Thursday, January 24, 2008

அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.

எனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு.

Real life in GULF*Local calls are free.


ஆமாம்..உள்ளூர் அழைப்புகள் இலவசம்தான்..ஆனால் கம்பிவழி தொடர்புகள் மட்டுமே.. செல்லிடப்பேசிக்கு பணம் உண்டு.

* Petrol is cheaper than water, Payment for drainage too.

பெட்ரோலின் இன்றைய விலை லிட்டருக்கு நம்மூர் மதிப்பில் ஏழு ரூபாய்கள். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை நம்மூர் மதிப்பில் பனிரெண்டு ரூபாய்கள்.

* Any building construction finishes in 3 months

உண்மை. இது துபாய்க்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் பொருந்தும். கத்தாருக்கு அல்ல. ஆடி அசைஞ்சு ஒரு ரோட்டைப் போட்டு முடிக்க ஒரு வருஷம் ஆகும். ஆனா ஓமான்ல காலையில வேலைய ஆரம்பிச்சு ராத்திரிக்குள்ள மேம்பாலம் கட்டிருவாய்ங்க.. எல்லாம் முன்னாலையே செஞ்சு வச்சு அப்படியே கொண்டுவந்து வச்சிருவாய்ங்க..

* Unqualified get more salary than Qualified

ஏனெனில் எந்த விசாவில் வருகிறிர்கள், என்ன வேலை செய்கிறிர்கள் என்பதை பொருத்து.

* Show-off matters more than real quality & performance

இதுவும் உண்மை.

* Laborers are paid less than what they can earn back in their own country

இதுதான் உச்ச பட்ச கொடுமை. குறைந்தபட்சம் எழுபதினாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை ஏஜெண்டுக்கு கொடுத்துவிட்டு இந்திய மதிப்பில் ஐயாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்குள் சம்பளம் பெருபவரே இங்கு அதிகம்.

இதில் அவர்களது உணவு செலவையும் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

அது போக மிஞ்சும் பனத்தில வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவார்களா அல்லது சேமிக்க முடியுமா?? "ஒழுங்கா ஊர்ல கடை கன்னிய வச்சு பொழச்சிருக்கலாம் சார் ஏஜெண்டுக்கு குடுத்த காசுல" என்று புலம்புபவர்கள் அதிகம் இங்கு..

* Companies can kick out their employees without any reason

இது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. ஓமானில் குறைந்தது 3 முறை வார்னிங் கடிதம் கொடுத்திருக்க வேண்டும் நான்காவது முறைதான் அவரை வெளித்தள்ள முடியும். இப்போது ஓமானில் தொழிற்சங்கம் கூட வந்துவிட்டது.

கத்தாரில் விசாவை கேன்ஸல் செய்துவிட்டு விமான டிக்கெட்டையும் வாங்கிய பின்னர்தான் சம்பந்தப் பட்ட தொழிலாளிக்குச் சொல்வார்கள். ஒம்போது மனிக்கு ஃப்ளைட் துனிமனியெல்லாம் எடுத்துக்க.. டாக்ஸி பிடிச்சு ஏர்போர்ட் போயிரு.. சம்பளம் மத்ததெல்லாம் அட்மின் கையில் இருக்கு வாங்கிக்க.. ஆல் தெ பெஸ்ட் என்று சொல்லும் கம்பெனிகளும் இங்குண்டு. எல்லோரையும் சொல்வதில்லை..

ரொம்ப அதிகம் சட்டம் பேசினால்..
கூட்டம் சேத்துக்கிட்டு வேலைய ஒழுங்கா பன்னாம இருந்தா..
ரூம்ல தன்னியபோட்டு ரவுசுபன்னா..
கம்பெனி சாமான போடுத்தள்ளினா..
இந்தூர்ல வந்துட்டு அவங்கள பத்தியும், அந்த நாட்டைப் பத்தியும் குறை சொன்னா..

இன்னும் சட்டவிரோத காரியங்கள் செஞ்சா..

* Wastas (recommendation) are more powerful than money

இந்த "வாஸ்தா" ஒன்றுமட்டும் இருந்தால் தொண்ணுறூ வயது கிழவனுக்கும் விசா வாங்கிவிட முடியும். வாஸ்தா இல்லையெனில் எல்லா தகுதியும் இருந்தும் உங்கள் விசா நிராகரிக்கப் படலாம்.

எங்கு போனாலும் இந்த "தெரிஞ்சவங்க" மூலமா வேலை சாதிக்கிறது ரொம்ப அநியாயத்துக்கு நடக்குது.

* Cleaners have more Wasta than officers

நம்மூர்ல மட்டும் இல்லையா என்ன?? ஏன்னா ஆரம்பத்துலையே பஞ்சப் பாட்டுப்பாடி இந்த பையனுக்கு எந்த உதவின்னாலும் செஞ்சிரனும் அப்படின்னு ஒரு எண்ணம வர்ர வரைக்கும் இருந்துட்டு, அப்புறம் எங்க சொந்தக் காரங்கப் பையன் இருக்கான் அவன் ஊர்ல வேலையில்லாம இருக்கான் அப்டின்னு சொல்லி ரெண்டு மூனு விசாவ வாங்கிருவார் நம்ம ஆள். ஆபிஸர்கள் எல்லாம் பெரிய அய்யா என்ன சொல்றாரோ அப்படியே கேட்டுட்டு நடக்க வேண்டியதுதான்.

எனக்குத்தெரிந்த அரபி நனபர் ஒருவர் சொன்ன கதை இது..

வீட்டுவேலைக்கு ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு பென்னை கொண்டுவந்திருகிறார் அவர். வந்த ஆறு மாதத்தில் நம்ம அரபி மற்றும் அவர் மனைவியின் பாராட்டுதல் எல்லாம் பெற்று நல்ல பெயர் வாங்கி இருக்கிறார்.

ஒருநாள் வேலைக்கார அம்மனி சோகமாய் இருந்துருக்கிறார். என்ன ஏது என்று விஸாரித்ததில் அவர் விட்டைஇலங்கைப் படையினர் குண்டுவீசி அழித்துவிட்டதாகவும் அவர்கள் குடும்பம் வீடில்லாமல் கோயிலில் தங்குவதாகவும் குறிப்பிட்டதில் அரபி மிக்க தாராள மனதுடன் ஆயிரம் ஓமானி ரியால்கள் கடனாக கொடுத்துள்ளார் (ஒன்றரை லட்சம் ஸ்ரீலன்ங்கா ரூபாய்கள்) . அதன் பின்னர் ஒவ்வொறு முறை சம்பளம் வாங்கும் போதும் எங்க வீட்ல அந்தப் பிரச்சினை, இந்தப்பிரச்சினை என்று கூறி முழுச்சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு கடனை திருப்பி தராமல் இழத்தடித்துவிட்டு பின்னர் ஊருக்குப் போனவர் திரும்ப வரவேயில்லை..
அவனவன் சம்பளமே தரமல் இழுத்தடித்து ஊருக்குப் போகும்போது பாதி சம்பளம் குடுத்து திருப்பி வந்தால் மீதிப் பனம் என ஊருக்கு அனுப்பும் போது எனக்கு வந்த கதியைப் பார்த்தீர்களா என்றார்... இதெல்லாம் வாஸ்தாவால வந்த பிரச்சினை என்றார்..

* Watchman has more Rights than the Building Owner

இது நடக்குதான்னு அவ்வளவா எனக்கு தெரியல. கடவுள் புண்ணியத்துல ஒரு மல்லு கூட ஒரே காம்பவுண்டுல ஒன்னரை வருஷமா ஓட்டிகிட்டிருக்கேன்.

* Office boy & Drivers have more influence on Boss than Manager.......

அவரோட எல்லா வேலையயியும் இவங்களே செஞ்சு வச்சிர்ராங்க. இந்த ஓபிஸ் பாய் மற்றும் டிரைவர் எல்லாம் யாருன்னு நெனைக்கிறீங்க.. எல்லாம் நம்ம மல்லுங்க தான்..

* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather

அப்படியெல்லாம் தெரியலப்பா.. நானும் மஸ்கட், துபாய், கத்தாருன்னு போயிருக்கேன்.. குளுரு காலத்துல நல்லா குளிரும்.. வெயில் காலத்துல எப்படா வெயில் காலம் முடியும் அப்படின்னு நெனைக்கிற அளவு வெயில் அடிக்கும்.. மழை வந்தா மட்டும் கொஞ்சம் சௌகரியம்.. அப்பப்ப வேலை இல்லாம ஊர்க் கதை பேசிட்டு இருக்கலாம்.. பக்கத்துல அங்க இங்க வேலை செய்யுர ஆளுக கிட்ட அங்க மழை பெய்யுதா?/ இங்க இப்பதான் தூறுது அப்படின்னு ஜல்லியடிக்கலாம்.. வேலை செய்யாம..

* Gulf is located in desert, still u find greenery everywhere

இதுக்கு சரியான உதாரனம் மஸ்கட், மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்.. என்னமோ பெங்களுரு பார்க்குக்கு போன மாதிரி பச்சைப் பசேல்ன்னு புல் தரையும் ரோட்டோரமா சீசன் பூவுமா அட்டகாசமா இருக்கும்..

* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world

யூ கேன்னாட் அப்படின்னு இருக்கனும்.. அது ஓரளவுக்கு உண்மை.

* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast

இதெல்லாம் வெலை செய்யுறவங்களுக்கு.. எங்கள மாதிரி கம்பெனி நேரத்துல ப்ளாக் எழுதுற ஆளுகளுக்கு இல்ல...

* Every bachelor has a dream of getting married and buying a house in India

கிட்டத்தட்ட எல்லோரோட ஆசையும் இதுவாத்தான் இருக்கு.. எனகு மொத ஆச நடந்துருச்சு.. ரெண்டாவது இனிமேதான் நடக்கனும்..

* U love your parents, friends, relatives 100 times more than when you were together

பொதுவாக உண்மை. ஆனால் ஐந்து வருடங்கள், ஏழு வருடங்கள் என ஊருக்குப் போகாமல் இங்கேயே காலம் கழிப்பவரும் உண்டு.. என்னென்னெமோ காரனங்கள். தூரத்தில் இருக்கும்போது அவர்களது அருகாமையில் கிடைத்த மகிழ்ச்சி, சொந்தங்களுடன் மனக்கசப்போடிருந்தாலும் நாள், கிழமைகளில் ஒன்றாய்க்கூடிய மகிழ்ச்சித்தருனங்கள் கிடைக்காததால் வரும் பாசம் இது..

* Being at home is more painful than being at work

இது ஷிஃப்ட் முறையில வேலைசெய்யுறபேச்சுலருக்கு.. எனக்கு வெள்ளிக் கிழமையும் வேலை...

இந்திப் படங்களை அராபியர்கள் விரும்பிப்பார்ப்பார்கள்;-

இந்த இந்திப் படங்களின் மேல் அராபியருக்கு உள்ள மோகம் சொல்லி மாளாது. எங்கள் கம்பெனியின் " மண்டூப்" (பி.ஆர்.ஓ) மொபைல் முழுக்க இந்தி பாடல்களும் இந்தி பட நடிகைகளின் படங்களும் தான் வைத்திருப்பார்..

* Gulf girls sing Hindi songs but don't understand anything

இருக்கும்.

* Dance Bars and Pubs more than that in Bangalore

துபாய் மற்றும் மஸ்கட்டில் பார்த்திருக்கிறேன். மற்ற இடங்களில் தெரியவில்லை எப்படி என.. மஸ்கட்டில் இந்த டான்ஸ் பார்களை ஒழிக்காத பட்சத்தில் நமது மக்கள் சம்பாதிக்கும் பனத்தில் பெரும்பகுதியை இதிலேயே விட்டு விடுவார்கள். மாலை ஏழு மனியிலிருந்துஅதிகாலை மூண்று மனி வரை இந்த பார்கள் செயல் படும்.

நடுவில் மேடை அமைத்து அதில் மூன்று அல்லது நான்கு பெண்கள் இந்தி மற்றும் கஜல் பாடல்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மாதிரி ஆடிக்கொண்டிருப்பார்கள். சுற்றிலும் இருக்கைகள் அமைக்கப் பட்டு மது சப்ளை நடக்கும்.

அந்த பெண்களுக்கு மாலை அனிவித்தல் அனுமதிக்கப் படும். அதை விற்பதற்கென்று பாரில் இருந்து ஒருவர் ஒவ்வொறு இருக்கையாக சென்று கேட்பார். ஒரு மாலை ஒரு ஓமானி ரியால்.. ( ஒரு ஓமனி ரியால் இந்திய மதிப்பில் நூற்றுப் பதினைந்து ரூபாய்கள்) ஒருவர் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்து மாலைகள் வரை இடுவார்.. எனக்குத்தெரிந்து எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் ஒரே இரவில் முப்பத்தைந்து ரியாலுக்கு மாலைகள் வாங்கி போட்டார்.. இது ஒரு விதமான கிறுக்குத்தனமான விளையாட்டு.. ஆனால் போதையில் யாராவது தூண்டிவிட்டால் அந்த மாதத்தின் சம்பளத்தில் பாதியை அங்கேயே விட்டு விடுவார்கள், இப்படி மாலைபோட்டே..

* A ladies hair saloon every 5 meters

:( உண்மையும் கூட.

* Food/Grocery delivery to the car

இது அராபிய முதலாளி / அடிமை மனோபாவத்தின் வெளிப் பாடு. இந்தியர்கள் இதுபோல கேட்டால் உள்ளே வாப்பா.. கூட்டமா இருக்கு என்பார்கள்..

* A Starbucks every 10 meters * Hard Rock Cafe with no alcohol

ஆமாம்.. எப்படித்தான் விற்பனை ஆகிறதோ..

* In one single flat sharing with 5 families
ஃப்ளாட் என்பதெல்லாம் அதிகம்.. நம்மூரில் பெரிய பங்களா போன்ற வீட்டை வாங்கி ஐந்து ஆறு குடும்பங்கள் வசிக்கும். ஒவ்வொருவருக்கும் மூவாயிரம் வரை வாடகை ஆகும்.

தனியாக ஒரு இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாடகைக்கு எடுக்க ஐயாயிரம் ரூபாய் ஆகும் இன்றைய நிலையில். எனவேதான் இதுபோன்ற ஏற்பாடு..

* In one single room sharing with 5 bachelors.

இதுவும் கம்பெனி தரும் அறையாக இருக்கும்.. அல்லது கம்பெனி தரும் வாடகையில் கொஞ்சம் மிச்சம் பிடிப்பதற்காக இப்படி தங்கிக் கொள்வார்கள்.

* A Shopping Mall located every 2 km

இப்போதெல்லாம் ஒரு கிலோ மீட்டரிலேயே வந்து விட்டது..

* Highway lanes differentiated for slow & fast drivers

நல்ல ஏற்பாடு.. எங்களுக்கும் இந்த உள்ளூர்காரர்களிடமிருந்து தப்பிக்க வசதி.

* Getting a license is more difficult than buying a car

அப்படி இருந்தும் தினமும் ஐம்பது விபத்துகளும் குறைந்தது ஒரு உயிரிளப்பும்.. இன்னும் லைசென்ஸ் மட்டும் எளிதாக கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்.. ஜனத்தொகை பாதியாகி விடும். ( எனக்கு லைசென்ஸ் ஆறு முறை தேர்வுக்குப் போன பின்பு கிடைத்தது. ஐந்து ஆண்டு காலத்தில் ஆறு விபத்துக்களில் சிக்கியது எனது அனுபவம்.. அதில் ஐந்து பிறர் மூலம் கிடைத்த பரிசுகள்.)

* Smashed cars are more than bugs

பின்னே இருக்காதா... எங்க ஆபிஸ் வாசல்லையே ரெண்டு வச்சிருக்கோம்..

* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on

இப்படி பனம் கட்டி நிப்பாட்டுற இடத்துலையே இடம் கிடைக்காது சில நேரத்துல.. பார்க்கிங் இல்லாத இடத்துல வண்டிய நிறுத்துனீங்கன்னா நம்மூர் காசுல மூவாயிரம் பழுத்துறும்.

* No Queues for women

ஆமாம்..

* Medical is very poor

இங்க வந்து ஒன்னா தற்கொலை செஞ்சிக்கனும்.. இல்லைன்னா இந்த ஊர் ஆஸ்பத்திரியில ஆப்பரேஷன் செஞ்சுக்கனும்..

* Everybody is looking for their annual vacation.
பின்ன எத்தன நாளைக்குத்தான் மத்தவைங்க ஊருக்குப் போறதையே பாக்குறது??

* U can find healthy food in everywhere.

இந்த விஷயத்தில் அவசியம் பாராட்ட வேண்டும்.. கொஞ்சம் அசுத்தமாக இருந்தால் அடுத்த நிமிஷம் உங்கள் கடைக்குப் பூட்டு..

TRAFFIC SIGNAL IN GULF: * GREEN: Signal to go for Indians,Americans & Europeans * YELLOW: Signal to go for Egyptians and Pakistanis, * RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese

:( ஆமாம்.. நான்கு வழிச்சாலையில் போகும்போது யூ டர்ன் அடிக்கிறத பாக்கனும் நீங்க.. அப்படியே இடதுகை ஓரமா ஓட்டிக்கிட்டே போயி எதுத்தாப்ல வண்டி வர்லைன்னதும் அப்படியே நடுவுல இருக்குற மெரிடியன்ல வண்டிய ஏத்தி அந்தப் பக்கம் போயிருவாரு நம்ம கத்தாரி.. ( அவர் வண்டியில மல மேல கூட ஏறலாம்.. அவ்வளவு பலம்.. அவ்வளவு மொரடு) நம்மூராளு அடுத்த ரவுண்டானா வரைக்கும் போயி திரும்பி வருவார்..
Last but not least. There is no PEACEFUL LIFE

இது ஒன்னு மட்டும் நிச்சயம்..

எத்தன நல்ல விஷயங்கள் ( காசு, பனம், எங்க போகனும்னாலும் கார்.. மற்றும் கம்பெனி பேட்ரோல், ஊர்ல வெளிநாட்டுல இருக்காண்டான்னு ஒரு கெத்து, வருஷத்துக்கொருமுறை விமானப் பயணம், எல்லாம் இருந்தாலும்..

01. உங்க நன்பனுக்கு கல்யானம் அப்படின்னா போக முடியாது..ஆண்டு விடுமுறை வ்ந்தா தப்பிச்சீஈங்க.. இல்லைன்னா இல்ல..

02. எந்த சொந்தக்காரங்க செத்தாலும் ஒரு போன்கால்தான் பன்ன முடியும்..

03. எவ்வளவு சந்தோசமா வச்சிருந்தாலும் ஊட்டுக்காரம்மாக்களோட அழுகைய நிறுத்த முடியாது. ( மனைவிகளை ஊரீல் வைத்துவிட்டு வந்துள்ள நமது சகோதரர்களுக்கு)

04. புள்ளைகளோட படிப்பு பத்தி ஒன்னுமே செய்ய முடியாது..

05. குழந்த பெறந்த பின்னாடி இங்க வந்து அது ரெண்டு வருஷத்துல பெரிய புள்ளையா ஆனப் புறம் போய் பாக்குற அப்பனோட நிலைமை எந்த தகப்பனுக்கும் வரக் கூடாது. ஆனா இந்தப் பக்கம் வேலைபாக்குற பெரும்பான்மை இந்தியர்களின் நிலை இதுதான்..