Sunday, December 20, 2009

நேரில் கண்ட விபத்து

நேற்றிரவு வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.

உள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.

அந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.

மத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.

நான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது? எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.

நரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா?

6 comments:

பத்மகிஷோர் said...

Take care dude.

ஜெயக்குமார் said...

நன்றி பத்மகிஷோர், நீங்களும் தொடர்ந்து எழுதுங்களேன்..

ஜெ

இராகவன் நைஜிரியா said...

வண்டி ஓட்டும் போது ஜாக்கிரைதையாக் இருங்க நண்பரே..

பத்மகிஷோர் said...

Dear J,
I will try in 2010. Little bit busy in a new company.

Padmakishore

சீனு said...

அந்த வண்டி உங்கள மோதி இருந்த கொஞ்சம் இந்த ப்ளாக் வர தாமதம் ஆகி இருக்கும் அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்லை !!!! anyways jokes apart, இந்த ஊர்ல எல்லாமே அராதல்ஸ் driving தான்!!! என் வண்டிய இது வரை 2 பேர் இடிச்சு இருக்கனுங்க !!! ரெண்டுமே LAND CRUISER தான் !!!

Anonymous said...

வலையுலகில் இன்றைய சிறந்த பத்து பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்