Monday, January 26, 2015

இந்திய குடியரசு தின வாழ்த்துகள்.

உலகின் 5வது எண்ணெய் வளமிக்க நாடு.. இரண்டு வற்றாத ஜீவ நதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாயும் நாடு கிட்டத்தட்ட 95% மக்கள் இஸ்லாமியர்கள். உலகின் மிகப்பழமையான நாகரீகத்தின் தொட்டில்கள்.. மத்திய கிழக்கிலேயே மிகப்பிரபலமாய் இருந்த பல்கலையைக் கொண்ட நாடு நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் ஒரே மொழி இத்தனை பெருமைகள் இருந்தும் இன்றைக்கு குடிநீரோ, தடையற்ற மின்சாரமோ, சரியான போக்குவரத்து வசதிகளோ அற்று அன்றன்றைக்கு விடிந்து எழுந்தால் படுக்கப்போனால்தான் நிச்சயம் என்ற அளவில் வாழ்க்கைத்தரம் உள்ள நாடு எது தெரியுமா? 

இன்றைய ஈராக். 

ஈரான் - ஈராக் போர் அமெரிக்கா உள் நுழைந்து நடத்திய போர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள். அது அடங்கி பின்னர் ஜனநாயகம். கொஞ்சமே கொஞ்சூண்டு நிமிர்ந்த நாடு இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் துண்டாடப்பட்டு ஈராக் என்ற பெயரிட்டு அழைக்க இடம் கிடைக்குமா என்ற அளவில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டுள்ளனர். 

அப்படியே நேர் மாறாக இந்தியா.. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளே 15. இதுதவிர ஆயிரக்கணக்கில் மொழிகள் மதமென எடுத்துக்கொண்டால் பெருவாரியான மக்களைக் கொண்ட இந்துமதம் முதல் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த, சமனம் என எண்ணற்ற மதங்கள். 

நீர்நிலைகளை, இயற்கையை நம்பியே பெருவாரியான விவசாயம்.. இருப்பினும் நமக்குள் வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற ஒரு கருத்தாக்கத்தில் எத்தனை பிரிவினைகள் இருப்பினும் இந்தியா என்ற ஒரே தேசத்தின் கீழ் திரண்டு இந்தியர்களாக இணைந்து இருப்பதால்தான் இந்த 68 ஆண்டுகளில் நமது அருகில் இருக்கும் நாடுகளையெல்லாம் ஒப்பிடும்போது எங்கோ இருக்கிறோம். சில குறைகள் இருப்பினும் குடிமக்களுக்கு நீர், சாலை போக்குவரத்து வசதிகள், பள்ளிகள், மின்சாரம் எல்லாம் அதிகம் சாத்தியப்பட்டுள்ளது. 

இது எல்லாம் கூடி வாழ்ந்ததால்தான். நம்மிடம் எண்ணெய் வளம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு பணமும் நம் உழைப்பால் ஈட்டியவை. மத்திய கிழக்கைப்போல தரையின் கீழிருக்கும் எண்ணெயை எவனையோ எடுக்க சொல்லிவிட்டு அவன் கொடுக்கும் காசில் மாடமாளிகைகளும் பணக்கார கார்களும் கொண்டு வாழவில்லை. 

நமக்கிருப்பதோ நமக்கென ஒரு தேசம். வேலை செய்துவிட்டு வீடு திரும்பினால் படுக்க ஒரு இடம். சமூக பாதுகாப்பு என எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். அடைந்தது கொஞ்சம்தான் என்றாலும் நிச்சயம் மற்ற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது கல்வி, கேள்விகளிலும், தனி நபர் வருமானத்திலும் நிச்சயம் மேலே இருக்கிறோம்.. இது அத்தனையும் நாம் இந்தியர்கள் என ஒற்றுமையாய் முயன்றதால் வந்த விளைவு. 

இதையெல்லாம் கெடுக்க நினைக்கும் கும்பல்கள் குடியரசு தினத்துக்கு கருப்புக்கொடி இட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த முட்டாள்களுக்கு தெரிவதில்லை, இந்த உரிமையே குடியரசினால் விளைந்த ஜனநாயகம் என்ற கட்டமைப்பு வழங்கிய உரிமை என. அவர்கள் செய்வது தேசத்துரோகம் என்றாலும் அவர்கள் தரப்பைச் சொல்லவாவது குடியரசிலும், ஜனநாயகத்திலும் வாய்ப்புக் கிடைக்கும், . 

அதுகூட இல்லாமல், தெரு நாய்களைப்போல குண்டடிபட்டு சாகும் மக்களும், அவர்களை காப்பாற்ற முடியாத அரசாங்கமும், தினமும் மரண ஓலமும் கொண்ட நாடாக நம் நாடும் ஆக விரும்பும் ஈனர்களின் வேலைதான் இந்த கருப்புக்கொடி காட்டுதல், கோட்டையில் தேசியக்கொடி காட்டக்கூடாது என்ற புர்ச்சி முழக்கமெல்லாம். 

இந்த நாடகங்களையெல்லாம் இந்தியாவில் ஜனநாயகம் என ஒன்றிருக்கும்வரைதான் செய்ய இயலும். அதுகூட தெரியாத மூடர்களை நம்பியும் ஒரு கூட்டம். நமக்கு கிடைத்த இந்த ஜனநாயகத்தை காக்க வேண்டியது நம் கடமை. தேசத்துரோகிகளை இனம் கண்டு வேரறுக்க வேண்டியது நாளைய நமது சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட. 

எல்லாம் இருந்தும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டு சாகப்போகிறோமா (ஈராக்கைப்போல) அல்லது ஒற்றுமையாய் இருந்து பல சாதனைகளை செய்யப்போகிறோமா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Thursday, January 22, 2015

ஸ்டிக்கர் பொட்டு Vs குங்கும பொட்டு

 டிஸ்கி 1 : கடவுள் என்பதும், கனவன் என்பதும் வெறும் கற்பிதங்கள் என்ற முற்போக்குகள் அதே போக்கில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

டிஸ்கி 2 : தினமும் நாலுவாட்டி தலைவாரவே நேரமில்லை, இதுல போய் குங்குமப்பொட்டாம்ல என்பவரும் தாண்டிச் சென்றுவிடவும் 

டிஸ்கி 3 : குங்குமப் பொட்டு வைப்பதால் மதச்சார்பின்மை கெட்டுவிடும் என்ற அளவில் மதச்சார்பின்மை கடைப்பிடிப்பு மஹாத்மாக்களும் ஓடிவிடலாம்

கலர் கலராக ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் நவயுக மங்கைகளுக்கு தெரியுமா? 80களில் ஸ்டிக்கர் பொட்டு செய்யும் செயற்கை துணியில் ஹேண்ட்பேக்கும், காலணிகளும் வந்து சக்கைப்போடு போட்டது என்பது? அப்போது பேக் மற்றும் செருப்பு செய்து மிச்சம் இருந்த துணியில் ஸ்டிக்கராக செய்து நெற்றியில் ஒட்டிக்கொள்ள வசதியாக பசையை தடவி மார்கெட்டுக்கு அனுப்பினர். குழந்தைகளும் போடும் உடைகளுக்கு பொருத்தமாக இந்த ஸ்டிக்கர்களை விளையாட்டாக அணிந்து திரிந்தனர். 

தினமும் மூன்று, நான்குமுறை இறைவனையும், கணவரையும் நினைத்து குங்கும பொட்டு வைத்துக்கொண்டிருந்த மங்கையர் திலகங்கள் இந்த ஸ்டிக்கர் பொட்டை ஒருமுறை வைத்தால் போதும். குளித்தால்கூட கவலையில்லை, அழியாது என்ற வசதியை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறினர். 

தேவை அதிகரிக்கவும் செருப்பு செய்து விற்றுக்கொண்டிருந்தவர்கள் முழுநேரத்தொழிலாக ஸ்டிக்கர் பொட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். குங்குமம் தரும் மஞ்சள் மற்றும் தாழம்பூ மணத்தை அனுபவிக்காமல் இப்படி செயற்கை பொருட்களின் பின்னால் செல்ல சோம்பேறித்தனம் மட்டுமே காரனம் என நான் நினைக்கிறேன். 

ஆகாத போகாத 100 பொருட்கள் ஹேண்ட்பேக்கில் உங்களுடன் ஊரெல்லாம் உலா வரும்போது சிறிய குங்குமப் பொட்டும் கூட வந்தால் என்ன ஆகிவிடும்? பாரம்பரியத்திற்காகவும், குங்குமம் தரும் மகிழ்ச்சிக்காகவும் இன்றும் குங்குமம் அணிவோருக்கு என் வணக்கங்கள். 

உங்கள் குலம் பெருகுவதாக.. __/\__

Thursday, January 15, 2015

Battle of Algiers - French (1966 )

 ஃப்ரெஞ்சுக்காலனியாய் இருந்த அந்நாளைய அல்ஜியரின் சுதந்திரப்போராட்டம்தான் படம். முழுக்கதையும் கஸ்பா என்ற ஊரில் நடப்பதாக காட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஒரு போராளியிடம் இருந்து “விசாரனை”மூலம் குழுத்தலைவன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அழிக்கச் செல்கிறது ஃப்ரெஞ்சு அதிரடிப்படைக் குழு. போராளிக் குழு அழிக்கப்படும் முன்னர் போராளிக்குழுவின் தலைவன் என்ன நடந்தது என்பதை ஃப்ளாஷ்பேக்காக நினைத்துப்பார்ப்பதாக செல்கிறது படம். 

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நம் நாட்டை ஃப்ரெஞ்சுக்காரர்களிடமிருந்து விடுவிக்கவேண்டும் என ஒரு சிலர் தீர்மானிக்கிறார்கள். தீர்மானித்த உடன் முதலில் ஒரு போராட்டக்குழு ஆரம்பித்து அதற்கு எஃப் என் எல் எனப்பெயரிடுகின்றனர். குழுஆரம்பிக்கும்விதமும் அவர்கள் தலைமையை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதும் அதன் பின்னர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும், சிறு சிறு வெற்றிகளுக்குப் பின்னர் முழுவீச்சில் இறங்குவதுமாக ஒரு போராளி இயக்கம் ஆரம்பிப்பதில் இருந்து சுதந்திரம் பெறும் வரையிலுமான போராட்டத்தை அழகாக எடுத்திருக்கின்றனர். 

போராட்டக்குழு அதன் கொள்கைவிளக்கமாக மக்களுக்கு முதல் அறிக்கையை கொடுக்கின்றனர். 

National Liberation Front : First communication : ”அல்ஜிரிய மக்களே, நமது போராட்டம் காலனியாக்கத்துக்கு எதிரான போர், நமது குறிக்கோள் சுதந்திரம் பெறுவதும், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அல்ஜீரிய நாட்டை அமைப்பதும், மதம், இனம் வேறுபாடின்றி அடிப்படை உரிமைகளை மதிப்பதும் ஆகும்.” 

போராட்டக்குழுவின் அடுத்த குறியாக முதலில் தங்கள் மக்களை சீர் செய்தல். பொதுமக்களை தங்களுக்குச் சாதகமாக்குதல் அப்படி ஒத்துவராதவர்களை தீர்த்துக்கட்டுதல். இதை தலைவன் குழுவில் சேரும் இன்னொருவனுக்குச் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக குழுவின் 24வது அறிவிப்பு வருகிறது. 

”ஃப்ரெஞ்சுக்காரர்கள் நம்மை ஏழைகளாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நம் சகோதர சகோதரிகளை கீழ்மையான வழியில் சீர்கெடுத்து, மரியாதைக்குறைவாய் நடத்துகிறார்கள், நம்மக்களும் அவர்களின் மதிகெட்டு, தங்கள் சுயமரியாதையை இழந்துவிட்டனர். எஃப் எல் என் இந்த இழிநிலையைப்போக்க சில திட்டங்களை வகுத்துள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நமது சுதந்திரத்தின் முதல் படி. இன்றிலிருந்து எஃப் எல் என் அல்ஜீரிய மக்களுக்களின் மனம் மற்றும் உடலின் நல்வாழ்வுக்காக பொறுப்பாளராக பொறுப்பெடுத்துக்கொள்கிறது. அதனால் கீழக்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதை மருந்து மற்றும் சாராயம் தடைசெய்யப்படுகிறது. விபச்சாரமும், வாங்கி விற்பதும் தடை செய்யப்படுகிறது. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள். மறுமுறை மீறுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.” 

இந்த அறிவிப்பிற்குமுன்னர் அல்ஜீரிய மக்களின் வாழ்க்கை எபப்டி இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். தெருவெங்கும் சிகரெட் விற்பவர் போல போதைப்பொருள் விற்பவர் இருக்கிறார். குடி தாராளமாக புழங்குகிறது. விபச்சாரம் சர்வ சாதாரனமாக நடக்கிறது. போராட்டகுழுவுக்கு மக்களின் ஆதரவும், இயக்கத்துக்காக உழைப்பவர்களின் ஆதரவும் பெருகத்தொடங்குகிறது. போலிஸைக் கொல்வதும், தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதுமாக இயக்கம் வேகமாக வளர்கிறது. எஃப் எல் என் பிரபலம் ஆனதும் ஒரு வாரத்துக்கான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர், கடையடைப்பு பலத்த வெற்றி பெறுகிறது, ஃப்ரெஞ்சு போலிஸின் அடக்குமுறை இருந்தும். கடையடைப்புக்கு முதல் நாள் பென் மெஹ்தி என்ற போராட்டக்குழு தலைவரில் ஒருவருக்கும், அலி என்பவனுக்கும் நடக்கும் உரையாடல்.. 

பென் மெஹ்தி: ஏன், (ஸ்ட்ரைக்) கூடாது? 

அலி: ஏனெனில் நாம் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவினால். 

பென் மெஹ்தி: போராகட்டும், புரட்சியாகட்டும், வன்முறை எப்போதும் போரை வெல்ல உதவுவதில்லை. ஆரம்பத்தில் பயங்கரவாதம் பயன்படும். அதன் பின்னர் மக்களே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கடையடைப்பு. எல்லா அல்ஜீரியர்களையும் ஒன்று திரட்ட, நமது பலத்தை அறிய, (இந்த கடையடைப்பு வேண்டும்) அலி: ஐக்கிய நாடுகள் சபைக்கு நிரூபிக்கவா? 

பென் மெஹ்தி: ஆம், அவர்களுக்கு நிரூபிக்கத்தான். இந்த கடையடைப்பு எந்த நன்மையும் நமக்குச் செய்யாமல் போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் சபைக்கு நமது பலம் தெரிய வரும். உனக்கு தெரியும் அலி, ஒரு போராட்டத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல. அதை (வீரியம் குறையாமல்) நடத்திச் செல்வது அதைவிடக்கடினம். எல்லாவற்றையும் விடக் கடினம் அந்த போராட்டத்தில் வெல்வது. ஆனால், அதற்குப்பின்னர், வென்றபின்னர்தான் உண்மையான கஷ்டங்கள் ஆரம்பிக்கும். 

அதன் பின்னர் போராட்டக்குழு முழுதும் நசுக்கப்பட்டு விடுகிறது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு மக்களிடம் எந்த எதிர்ப்புமில்லை. திடீரென இரு ஆண்டுகளுக்குப்பின்னர் மக்களே பொங்கி எழுகிறார்கள். அதன் பின்னர் 2 ஆண்டுகள் தொடர் போராட்டங்களின் விளைவாய் அல்ஜீரிய நாடு பிறக்கிறது. 

படம் கருப்பு வெள்ளையில் வந்தது. வசனங்கள் அனைத்தும் அரபியிலும், ஃப்ரெஞ்சிலுமாக இருக்கிறது. ஆங்கில சப்டைட்டிலுடன் பார்க்க வேண்டும். இஸ்லாமிய அரசமைக்க நடத்தப்படும் போராட்ட வழிமுறைகள் அன்றும் இன்றும் அப்படியே தொடர்கிறது. 

அல்ஜீரிய சுதந்திர போராட்டமாவது சுதந்திரப்போராட்டம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்று சுதந்திர நாடுகளில் முழு சுதந்திரத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்போரும் இதே வழிமுறையைத்தான் இன்றும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். 

நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தியாகிகள் எல்லாம் ஏன் உலகுக்கே உதாரனமாய் இருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். பர்மிய ஆங் சன் சூயி ஆகட்டும், நெல்சன் மண்டேலா ஆகட்டும், மார்ட்டின் லூதர் கிங் ஆகட்டும் நம் நாட்டின் காந்தியடிகளைத்தான் உதாரனமாகக் கொண்டார்களே தவிர ஆயுதத்தை எடுத்து போராடவில்லை. 

முழு புர்கா அணிந்த பெண்களை ஆயுதக்கடத்தலுக்கும், போராட்டத்திற்கு உதவவும் பயன்படுத்துவது. இந்த பயண்பாட்டுக்கு பயன்படுத்த வசதியாக இஸ்லாமியப் பெண்களை சோதனைக்குட்படுத்தக்கூடாது என எப்போதும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அது இன்றும் தொடர்கிறது. அதே சமயம் போராட்டத்துக்கு தேவை எனில் ஃப்ரெஞ்சு பெண்கள் போல நாகரீக உடையணிந்து குண்டு வைக்க அதே அல்ஜீரிய இஸ்லாமியப்பெண்களை பயன்படுத்துகின்றனர். நிராயுதபானிகளாய் இருக்கும் பொதுமக்களைக் கொல்வது ஷரியா சட்டத்தை முதலில் அவர்களுக்குள் அமல்படுத்துவது நேரடி போராட்டமாக இல்லாமல் ஒளிந்திருந்து மறைமுகமாக தாக்கிவிட்டு ஓடுவது. நம் நாட்டில் சுதந்திரப்போராட்டத்தின்போது இவர்களுக்கு தீவிரவாதிகள் எனப் பெயர். இத்தனைக்கும் நம்மூர் தீவிரவாதிகள் வெள்ளைக்காரனை மட்டும்தான் நேரடியாக கொன்றார்கள். அவனது குடும்பத்தினரைக்கூட ஒன்றும் செய்யவில்லை. பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவைத்து கொத்துக்கொத்தாய் கொல்வது என அன்று முதல் இன்றுவரை அதே வரிசையில் நீள்கிறது. 

1960ம் ஆண்டு ஆனாலும் சரி, 2014 ஆனாலும் சரி. இதுதான் அவர்கள் வழிமுறையாக இருக்கிறது. சிறைக்காட்சியில் கில்லெட் எனும் தலையை வெட்டும் கருவியைக் கான்பிக்கிறார்கள். அல்ஜீரிய தெருக்களில் அந்தக்காலத்திலெயே கேமெராவை ஓடவிட்டிருக்கிறார்கள். அழகான கோணங்கள், சிறப்பான ஒளிப்பதிவென நன்றாகவே இருக்கிறது. இசை : இனிமையான புல்லாங்குழலில் ஆரம்பிக்கும் இசை ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு முன்னர் ஒரு வித்தியாசமான இசையை இசைக்கிறது. நிச்சயம் படத்துக்கு பலம் சேர்க்கிறது இசை. அல்ஜீரிய சுதந்திரப்போராட்டம் குறித்து தெரிந்துகொள்ளவும், இல்லை ஒரு ஆயுத போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி எப்படி சுதந்திர போராட்டமாக உருவெடுக்கிறது, பின்னர் எப்படி வெல்கிறது என்பதையும் காண்பதற்காகவும் இந்தபப்டத்தை அவசியம் பார்க்க சிபாரிசு செய்வேன். யுடியூபிலேயே ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது. வாய்ப்பும், நேரமும் இருப்போர் அவசியம் பாருங்கள்.

ஓமானின் சுல்தான் காஃபுஸ் பற்றி எனது பதிவு

ஓமானின் சுல்தான்.. சுல்தான் காஃபுஸ் பின் செயித் அவர்கள் உடல்நலமின்றி இருந்தபோது நான் எழுதிய பதிவு வெப் துனியா தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது.

படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்.

Saturday, January 10, 2015

அவள் அப்படித்தான்..

ருத்ரையாவின் ”அவள் அப்படித்தான்”... 

19.11.2014 அன்று அவர் காலமாகி விட்டார். எல்லோரும் அவரைப்பற்றி எழுதியதில் தவறாமல் குறிப்பிட்டது ”அவள் அப்படித்தான்” படத்தைக்குறித்து. 

உண்மையிலேயே கருப்பு வெள்ளைக்காலத்திலேயே எத்தனை விஷயங்களை அநாயாசமாக தொட்டுச் சென்றிருக்கிறார் குறிப்பாய் கல்யாணத்திற்கு முந்தைய உறவு, பெண் சுதந்திரம், சொந்தக்காலில் நிற்கும் சுதந்திரமான பெண் இப்படியாக. 

இதை படத்தில் காட்சிகளாக வைக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அந்தக்காலத்திலேயே பர்தா குறித்து பேசியவுடன் மைக் மியுட் ஆகி விடுகிறது. போலி மதச்சார்பின்மை நீடூழி வாழ்ந்துகொண்டிருக்கிறது, கருப்பு வெள்ளைக்காலத்திலிருந்தே.... 


எத்தனைமுறை ஏமாற்றப்பட்டாலும் எதிர்நீச்சல் போடும் பெண்ணாக ஸ்ரீபிரியா கலக்கி இருக்கிறார்.... அருமையான கதை, திரைக்கதை, வசனம், எல்லாம் படத்தை முழுதாய் பார்க்க வைத்தது. கருப்பு வெள்ளை படம் என்பது மட்டுமே குறை. இதை மீண்டும் வெளியிட்டால் மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். சாகாவரம் பெற்ற இன்றும் விடாமல் சீரியஸாய் விவாதிக்கப்படும் விஷயங்களைக்குறித்து பேசுவதால் சொல்கிறேன். 

ருத்ரையா எடுத்த இன்னொரு படம் கிராமத்து அத்தியாயமாம்.. அவள் அப்படித்தான் போலில்லாமல் சுமாராய்தான் இருக்குமாம், அவசியம் பார்ப்பேன். அவள் அப்படித்தான் படத்தை கதை திரைக்கதைக்கு அடுத்த படியாக நடிகை ஸ்ரீபிரியா மற்றும் ரஜினிகாந்த் படத்தை சுமக்கிறார்கள்... கமலை குறைத்து மதிப்பிடவில்லை. ரஜினியை ஒப்பிடும்போது ஸ்கோப் குறைவு. ரஜினி ”மாப்ள” என அழைக்கும் தோரனையில் இருக்கும் இயல்பு, எந்த விஷயத்தைப் பற்றி சொன்னாலும் ரெண்டு விஷயம் எனச் சொல்லிச் செல்வது (சொல்வதெல்லாம் முன்முடிவுகள்தான், ஆனால், இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கும் முன் முடிவுகள்.

 படம் முழுக்க ஆங்கில வசனங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், எல்லாமே ஸ்மார்ட் வசனங்கள்.. ஆரம்பத்தில் வரும் குழப்பமாக ஓடும் படத்தில் கமல் தோன்றி ரஷ்தான் பார்த்தொக்கொண்டிருக்கிறோம் எனச் சொல்வதும் அதன் பின்னர் படம் ஆரம்பிப்பதெல்லாம் இன்றும் புதிது. (நான்கூட குப்பை பிரிண்ட்டை பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என கொஞ்சம் கவலைப்பட்டேன்.) உண்மையில் ருத்ரையா இன்னும் கொஞ்சம் கூடுதலாக படமெடுத்திருக்கலாம் என தோன்றுகிறது. இன்னொருமுறை இந்தப்படத்தை அவசியம் பார்ப்பேன். பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். நீங்கள் இதுவரை பார்த்து மிக நல்லபடம் என நம்பிக்கொண்டிருக்கும் படத்தைவிட நிச்சயம் நல்ல படமாக இது இருக்கும்.

Friday, January 9, 2015

சில அனுபவங்கள்..

இம்முறை கல்லுப்பட்டியில் இருக்கும் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் கொடுக்க பேரையூர் தாலுகா ஆஃபிஸுக்கு சென்றிருந்தேன். மாற்றுத்திறனாளி ஒருவர் ( பாறைக்கு வைக்கும் வெடி வெடித்ததில் நாலு விரல்களை இழந்துவிட்டார்) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். என் கையெழுத்தை விட 100 மடங்கு அழகாக இருந்தது அவர் கையெழுத்து. அதைச் சொல்லியும் விட்டேன். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் படிவங்களைக் கொடுத்ததும் அவர் ஒரு சீல் அடித்து உங்கள் ரேஷன் கடையில் சென்று பெயர் நீக்கி விட்டதாக எழுதிக்கொண்டு வாருங்கள் எனச் சொல்லி அனுப்பினார். அதையும் செய்துகொண்டுவந்து கொடுத்தேன். எல்லாம் 3 மணி நேரத்திற்குள் முடிந்தது. வாங்கிக்கொண்டவர் காற்றில் சொல்வதுபோல 50 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார்.. யார்ட்ட சொல்றீங்க எனக்கேட்டதும் வெள்ளிக்கிழமை கிடைக்கும் சார், போய்ட்டு வாங்க எனச் சொல்லி அனுப்பினார். சொன்னபடியே பெயர் நீக்கிச் சான்றிதழும் கிடைத்தாகிவிட்டது. நாம் மட்டும் கொஞ்சம் நாசூக்கு பார்க்காமல், 50 ரூபாதான என லஞ்சத்தை ஊக்குவிக்காமல் இருந்தால், இருநாட்களுக்கு பதில் நான்கு நாட்கள் கழித்து ஒப்புதல் கடிதங்களை பெற்றுக்கொண்டால் ஓரளவேனும் லஞ்சத்தை குறைக்கலாம். 50 ரூபாயில் என்ன ஆகிடப்போகுது என நினைக்கும் மக்கள்தான், நாளைக்கு எவன் அலைவான் என சோம்பேறித்தனம் படுவோருமே அரசாங்கத்தில் கடைநிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு கை நீட்ட சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது என் அபிப்ராயம்.

------------

என் பள்ளிக்கால நண்பனான செல்வராஜை மீண்டும் சந்தித்தேன்.. அவனைப்பற்றி பிளாக்கிலோ ஃபேஸ்புக்கிலோ எழுதிய ஞாபகம். போலிஸ்காரர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து 42 வயதுக்குள் முதுமை வந்து பார்க்கவே பரிதாபமாய் இருந்தான். குடி ஆளை உருக்கி எடுத்துவிட்டது. கை நீளம் என்பதால் போலிஸ் ஸ்டேஷன் அடிக்கடி சென்றுவருவதால் குடும்பத்தினரும் அவனை கைவிட்டுவிட்டனர். லோடுமேனாக வேலை செய்து வருகிறான். எலேய் ஜெயக்குமாரு என அன்போடு வந்து கைகுலுக்கினதில் தெரிந்தது பள்ளிக்கால நண்பனை மீண்டும் சந்தித்ததில் கிடைத்த மகிழ்ச்சி. நான் லோடுமேனாகா ஆகி இருக்கமாட்டேன் என்றாலும் எதேனும் ஒரு துணிக்கடையிலோ, உரக்கடையிலோ வேலை செய்துகொண்டிருந்திருக்கக் கூடும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போயிருப்பின்.. இப்படி ஒப்பிட்டு அப்பாடா தப்பிச்சோம் என மனது மகிழ்ச்சி அடைந்தது குரூரமான எண்ணமாக இருப்பினும், அவனைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் தோன்றியது அதுவே.

--------------

04.12.2014 அன்று அபுதாபி விமான நிலையத்தில் பெங்களூர் செல்லும் ஒருவரை மெக்டொனால்ட்ஸில் டேபிளின் எதிர்பக்கமாய் அமர்ந்திருந்ததால் பேச ஆரம்பித்தேன். வழக்கமான இந்திய மகன்களின் பிரச்சினைகளான லண்டனுக்கு கூப்டுட்டு போய் ஆறுமாசம் நல்லா வச்சிருந்தேன், ஆனா ஊருக்கு போறதுலையே குறியா இருந்தார் பெங்களூரைவிட்டு எங்கையும் வரமாட்டேங்கிறார். நமக்கு பொழப்பெல்லாம் இங்க இருக்கும்போது அங்க அவர் தனியா இருக்குறத நெனைக்கும்போது பயமா இருக்கு, தனியா இருக்கும்போது கீழ விழுந்துட்டா என்னாகுறது இப்படியாக. மற்றவர்களைப்போல துபாய்தான் எமிரேட்ஸின் தலைநகரம் என நம்பிக்கொன்டிருந்தார் அரபுநாடுகளில் நம் மக்கள் எல்லாம் காந்தியடிகளின் வாரிசாகவும் அரபிகள் எல்லாம் ராட்சசர்கள் எனவும் நம்பிக்கொன்டிருந்தார். பேச்சு அரபு நாடுகள், ஈரான், ஈராக். இந்திய சினிமாக்கள், மதுரை, பெங்களூர் என சுற்றி வந்தது. வாங்கியிருந்த வெஜ் பர்கரும். சிப்சும். காபியும் காலியானதும் போன் நம்பரோ, ஈமெயிலோ வாங்க்கிக்கொள்ளாமல் விடைபெற்றுக்கொண்டோம். ஈரானிய சினிமாக்களும் பார்க்கும்படி இருக்கும் என்றதும் ஈரானில் சினிமா எல்லாம் எடுப்பார்களா என ஆச்சரியப்பட்டார். ஈரான் முழுக்க பாலைவனம் என நம்பிக்கொன்டிருந்தார். எல்லோரும் கேட்கும் கேள்வியான ஈராக்கிலா வேலை என்பதையும் கேட்டார். அப்பாவை பார்க்க போய்க்கொன்டிருப்பதாக சொன்னார். ஆறுமணி நேர ட்ரான்சிட்டில் ஒரு மணி நேரம் நன்றாய் கழிந்தது.

மேற்குலகை குறைசொல்லும் இஸ்லாமியருக்கு ஒரு பாக்கிஸ்தானியின் பதில்

மேற்கைப் பற்றி குறைகூறும் பாக்கிஸ்தானிய டீவியினருக்கு சரியான செருப்படி தருகிறார் இந்த ஹஸ்ஸன் நிஸார். 

பாக்கிஸ்தானிகளுக்கு இஸ்லாமிய நாடுகளில் முக்கியத்துவமே இல்லையா எனக் கேட்கிறார்.. ஹஸ்ஸன் நிஸ்ஸார் :- சிம்பாலிக் முக்கியத்துவம் கூட கிடையாது. அல்லா மன்னிக்கட்டும், இஸ்லாமியர்களைப் பற்றி பேசுவதை விடுங்கள். 

எந்த இஸ்லாமிய நாட்டிலும் சென்று எந்த முஸ்லிமும் சொத்து பத்து வாங்க இயலாது. அந்த நாட்டு குடியுரிமை வாங்க இயலாது. அந்த நாட்டு பெண்களை திருமணம் செய்ய இயலாது தனது பெயரில் தொழில் செய்ய இயலாது 

மேற்குலகிற்குச் சென்று மேற்சொன்ன அனைத்தையும் செய்கிறீர்கள், செய்ய இயலும். அந்த நாட்டு குழந்தைகளை திருமணம் செய்துகொள்கிறீர்கள், அந்த நாட்டு நாட்டுகாரனாக (நீ) இல்லாமலிருந்தபோதும்.. அந்த குழந்தைகள் உங்களுடன் இணைந்தும் விடுகின்றன அங்கே சென்று தொழில் செய்கிறீர்கள், இதன் பின்னரும் உங்களுக்கு வெட்கமாக இருப்பதில்லை.. (மேற்குலகை குறைசொல்ல) 

இன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் எனச் சொல்லப்படும் நாடுகளில் சென்று முகத்தைக் காட்டித்தான் பாருங்களேன்.. எந்த நாடு என ஏன் பெயர் சொல்ல வேண்டும்?,நான் என்ன சொல்றேன்னு உனக்கு விஷயம் புரியுதில்லையா? மரியாதையை முழுதும் அழித்து விடுகின்றனர்.. காஃபில் என்ற பெயரில் எவனாவது ஒருவனின் கீழே உன்னைச் சேர்த்து விடுகின்றனர்..கொஞ்ச நாளில் வியாபாரம் நன்றாக ஆனபின்னர் அவன் உன்னை வெளியே தள்ளி விடுவான்.. இதெல்லாம் நீ ”உம்மா” என அழைக்கும் நாடுகள்தான் செய்கின்றன. அவர்கள் நேற்றுவரை பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர்கள்தான். 

பாக்கிஸ்தான் சுதந்திரம் பெறும் முன்னர் பிச்சைக்காரர்களைப்போல இங்கு வந்துகொண்டிருந்தனர். பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்ததும்.... அதுவும், பெட்ரோலையும் யார் எடுத்தார்கள்? யார் சொன்னா இந்த இடத்திலிருந்தும், இந்த சகதியிலிருந்தும் இத்தனை பொருட்களை (பெட்ரோலிய) செய்ய முடியும் என? இதன் பயன் இதுவென? எந்த ”உம்மா” சொன்னான்? (இப்படி காசு வந்ததும்) ஆங், நூத்துல ஒன்னு ரெண்டு நல்லவன் இருக்கலாம், 30, 40 வருஷமா வேலை செய்றான் அந்த நாட்டுல, (பாக்கிஸ்தானிகள்) ஆனா, குடியுரிமை கிடையாது..(இத்தனை ஆண்டுகள் அங்கிருந்த பின்னரும்) தனது பெயரில் தொழில் செய்ய இயலாது.. தனது பெயரில் சொத்து வாங்க இயலாது.. காஃபில் இல்லாமல் உனது சொந்த பெயரில் வங்கிக்கணக்கு ( தொழில் செய்ய) கூட தொடங்க இயலாது.. உங்களுக்கு வெட்கமாக இல்லையா, மேற்கை குறை சொல்லிப் பேசுவதற்கு? உங்களுக்காக கதவை அகலத்திறந்து வைத்துக்கொண்டு, வாருங்கள், இங்கே வந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என (சொல்பவனைப்பார்த்து) என்ன செய்யனுமோ இங்கே செய் எனச் சொல்பவனைப் பார்த்து.. (மேற்கின் பெண்களை) பெண்களை எக்ஸ்ப்ளாயிட் செய்தாலும் அவர்களுடன் திருமணம் செய்துகொண்டு, நாட்டின் குடியுரிமையைப் பெற்றபின்னர் அவர்களை விவாகரத்து செய்தாலும் என்ன தொழிலும் செய்தாலும்.. ஃப்ராடுத்தனம்கூட செய்தாலும்.. அவர்கள் (உங்களை உள்ளே வரவேண்டாம் எனச் சொல்லி) கதவை மூடுவதில்லை.. 

இதுல பெரிய ஜோக் என்னன்னா, அவங்க சாப்பிடுற விஷயங்களில் இருந்து நாற்றம் ஏதும் அடிப்பதில்லை. ஆனால், நம்மாட்கள் அங்கே சென்று பெருநகரங்களில் சமைத்து, துப்பி ஊரையே நாறடித்தாலும் உங்களுக்கு அவர்கள் வாசலை காண்பிப்பதில்லை, மாறாக உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அரவு உலகில் இருப்போர்களுக்கு வசதி வாய்ப்புகளுக்கு என்ன குறை? அவர்கள் ஏன் பத்திருபது லட்சம் பாக்கிஸ்தானியர்களுக்கு இடமளிப்பதில்லை? அவர்களுக்கு தெரியும் அங்கே இடமளித்தால் ஆனியடித்தாற்போல உட்கார்ந்துவிடுவார்கள் என.. 

உம்மா (Ummah) - நாடு அல்லது தேசம் --------------- மனசாட்சியுடன் பேசும் ஒரு பாக்கிஸ்தானியை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்.