன் என்றொறு கூட்டணி இன்னொன்று அல் சாதர் என்ற ஒரு கூட்டணி. இந்த மூன்று கூட்டணிகள் மட்டுமே கொஞ்சம் பலமான அணிகள். இதுதவிர நிறைய சில்லரைக் கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் உண்டு.

உண்மையான போட்டி ஷியா அரபிகளுக்கும், சன்னி அரபிகள்க்கும், குர்திகளுக்குமே. வேறு வேறு அரசியல்கட்சிகளின் பெயரில் போட்டி இடுகின்றனர் அவ்வளவே.

தேர்தல் வரப்போவதின் ஒரே அறிகுறி 10 அடிக்கு 12 சைஸுல நூர் அல் மாலிக்கியோட போட்டோ மட்டும் ஒட்டி ஈராக் மேப் போட்ட ஒரு தட்டி. லைட் போஸ்ட்டுகள்ல ஏ3 சைஸ்ல போஸ்டர். நம்மூர் போல ஜீப்புகளிலும் கார்களிலும் மைக் கட்டிக்கொண்டு அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களேன்னு சொல்லிகிட்டு வாரதெல்லாம் இல்லை. பெரும்பாலான வாக்குகள் யாருக்குப் போட வேண்டும் என்பதை மதத்தலைவர்கள் சொல்லி விடுவார்கள். ஷியா வேட்பாளர்களுக்கு அவர்களின் மசூதிகள், சன்னி வேட்பாளர்களுக்கு அவர்களின் மசூதிகளில் உத்தரவு வந்துவிடும்.

பொதுஜனம் ஈராக்கியர்கள் எல்லோரும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் ஆள்பவர்கள்தான் கொள்ளையடித்து வீட்டுக்கு கொண்டு செல்லப்போகிறார்கள். நமக்கு என்னத்த கிடைக்கப்போகுது என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

நூர் அல் மாலிக்கி பொதுவாக நன்றாக ஆள்வதாக பாஸ்ரா மக்கள் நம்புகிறார்கள். (நான் இருக்கும் பாஸ்ராவில் 90% ஷியாக்கள்) நூர் அல் மாலிக்கியும் ஷியாதான். அதுதான் நாட்டின் இன்றைய தலைவலியின் முக்கிய காரணம். சன்னிகள் நூர் அல் மாலிக்கியை ஏற்றுக்கொள்ளவில்லை. சதாமைப்போல ஒரு சன்னிதான் பிரதமராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனாலேயே தினமும் அரசாங்கப் படைகள் வீக்காக இருக்கும் இடத்தில் தாக்குதல்களை நடத்தி 100 -200 பேர்களைக் கொன்று அந்த இடத்தில் சன்னிகளின் ஆட்சியையும், ஆதிக்கத்தையும் நிறுவுகின்றனர். இதில் ஜோக் என்னவென்றால் ஷியாக்களும் சன்னிகளின் பார்வையில் காஃபிர்கள். எனவே இரண்டாம்தர மரியாதைதான் அவர்களுக்கு.

கிட்டத்தட்ட நம் நாட்டில் நடப்பதைப்போலத்தான். மைனாரிட்டிகளுக்கு எப்படி நாட்டை ஆளவேண்டும், முழுதும் இஸ்லாமிய / கிறிஸ்தவ மயமாக்கிட வேண்டும் என துடிக்கிறார்களோ அதேபோல ஈராக்கின் மைனாரிட்டியான சன்னிகள் ஈராக்கை சன்னிகள் ஆளும் நாடாக்க வேண்டும் என விரும்புகிறார்கள், அதுவும் வன்முறையின் மூலம். இந்த தேர்தல் நடக்கும்போது குறைந்தது 3000 பேர் இறக்க நேரிடலாம்.

நம்ம நாட்டின் ஜனநாயகம் மட்டும் உலகின் எந்த மூலையிலும் வரப்போவதில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒருவருக்கொருவர் அதிகபட்சம் பொய்ப்புகார்கள், சேற்றைவாறி இறைத்தல் கேரக்டர் அசாசினேஷன் தாண்டி ஆட்களைக் கொல்லும் அளவு இன்னும் முன்னேறவில்லை. கரன் தப்பார் போன்றோர் மட்டும் அவ்வப்போது ~மோடியை திடீரென அகற்றிவிட்டால்~ என திகில் ஸ்டேட்மெண்ட் மட்டும் விடுவார்கள்.

இப்படி இந்த நிலைமையில் நம்ஜனநாயகம் இருப்பதே நமக்கெல்லாம் பெருமை.

ஈராக்கில் எதற்கு ஆட்சியை பிடிக்க இவ்வளவு போட்டியும், கொலைகளும், வெடிகுண்டுகளும் என்றால் ஈராக்கில் இன்றைய தேதிக்கு ஒரு ப்ராஜக்ட் கிடைத்தால் அதன் மதிப்பை குத்துமதிப்பாக 100 மில்லியன் டாலர்கள் என வைத்துக்கொண்டால் அந்த ப்ராஜக்டின் உண்மையான மதிப்பு 25 மில்லியன்மட்டுமே இருக்கும். மீதம் 75 மில்லியன் டாலர் டெண்டர் ஸ்டேஜிலிருந்து ப்ராஜக்டை முடித்து கமிஷனிங் செய்வதற்குள் பல கம்பெனிகள் பல நிலையிலும் பல அதிகாரிகளுக்கு நீங்கள்கொடுக்க வேண்டியிருக்கும் இந்தப்பணத்தைக் கைப்பற்றுவோர்களிடமே அதிகாரம்.

இதை யார் எடுத்துக்கொள்வது என்பதற்குதான் ஈராக்கில் தேர்தல்..