Thursday, March 26, 2015

விருந்தினரே நீங்க எப்ப போவீங்க? மற்றும் சத்யா -ஹிந்தி

ஆல் தி பெஸ்ட் 

பண்ட்டி ஆவுர் பப்ளி, 

அதிதி, தும் கப் ஜாவோகி,

 சத்யா - ஹிந்தி கடந்த இரு தினங்களில் பார்த்த படங்கள். 

ஆல் தி பெஸ்ட் மற்றும் பண்ட்டி அவுர் பப்ளி பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

 ”அதிதி தும் கப் ஜாவோகி”யில் பப்பு என்ற தனது உறவினனை தேடிவரும் மாமா வீடு மாறி வந்து வீட்டில் இருப்பவனை நீதான் பப்பு எனச் சொல்லிவிட்டு அங்கேயே மாதக்கணக்கில் உட்கார்ந்து அவர்களை படுத்தி எடுப்பதுதான் கதை. 


ஆனால், இந்த நகைச்சுவைப் படத்திலும் எனக்கு மிகப்பிடித்த அம்சம் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளுக்கு எவ்வளவு நன்மைகள் என்பதற்கும், வீட்டில் உள்ள இளம் மக்களுக்கு நல்லது கெட்டது சொல்வதறும், ஆறுதல் மற்றும் நம்பிக்கை சொல்வதற்கும் எவ்வளவு அவசியம் என்பதையும், இன்றைய மைக்ரோ குடும்பங்கள், நியூக்ளியர் குடும்பங்களானதில் ஆன இழப்பு என்ன என்பதையும் சேர்த்தே சொல்லி இருக்கின்றனர். 

மும்பையின் கணபதி விசர்ஜன் மற்றும் வீட்டில் கணேஷ் சதுர்த்தி பூஜைகளையும் விஸ்தாரமாக காட்டுகின்றனர். மொக்கைப்படமாக இருக்கும் என பார்க்க ஆரம்பித்தேன். கடைசியில் பிடித்துப்போனது. 

சத்யா - ஹிந்தி (Satya - The Truth அல்லது உண்மை) 


1998ல் வந்த ராம் கோபால் வர்மாவின் கேங்க்ஸ்டர் படம். நேற்றுதான் பார்க்க வாய்த்தது. மும்பையைக் கலக்கும் தாதாக்களுக்குள் நடக்கும் போட்டியும், அதில் அரசியல்வாதிகளின் பங்கும் இறுதியில் எல்லோருக்கும் என்ன ஆனது என்பதுதான் படம். திரைக்கதையை விறுவிறுப்பாய்ச் சொன்னதில் ராம் கோபால் வர்மா கலக்கி இருக்கிறார். ரொம்ப பிரமாதமான லொகேஷன்கள் எல்லாம் இன்றி மிகச் சாதாரனமாக ஒரு கேங்க்ஸ்டர் கும்பலில் நுழைந்து படமெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியே எழுத்திருக்கிறார். ஆந்திராவின் சக்ரி (சக்ரவர்த்தி)தான் சத்யாவாக வருகிறார். ஊர்மிளாவுடன் காதலும். இவர் கதை எப்ப ஊர்மிளாவுக்கு தெரியுமோ, அப்ப என்ன ஆகுமோ என நம்மையும் கொஞ்சம் பதட்டப்பட வைக்கிறார். கேங்க்ஸ்டர் கும்பல்களின் உடல் மொழி, பேசும் விதம், அவர்களுக்குள் இருக்கும் ஒரு லயம், நட்பு எல்லாமே அருமையாக திரையில் பதிவாகி இருக்கிறது. இறுதியில் சக்ரி வாழ விரும்புவதும் ஆனால் அது நிராசையாகிப் போவதும் கடைசியில் காதலியை பார்க்கக்கூட முடியாமல் சாவதுமாக கலக்கல். சக்ரியின் மானரிசம் என ஏதும் ஞாபகமில்லை. ஆந்திரப்படங்களிலுமே அப்படித்தான். ஆனால் அந்த மேனரிசம் இல்லாத ஓர் மேனரிசம் அல்லது நடிக்காத ஒரு நடிப்பு சக்ரியை வித்தியாசமாக காட்டுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை தீப்பிடித்ததுபோல ஓடிய படம் சத்யா. இதிலும் கணேஷ் விசர்ஜன் உண்டு. :)

Friday, March 6, 2015

படித்ததில் பிடித்தது..

கனடாவின் ஒரு ஷாப்பிங் மாலில் 100 சதவீதம் புர்கா அணிந்த ஈராக்கிய பெண் ஒருவர் பணம் வாங்கும் இடத்தில் இருந்த பெண்மனி அணிந்திருந்த கனடா நாட்டுக் கொடியைக் காண்பித்து ஏன் இதை அணிந்திருக்கிறாய் எனக் கேட்டிருக்கிறார். அவர் எனது மகன் ஐக்கிய நாடுகள் படையுடன் சேவை செய்ய சென்றிருக்கிறான் அவன் நினைவுடனும், கர்வமுடனும் அணிந்திருக்கிறேன் எங்கள் நாட்டுக் கொடியை என்றிருக்கிறார். 

உடனே ஈராக்கிய பெண்மனி எப்போது எங்கள் நாட்டின்மீது குண்டு வீசுவதை நிறுத்துவீர்கள் எனக் கோபமாக கேட்டிருக்கிறார்.. அப்போது பணம் கட்ட வரிசையில் நின்றிருந்த ஒரு வயதானவர் வந்து இந்தப்பெண்மனியின் மகனைப்போன்று நூற்றுக்கணக்கான கனடிய வீரர்கள் உங்களுக்காக போராடி உயிரை விட்டிருக்கிறார்கள். அதனால்தான் உங்களைப்போன்றோர் “எங்கள்” நாடான கனடாவில் நின்றுகொண்டு ஒரு கேஷியரை பார்த்து எங்கள் நாட்டின் மீது குண்டு வீசுகிறீர்கள் என “எங்கள்” நாட்டை அவமதிக்க முடிகிறது. 

உங்களைப்போன்றோர் இப்படி வெளிப்படையாக பேசும் உரிமை உங்கள் நாட்டில் இருந்திருந்தால் எங்கள் நாட்டு வீரர்கள் அங்கே சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், இன்று எப்படி உங்கள் உரிமைக்கு, உங்களுக்கு தங்க இடம் கொடுத்த கனடிய மக்களை அவமரியாதையுடன் பேசத்தெரிந்துகொண்டுவிட்டதால் நீங்கள் ஈராக்குக்கு திரும்பிச் செல்லும் விமானக்கட்டணத்தை நான் அளிக்க தயாராய் இருக்கிறேன். அங்கே சென்ற உடன் இப்படி கனடாவில் வெளிப்படையாக பேசியதைப்போல அங்கு சென்றபிறகும் இப்படி வெளிப்படையாக பேசுங்கள். அப்படி பேசிய பிறகும் நீங்கள் உயிரோடிருந்தால், இப்படி உங்களை இந்த நெருக்கடிக்கு (அந்நிய நாட்டில் பிழைக்க வேண்டிய நிலைக்கு) உள்ளாக்கிய உங்கள் நாட்டு மக்களை திருத்துங்கள். அவர்கள்தான் கனடிய நாட்டு வீரர்கள் அங்கு (ஈராக்கிற்கு) வருவதற்கே காரனம் என்றார். 

நீதி.. உன் உரிமையை உன் நாட்டில் மட்டும்தான் பேச வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அவமானப்பட நேரிடும்.