Tuesday, December 4, 2007

பீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.

பெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வித்தியாசமாய் யாருமே தொட விரும்பாத " மல "த்தை தனது கதைப் பொருளாய் வைத்துள்ளார்.

கதைத் தொகுப்பில் எங்கு காணினும் மலம், மலம் மலம் மட்டுமே. அதை கதை மாந்தர் வழியாக எடுத்துவைக்கிறார்.

வேக்காடு கதையில் ஒரு கிராமத்தின் கீழ்மட்ட மக்களின் பிரச்சினைகளை குறிப்பாக தண்ணீருக்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் கால் கழுவக்கூட தண்ணி இல்லாமல் ஊரே கஷ்டப்படும் விதத்தையும் அழகாக விவரித்திருப்பார். அந்த ஊரை பற்றி விவரிக்கும்போது கண்முன் ஊரைக்கொண்டுவந்து விடுகிறார். தனியாக வாழும் கிழவியின் தண்ணீருக்கான தவிப்பும் ஊரே தண்ணீருக்காக கஷ்டப்படும்போது கிழவியை யாரும் கண்டுகொள்ளாமல் விடுவதும் கிழவியின் நிலைமையை அவள் வாயாலேயே சொல்லவைத்திருப்பதும் நல்ல உத்திகள். அடித்தட்டு மக்களின் சமூக கீழ் நிலை நன்றாக விவரிக்கப்பட்டு அவர்கள் எப்படி மேல்குடி மற்றும் உயர்குடி மக்களால் குடிதன்னிருக்குக்கூட அல்லாடவிடப்படுகிறார்கள் என்பதையும் நன்கு விவரித்துள்ளார். உயர்சாதி ஆள் பேசும் வார்த்தைகளும் அவரது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகக் கூடாது என்பதற்காக தண்ணிரில் மலத்தை கலக்கும்படி செய்வதும் இன்றைய குக்கிராமங்களின் நிலையை உள்ளது உள்ளபடி சொல்கிறது.

பீவாங்கியின் ஓலம் --

இதில் ஒரு கிராமத்துப் பெண்ணின் நகர வாழ்க்கையில் ஏற்ப்படும் அனுபவங்களையும், வீட்டுக்குள்ளேயே கழிப்பிடம் இருக்கும் என்ற விஷயத்தைக்கூட அறியாமல் இருக்கும் இடமும், நகரத்தில் சோறு ஆக்க அரிசி களைந்த நீரை மாடு வைத்திருப்பவர்கள் எடுத்துப்போக வருவார்கள் என காத்திருப்பதும் பின்னர் இப்படியே சேர்ந்த கழுநீரினாள் வீட்டுக்குள் ஏற்படும் புளித்த வாடையும் அதை கக்கூசிலேயே கணவன் கொட்ட அது விழுங்குவதாக கற்பனை செய்து கொண்டு பயப்படுவதும், அது என்றாவது ஒருநாள் தன்னை விழுங்கிவிடும் என கற்பனை செய்துகொண்டு பயந்து சாவதையும் பெருமாள் முருகன் நன்கு விளக்கியுள்ளார்.

கடைசி இருக்கை --

ஒரு சிறுவனுக்கு பேருந்தில் ஏறிய பின்பு மலம் வருவதும் ஓட்டுனரை கெஞ்சி முடியாமல் போகும்போது பேருந்திலேயே சிறுவன் கழித்து வைப்பதும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை இன்னொரு பயணியின் பார்வையிலிருந்து சொல்கிறார்.

அத்தை வீட்டுக் கோடை -

இதில் எப்படி கீழ் நிலை மக்களின் உறவுமுறைகள் அவர்களுக்குள்ளேயே இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இவற்றை விளக்கியுள்ளார். அதில் ஒரு சிறுவன் அத்தை வீட்டுக்குப் போவதும் அங்கு அவனது வீடைவிட வசதியாக உணவும், இடமும் , விளையாட ஆட்களும் இருப்பதும், முதலில் ஆசையாக கூப்பிட்டுவந்த அத்தை அவனை வெளியேற்ற முயல்வதும் என அவர்களது மன ஓட்டங்களை அழகாக பதிவு செய்துள்ளார். இதிலும் சிறுவன் அத்தை வீட்டில் இருந்து கழிப்பறையில் அசுத்தம் செய்வதாக ( உடல் நலமில்லாததால்) கூறி அம்மாவுடன் அனுப்பி வைக்கப்படுகிறான். அவனது வீட்டிற்கு சென்றபின்பு அவன் அடையும் அமைதியும், அத்தைவீட்டில் கிடைத்த அரிசிச்சோருக்காக ஏங்குவதும் இயல்பாக உள்ளது.

இது தவிர "கருப்பனார் கிணறு"

கதையில் கிணற்று தண்ணீரில் மலம் கழிக்கும் சிறுவனால் ( உண்மையில் அவன் கிணற்றில் மலம் கழிக்கவில்லை. ஆனால யார் அதிகம் மலம் கழித்துள்ளார்கள் என்ற போட்டி வரும்போது கிணற்றில் மலம் செய்ததாக சொல்கிறான், தாங்களே அதிகம் மலம் கழித்ததாக கூறும் நண்பர்களிடம்) இதனால் குடும்பத்திற்கு ஏற்படும் சிரமங்களையும் அவனது அப்பா மாப்பு தரனும் சாமியோவ் என கேட்டுக்கொண்டு அலைய அவனோ அப்பாவின் அடியில்இருந்து தப்பிக்க ஊரைவிட்டே ஓடுகிறான்..

தோழர் பி.எம்.மின் வெற்றி..

இதில் ஒரு கம்யுனிஸ்ட் தோழர் கிராமத்திற்கு பயிற்சிக்காக வருகிறார். நகர வாழ்க்கையில் பழக்கப்பட்டுப்போன அவரால் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தாமல் மலம் கழிக்க வருவதில்லை. அதில் தோழர் பி.எம்.மாக வருபவர் இதெல்லாம் "குட்டி பூர்ஷுவா" மனநிலை என்கிறார். ( அது என்ன குட்டி பூர்ஷுவ என எனக்கும் தெரியவில்லை) இதிலிருந்து விடுபடவேண்டும் எனவும் கூறி அவருக்கு பழக்கம்தான் இதற்க்கு காரணம். தேநீர் குடிக்காமல் இருந்தால் எப்படி வராமல் போகும்.. வந்ததுதான் ஆக வேண்டும் எனக்கூறி இறுதிவரை அவருக்கு தேநீர் வாங்கித்தராமலேயே அன்றைய தினத்தை ஒட்டிவிடுகிறார்.. இறுதியில் " தோழர் பி.எம். ஓரளவு வெற்றி பெற்றார் " என எழுதுகிறார் பெருமாள் முருகன்.



வராக அவதாரம் ..

கிராமத்தில் இருக்கும் ஒருவன் நகரத்திற்கு முதன் முறையாக வேலை விஷயமாய் செல்லும்போது ஏற்படும் அனுபவங்களை குறிப்பாக நகரத்தில் இறங்கிய முதல்நாள் காலைக்கடன்களை முடிக்க படும் அவதிகளையும் அங்கு இருப்பவர்கள் நிர்வானமாக குளிப்பது பற்றியும் கதவைக்கூட மூடாமல் மலம் கழிப்பது பற்றியும் அருவருப்புக் கொள்ளும் ஒருவன் தேவையினால் அவனும் அது போல செய்ய நேர்வதும் பற்றிய கதி இது. வெங்கடேசனும் ஓரு நிமிடம் பன்றியாகிப் போனான் என கதையை முடிக்கிறார் பெருமாள் முருகன்.

கருதாம்பாளை -

கிராமத்தை விட்டே தாண்டாத ஒரு கிழவி மகன் வீட்டில் இருக்க நேர்வதும் அங்கு மலம் கழிக்க வீட்டுக்குள்ளேயே இடமிருப்பதைக் கண்டு அருவருப்படிவதும் பின்னர் பழகப் பழக தனது கிராமத்து வெட்டிலும் அது போல ஒரு கழிப்பறையை உருவாக்கி கொள்வதும்தான் கதை. ஆனால் அந்த கிழவியின் என்ன ஓட்டங்கள் மதிப்பீடுகள் இதுவரை கொண்டிருந்த எண்ணங்களை வசதியாய் இருக்கிறது என்ற காரணத்திற்காக மறந்துவிடுவது என நன்கு சித்தரித்திருக்கிறார்.

சந்தன சோப்பு..

வெளியூரில் பனி செய்யும் ஒருவர் பனி நிமித்தமாய் வெளியூர் செல்லும்போது வழியில் உள்ள உணவகத்தில் நிற்கும்போது அவரது ஊரைச்சேர்ந்த சிறுவனை சந்திக்க நேர்கிறது. அங்கு அவன் கழிப்பறைகளில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வேலையையும், வாங்க சார்.. வாங்க சார் என உள்ளே இருப்பவரை கதவை தட்டும் வேலையயிம் செய்கிறான். முதல் சந்திப்பில் அவன் அவரிடம் எப்படியாவது அவனை ஊரில் கொண்டு போய் விடும்படி கேட்கிறான். பல வேலைகளால் அவனை அடுத்தமுறை கூட்டிப்போவதாக வாகளித்து விட்டு போகிறார். அவன் சொன்ன தகவல்களை வைத்து அவனுக்கு ஏற்படும் மலவாடையைப் போக்க உடனடி தீர்வாக ஒரு சந்தன சோப்பு வாங்கித் தருகிறார். பல விஷயங்களால் இந்த விஷயத்தை மறந்துபோன அவர் மீண்டும் அந்த சிறுவனை அதே உணவகத்தில் சந்திக்கிறார். அப்போது அவன் ஊருக்கு செல்வதில் விருப்பம் இல்லை எனவும் அவனது சேமிப்பிலிருந்து ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து அவன் அம்மாவிடம் சேர்க்கச் சொல்லி விட்டு தான் இதுபோல ஒரு பனி செய்வதைக் அம்மாவிடம் சொல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான். வேலை இருக்குன்னா.. அடுத்து வந்த என்ன பாக்காம போகக்கூடாது என அன்புக் கட்டளை இடுவதுடன், போனவாட்டி நீங்க வாங்கி கொடுத்த சந்தன சோப்பு நல்ல வாசனைய இருக்குன்னா அதத்தான் இப்பவும் போட்டுக்கிட்டிருக்கேன் என ஒரு சிரிப்புடன் பணிக்கு திரும்புகிறான்.. இதில் சிறுவனது மன நிலையும், அவனது வேலை எத்தனை கஷ்டமானது என விவரிக்கும்போதும் பின்னர் தன்னையே சமாளித்து அதே இடத்தில் சீக்கிரம் பொருந்திப் போவதும், அதை எழுத்தில் கொண்டுவந்த விதம் அருமை.

நின்றவண்ணம், கிடந்தவன்னம்

ஒரு கிராமத்தின் ஏரிக்கரையில் குழந்தைகள் விளையாடுவதும் அதனை மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு முளைக்கும் ஒரு குடிசையினால் அவர்களுக்கு அங்கு விளையாட தடை விதிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஒரு சிறுவன் அந்த குடிசையில் நடக்கும் வினோதங்களை ஆர்வமுடன் கவனிக்க பின்னர் அங்கிருக்கும் காளி படத்தை பார்த்ததும் ஏற்படும் அதிர்வினாலும் அந்த காளி உபாசகரை தொடர்ந்து அவருடன் நெருக்கம் ஏற்படுவதையும் அதனால் அச்சிறுவனது தாயார் தனது மகன் காளி உபாசகனாக மாறி அதற்காக மலம் தின்னுவானோ என பயப்படுவதையும் இறுதியில் அச்சிறுவன் உபாசகனாக மாற கிழம்பிவிடுவதியும் குறிப்பால் உனர்த்துகிறார்.

புகை உருவங்கள்

இது ம்லத்தைப் பற்றிய கதை அல்ல. வெளி உலகத்தைப் பார்த்திராத ஒரு சமூகம் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் அவர்களது விவசாயம் பாதிக்கப்படுவதும் அதற்கு கன்னுக்குத்தெரியாத எதிரிதான் காரனம் என அவர்கள் முடிவு செய்ய அந்த எதிரியை அவர்கள் நிழலுருவமாக பார்க்கிறர்கள். பின்னர் ஒவ்வொரு இளைஞனாக ஊரை விட்டுப் போக பெருசுகள் மட்டும் மிஞ்சுகிறர்கள். இக்கதையில் கிராம மக்களின் மனநிலை அவர்களது விவசாயம் பெருகும் போது ஊரைவிட்டு வெளியே சென்றுவந்தவனால்தான் எனவும் அதே விவசாயம் பாதிக்கப் படும்போது ஊரைவிட்டு வெளியே சென்றதுதான் தெய்வகுத்தம் ஆகிவிட்டது எனவும் சிந்திக்கிறார்கள். ஊரைவிட்டுச் சென்றவன் முதலில் நாயகனாகவும் அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், பென்கள் அவன்மீது மையல் கொள்வதும் பின்னர் அவந்தான் இந்த நிலைக்குக் காரனம் என கருதும்போது அவனை வெறுப்பதும் அவனை கொல்ல திட்டமிடுவதுமாக அறியாத மக்களின் மன நிலையை விளக்குகிறார்.

மஞ்சள் படிவு..

ஒரு கிளவியின் வைராக்கியமான வாழ்க்கையில் வயதினால் படிக்கையில் விழ நேர்வதும் முதுமையினால் அவள் அறியாமல் செலையில் மலம் கழித்து விடுவதும் அதத சற்று கோவமாக மகள் கேட்க அன்ன ஆகாரமின்றியும் யாருடனும் பேசாமலும் இருந்து வைராக்கியமான கிழவியாகவே உயிர் விடுவதும்.. கதத மாந்தர்கள் அனைவரும் கிளவிக்குப் பயப்படுவதும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் இருப்பதும் கிழவியின் மனோதிடத்தையும் வைராக்கியத்தையும் குறிக்க உத்தியாக பயன்படுத்துகிறார் ஆசிரியர்.

பிசாசுக்கு பிடித்த விஷயம் ...

நகரத்தில் வாழ்ந்த பெண் கிராமத்திற்கு வாழ்க்கைப் பட்டு வருவதும் அங்கு எல்லா வசதிகளும், கண்ணுக்கும் மனதிற்கும் பிடித்த கனவனும் கிடைத்தும் மலம் கழிக்க இடம் இல்லாமல் திறந்த வெளியில் ஒதுங்க நேர்வதும் அந்த உள்பயத்திலேயே ஒரு நாள் விடிவத்கு முன்னரே வெளியே சென்றுவிட அங்கிருக்கும் பிசாசுதான் தன்னன இவ்வாறு ஏமாற்றி இருக்குமோ என பயந்து தாய் வீட்டிற்கு திரும்பிச்சென்று அங்கு அழைக்க வரும் கனவனிடம் முதல்ல நீங்க நம்மவீட்டுல கக்கூஸ் கட்டுவீங்களாம் பின்னாடி என்ன வந்து கூட்டிட்டு போவீங்களாம் என கூறுவதுடன் கதை முடிவடைகிறது.

என எல்லாக் கதைகளும் படிக்க நன்றாக உள்ளது. பெருமாள் முருகன் யாரும் தொட விரும்பாத கருவைக் கொண்டு ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பை கொடுத்துள்ளார்..

பதிப்பகம் : அடையாளம் பதிப்பகம். ௧௨0௫/௧, கருப்பூர் சாலை, புத்தநத்தம், ௬௨௧௩௧0.
விலை : ௬0/-

4 comments:

agalvenkat said...

அடச் சீ!
ஒரு இயற்கை உபாதை - இதிலயும் review போட்டு இந்த கலக்கு கலக்கிட்டே!
நல்லாயிருக்கு மேன் !!

நா கல்கத்தா போனப்ப பாத்தது - அங்க மலத்தை வெத்தல மேல வெச்சி பூஜ சாமானா விக்கறாங்க
ஒரு நிமிஷம் பாத்து அசந்துட்டேன்
எல்லாம் பிளாஸ்டிக் தான்னாலும் 'அத'க்கூட தத்ரூபமா பண்ணியிருக்காங்க நம்ம மக்கா

'அத'பத்தி மேல யாருக்காச்சும் தெரியுமா? எந்த சாமிக்கு 'அத' படெக்கிறாங்களோ?

ஹரன்பிரசன்னா said...

சூர்யா, நீங்கள் சொன்னது ஆச்சரியமான விஷயம். யாரிடமாவது விசாரித்துச் சொல்லவும்.


குமார், அடுத்து ஒரு போஸ்ட் கூட காணோம்? தூங்கிக்கிட்டு இருக்கும் கற்பனை குதிரைக்கு எதாவது புல் கிடைக்கிறதா எனப் பாருங்க அரபாப்!

பிரகாஷ் said...

ஜெயக்குமார்,
புதிய முயற்சிக்கு வரவேற்பு.
பெரும்பாலும், கதைகளின் சுருக்கம் போல் அமைந்து உள்ளது உங்களது விமர்சனம்.
அதைத் தாண்டி எழுத இன்னும் நிறைய இருக்கிறது (உ.ம்: நடை, கருத்தாழம்,பார்வை,உள்ளார்ந்த விஷயங்கள் என்று...)
பெரிய இடைஞ்சலாக இருக்கும் எழுத்துப் பிழைகளை தயவு செய்து நீக்கவும்.(ப்ரிவியூ வசதி இருக்கிறதே)

Anonymous said...

Nanba
Asatheetinga, neenga mail-la sonna pothu ithai paththi onnum puriyala. Ippathan, ithula ivalavu visayam iurkunu puriyuthu. Kathai surukam romba nallave irunthathu. Keep it up
Rajkumar S