Thursday, July 29, 2010

கத்தார் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம்

பொதுவாய் மன்னராட்சி நடக்கும் நாடுகளில் அரசு மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளை விமர்சிக்க முடியாது. கத்தாரில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அதிகம். அரசுத்துறையின் மெத்தனத்தை 12 நாட்களாக தினமும் வெளியிட்டு வருகிறது த பெனின்சூலா என்ற தினப்பத்திரிக்கை. இதை அகற்றும்வரை தினமும் படம் வெளியாகும் எனவும் சொல்கிறது. படத்தை பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.இங்கையும் நம்மூரு மாதிரிதான் அப்படினு ஒரு சின்ன சந்தோஷம்..

Photo courtesy by The Peninsula

Tuesday, July 27, 2010

ரகு ராய் - பேட்டி

சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்பில் வெளியான திரு.ரகுராய் அவர்கள் அளித்த பேட்டியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

Monday, July 26, 2010

இன்று கார்கில் வெற்றி தினம்நம்மில் எத்தனை பேருக்கு இன்று கார்கில் வெற்றி தினம் ( ஜூலை 26) என்பது தெரியும்? நமது தாய் நாட்டின் பாதுகாப்பிற்காய் உயிர் நீத்த அந்த தீரர்களை நாம் மறக்கலாமா?

கார்கில் போர் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மலைப்பிரதேசத்தில் இந்திய - பாகிஸ்தானிய எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை மீறி பாகிஸ்தானிய ராணுவமும், அதனால் பயிற்றூவிக்கப்பட்ட பயங்கரவாதக் கும்பலும் இந்திய எல்லைக்குள் உள்நுழைந்ததால் ஏற்பட்ட போராகும் இது. 1999 ஆம் ஆண்டும் மே மாதம் முதல் ஜூலை வரை நடந்த இந்தப் போரில் இந்தியா வென்றது. பாகிஸ்தானும் ,இந்தியாவும் தங்களது பரஸ்பர ராணுவ பலத்தை அதிகப்படுத்த இந்தப்போர் காரணமாக அமைந்தது. இந்தியா இந்தச் செலவையும் சமாளித்து இந்தியா முன்னேறிக்கொண்டிருக்க, பாகிஸ்தானின் வளர்ச்சி கீழ்முகமாகச் சென்றது. இன்றைக்கு அமெரிக்கா பணம் அனுப்பினால்தான் நாடு மூழ்காமல் தப்பிக்கும் என்ற நிலையில் இருக்கும் நாடு.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் வளர்த்துவிடப்பட்ட பயங்கரவாதிகளும், பாகிஸ்தானிய ராணுவமும் இணைந்து இந்தியா மீது தொடுத்த தாக்குதலில் பல வீரர்களை பலியாகத்தந்து ( அரசுக் கணக்குப்படி 449பேர்) அடைந்த வெற்றி இது.

மனித உரிமைகள் பேசும் மாக்களுக்குத் தெரியுமா, நமது ராணுவ வீரர்கள் போரிட்டுக்கொண்டிருப்பது மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியக்காரர்களிடம் என்பது? அவர்களிடம் சென்று அன்பும், கனிவும் கொண்டு பேசிக்கொண்டிருந்தால் நாம் நமது நிலப்பரப்புடன் சேர்ந்து நமது வீரர்களையும் இழக்க வேண்டியதுதான்.

கார்கில் மட்டுமின்றி தினமும் எல்லையைக் காக்கும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும், எல்லைகளை இழக்காமல் காக்கும் முப்படை வீரர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவிப்போமாக..போரில் உயிர்நீத்த வீரர்களின் பட்டியல் இது


போரில் பங்கு பெற்ற வீரர்களுக்குக் கிடைத்த பதக்கப் பட்டியல் இது

Wednesday, July 21, 2010

மதராசப்பட்டிணம்


கல்பாத்தி எஸ்.அகோரம் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தமிழில் மிகவித்யாசமான படங்களாய் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதலில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, பின்னர் இரும்புகோட்டை முரட்டுச் சிங்கம்.. என்ற வரிசையில் இப்போது மதராசப்பட்டிணம்.

இது தவிர வேறு எத்தனை நல்ல படங்கள் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த எல்லாப்படங்களுமே ஒவ்வொரு வகையில் பிரம்மாண்டம்.

23ம் புலிகேசியில் ராஜா காலத்துக் கதையை வைத்து பிரம்மாண்டம்

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தில் கௌபாய் கதையை வைத்து பிரம்மாண்டம்

மதராசப்பட்டிணத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தையும், தற்போதைய தமிழகத்தையும் காட்டுவதில் பிரம்மாண்டம்.

படத்தின் ஆகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சியும் நம்பும்படி இருப்பது. அதீத வில்லத்தனமோ அல்லது ஹீரோத்தனமோ இன்றி படம் முழுக்க இயல்பாய் நகர்கிறது.

ஒரு பிரிட்டனைச் சேர்ந்த பாட்டி இன்றைய சென்னையில் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுதான் கதை.

ஒரு ஆதர்ச காதல் கதை எனச் சொல்லலாம். ஆனால் காதலர்கள் சேர்வதில்லை. சேர்த்து வைத்திருந்தால் என்னவாம் என இயக்குனரை மனதிற்குள் கேட்கும்படி அமைந்த கதையும், திரைக்கதையும், காட்சிகளும் கலக்கல்.


நம்ம பழைய மதராஸையும், வெள்ளையர்களின் மதராசப்பட்டிணத்தையும் இன்றைய சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த வெள்ளைப்பாட்டி தனது நினைவிலிருந்து நமக்குக் காண்பிக்கிறது.

பாட்டியின் கனவிலியில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே நிகழ்காலச் சென்னைக்கும், முன்நாளைய மதராசப்பட்டிணத்திற்குமாக மாற்றி மாற்றிக் காண்பிக்கும்போது நாமும் அதை இயல்பாய் ரசிக்கிறோம். சென்னை மக்கள் வெள்ளத்தால் எப்படி அடையாளமற்றுப்போய்விட்டது என்பதும் தெரிகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் என்பது வயது பாட்டிக்கு திடீரென உடல்நலம் குறைகிறது. மூளையில் ரத்தம் கட்டியிருக்கிறது என மருத்துவர் சொல்கிறார். வாய்ப்பே இல்லையே..எப்படி எனக் கேட்கிறார்கள் மகளும், பேத்தியும்? சிறுவயதில் எப்போதாவது தலையில் அடிபட்டிருக்கும், அதனாலதான் எனச் சொல்கிறார் மருத்துவர்.ஒரு வாரத்தில் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும், பிழைக்க 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது என சொல்கிறார் மருத்துவர்.

இதைக்கேட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்ப ஆரம்பிக்கிறது. இந்தியாவில் பாட்டிக்கு ஏற்பட்ட காதலும், கட்டாயத்தால் இங்கிலாந்து திரும்பும்போது அவளிடம் காதலன் சொன்ன வாக்கும், கொடுத்த பரிசும் நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் கிடைத்த உடன் நாட்டைவிட்டு வெளியேறும் வெள்ளையர்களுடன் அவளும் வம்படியாய் இழுத்துச் செல்லப்படுகிறாள். பாட்டிக்கு வைத்தியம் செய்ய ஒரு வாரம் இருக்கும் நேரத்தில் பாட்டியிடம் இருக்கும் தாலியை ( காதலன் இந்தியாவில் கொடுத்தது) பழைய காதலனின் மனைவியிடம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்குச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கிறது. தற்போது சென்னையாகியிருக்கும் மதராசப்பட்டிணத்தில் சென்று தனது அழகிய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுடன், தனது பழைய காதலனைக் கண்டுபிடிக்கவும் முயல்கிறது.

வில்லனாக நடித்தவரும் கலக்கியிருக்கிறார்.


பழைய வண்டிகள், சாலைகள், மனித முகங்கள், வண்ணாரப்பேட்டை இடங்கள், நமது நட்டின் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தம், அந்நாளைய பிரிட்டிஷார், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டுள்ளன.

மல்யுத்தம் படத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறது. வண்ணாரப்பேட்டையிலிருந்து மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்து அதற்கு வெள்ளைக்கார கமிஷனர், ’என்னை மல்யுத்தத்தில் வென்றால் இங்கு வரும் கட்டிடங்களை தடுத்து நிறுத்துவேன். உங்கள் இடம் திரும்ப வழங்கப்படும்’ என்கிறான். அதற்கு மல்யுத்தம் நடக்கிறது. படத்தில் அடிக்கடி மல்யுத்த விளையாட்டு காண்பிக்கப்படுகிறது. வஸ்தாதாக நாசர். மல்யுத்தப் பற்சியாளராகவே இருக்கிறார் படம் முழுக்க. சொல்வனத்தில் வெளியான மைசூர்பட்டணத்து மல்லர்கள் நினைவிற்கு வந்துபோனது. நாம் நமது பாரம்பரியக் கலைகளை காலில் போட்டு மிதித்துவிட்டு ஜென்டில்மேன் விளையாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

கூவம் நதியில் கிழவியும், காதலனும் படகில் சவாரி செய்யும் நினைவும், அழகோ அழகு.. செட்டிங்தான் என்றாலும் இப்படி ஒரு சுத்தமான நதியை சாகடித்துவிட்டோம் என நினைக்கையில் மனது கனக்கிறது. நமது அரசியல்வாதிகள் கூவத்தை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம்.


வெள்ளையர்களின் அல்லக்கையாக கொச்சின் ஹனீஃபா வந்து செல்கிறார். சுமரான ரோல். உயிருடன் இருந்தபோது நடித்த கடைசிப் படமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

கதாநாயகியாக வரும் எமி அழகோ அழகு. நமது கதாநயகிகளுக்கு சரியான போட்டியாவார். அவ்வளவு இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்தும் முகம். இந்தியச் சாயல் அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பலம்.

அவரது சொந்த ஊரில் அவர் உடை உடுத்தப் பிரியப்படுவதில்லை எனக் கேள்வி. எப்போதும் முடிந்தவரை திறந்தமேனியாக இருப்பாராம். ஆனால் இந்தப்படத்தில் இவரைவிட வேறு யாரும் நன்றாய் நடிக்க முடியாது எனத்தோன்றுகிறது.

பாட்டியாய் நடித்திருப்பவரும் மனதை கொள்ளைகொள்கிறார். இறுதியில் கதாநாயகனோடு சேர்த்து வைத்திருக்கலாம். அவ்வளவுதூரம் மெனக்கெட்டு இந்தியா வந்த அவருக்கு காதலனின் கல்லறையும், அந்நாளைய துபாசுவி(கொச்சின் ஹனீபா)ன் போட்டோவும்தான் பார்க்கக் கிடைக்கிறது. காதலன் தனாது நினைவாய்ச் செய்து வைத்திருக்கும் தர்ம ஸ்தாபனங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனது கல்லறையிலேயே உயிரை விடுவதுடன் சுபம்.

ஒரு மெல்லிய காதல்கதையை அப்படியே தேசப்பற்றில் முக்கி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கதை. அதை நல்லவிதமாயும் எடுத்துள்ளார்கள்.

பார்க்கலாம்.

Tuesday, July 20, 2010

தோற்றுப்போன நாடுகள்?

தமிழ் ஹிந்துவில் வெளீயாகியுள்ள எனது கட்டுரையான தோற்றுப்போன நாடுகள்? படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, July 13, 2010

வாழத்தெரிந்த மனிதன் வாரன் பஃப்பெட் ( Warren Buffet)


நான் பணக்காரனாவேன் எனக்கு எப்போதுமெ தெரிந்திருந்தது. அதைப்பற்றி ஒரு நிமிடம்கூட சந்தேகித்ததாக ஞாபகமில்லை - வாரன் பஃப்பெட்.


வாரன் பஃப்பெட்டைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு

அதிகமில்லை வெறும் 31 பில்லியன் டாலர்தான் உலக மக்களின் நலனுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.

பில்கேட்ஸ் இவரிடம் பேச அரைமணிநேரம் ஒதுக்கியிருந்தார்.. பஃப்பெட் பேச ஆரம்பித்த பின்னர் அந்த உரையாடல் 10 மணி நேரத்திற்கு நீண்டது.

பஃப்பெட்டின் சமீபத்திய கோரிக்கை - பணக்காரர்கள் தங்களது செல்வத்தில் பாதியை நன்கொடையாகத் தாருங்கள் என்பதே.

சி.என்.பி.ஸி தொலைக்காட்சி அவரிடம் எடுத்த பேட்டியின் சாராம்சம் இது.

வாரன் பஃப்பெட் தனது 11ம் வயதில் பங்குச் சந்தையில் தனது முதல் பங்கை வாங்கினாராம்.. ரொம்ப லேட்டாக முதலீடு செய்துவிட்டேன் என இப்போது வருந்துகிறார்.

பெரியவர்களுக்கு அவர் சொல்வது “குழந்தைகளை முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.”

தனது 14வது வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவதில் சேமித்த தொகையைக்கொண்டு ஒரு பண்ணைவீட்டை வாங்கினார்.

அவர் சொல்வது சிறுகச் சிறுகச் சேர்த்தே பல பொருட்களை வாங்கிவிட முடியும்.
உங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு தொழில் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

வாரன் ப்ஃபெட் வசிப்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில். அதுவும் அதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனபோது வாங்கியது. அவர் அதில் அவருக்கு வேண்டிய எல்லா வசதியும் இருக்கிறது என்கிறார். வீட்டைச் சுற்றி கோட்டைச் சுவரோ அல்லது வேலியோ கிடையாது. ஒரு பணக்காரர் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதற்கு நேரெதிரான வீட்டில்.

அவர் சொல்வது உங்களது தேவைக்கு மேல் எதையுமே வாங்காதீர்கள். அதுபோன்றே உங்கள் குழந்தைகளை சிந்திக்கவும் செயல்படவும் வையுங்கள்.

தனது காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனர் வைத்துக்கொள்வதில்லை. பாதுகாப்பிற்கும் ஆள் வைத்துக்கொள்வதில்லை.


அவர் சொல்வது “ நீங்க நீங்கதான்” நம்மால ஓட்ட முடிஞ்சப்போ நமக்கு எதுக்கு டிரைவர்?

அவர் வெளியூர் செல்ல தனக்கென பிரைவேட் ஜெட் வைத்துக் கொள்வதில்லை. இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?

உலகின் மிகப்பெரிய ஜெட் கம்பெனியின் முதலாளி இவர்.

அவர் சொல்வது உங்கள் வேலைகளை எவ்வளவு சிக்கனமாக ஆக்கிக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இவரது கம்பெனியின் பெயர் ”ஹாத்வே பெர்க்‌ஷையர்” 63 கம்பெணிகளைக் கொண்டது. இவர் அந்தந்த கம்பெணியின் மேளாளர்களுக்கு ஆண்டிற்கு ஒரே ஒருமுறை அடுத்த ஆண்டிற்கான வியாபாரக் குறிக்கோள்களைக் குறித்து கடிதம் எழுதுகிறார். மீட்டிங் போடுவதோ, அவ்வப்போது கூப்பிட்டு பேசுவதோ இல்லை.

அவர் சொல்வது சரியான இடத்தில் சரியான ஆளைப் போடுங்கள். திருவள்ளுவர் இதை 2000 வருஷம் முன்னாடியே சொல்லிவிட்டார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் அப்படினு.

அவரது கம்பெனியின் தலைமை செயல் அலுவலர்களுக்கு இரண்டே இரண்டு விதிமுறைகள்தான் கொடுத்துள்ளார்.

விதிமுறை ஒன்று: உங்கள் பங்காளர்களின் பணத்தை எப்போதும் இழக்காதே.

விதிமுறை இரண்டு : விதிமுறை ஒன்றை மறக்காதே.

அவர் சொல்வது, ஆட்களுக்கு குறிக்கோள்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதன்மீதே கவனம் வைத்திருக்கிறார்களா என்பதை மட்டும் பாருங்கள்.

பெரிய மனிதக் கூட்டத்துடன் சேர்ந்திருப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவரது பொழுதுபோக்கு பாப்கார்னைப் பொரித்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதுதான்.

அவர் சொல்ல வருவது...பெருமை பீற்றிக்கொள்ளாதீர்கள். பெருமைக்காக உங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.

வாரன் பஃப்பெட் மொபைல்போன் வைத்துக்கொள்வதில்லை, ஒரு கம்ப்யூட்டர்கூட கிடையாது அவரது அலுவலகத்தில்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ், வாரன் பஃப்பெட்டை சந்திக்க அரை மனி நேரம் ஒதுக்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஒத்த விஷயங்கள் என எதுவும் கிடையாது என நினைத்துக் கொண்டு. ஆனால் அந்த சந்திப்பி 10 மணி நேரத்திற்கு நீண்டது. சந்திப்பு முடிந்தபோது பில்கேட்ஸ் வாரன்,கிட்டத்தட்ட பஃப்பெட்டின் பக்தனாகிவிட்டார்.

இளம் வயதினருக்கு வாரன் பஃப்பெட் சொல்வது..

கடன் அட்டைகளிலிருந்து தூர விலகி இருங்கள்.. உங்களையே நீங்கள் முதலீடாக்கி நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது

01. பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான்.

02. எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்.

03. மற்றவர்கள் சொல்வதைச் செய்யாதீர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யுங்கள்.

04. பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள்.

05. தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்...

06. இது உங்கள் வாழ்க்கை, இன்னொருவர் உங்களை ஆள ஏன் வாய்ப்புத்தரவேண்டும்?

மகிழ்சியான மக்களிடம் எல்லா சிறந்தவைகளும் இருக்கவேண்டியதில்லை..அவர்கள் இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.

எவ்வளவு ஈசியா இருக்கு?

அவர் மேற்சொன்ன கருத்துக்களின் ஆங்கில வடிவம் ஸ்லைட்ஷோ வடிவில் கீழே


Saturday, July 10, 2010

சேத்தன் பகத் அவர்களின் உரையின் தமிழாக்கம்


Speech by Chetan Bhagat at Symbiosis

Don't just have career or academic goals. Set goals to give you a balanced, successful life. I use the word balanced before successful. Balanced means ensuring your health, relationships, mental peace are all in good order.

There is no point of getting a promotion on the day of your breakup. There is no fun in driving a car if your back hurts. Shopping is not enjoyable if your mind is full of tensions.

"Life is one of those races in nursery school where you have to run with a marble in a spoon kept in your mouth. If the marble falls, there is no point coming first. Same is with life where health and relationships are the marble. Your striving is only worth it if there is harmony in your life. Else, you may achieve the success, but this spark, this feeling of being excited and alive, will start to die.

One thing about nurturing the spark - don't take life seriously. Life is not meant to be taken seriously, as we are really temporary here. We are like a pre-paid card with limited validity. If we are lucky, we may last another 50 years. And 50 years is just 2,500 weekends. Do we really need to get so worked up?

It's ok, bunk a few classes, scoring low in couple of papers, goof up a few interviews, take leave from work, fall in love, little fights with your spouse. We are people, not programmed devices.

"Don't be serious, be sincere."!

http://bookfiesta4u.com/forums/index.php/topic,929.msg1001.html#msg1001

------------------------------

வாழ்க்கையில் எப்போது பார்த்தாலும் வேலை, வேலை எனவோ, அல்லது குறிக்கோள் என்ற பெயரில் ஏதேனும் ஒன்றின் பின்னாலோ செல்லாதீர்கள்.


வேலை மற்றும் குடும்பத்தை சமநிலையில் வைத்திருக்கும், மற்றும் வெற்றிக்கான குறிக்கோள்களையே வைத்திருங்கள். ”வெற்றிக்கான” என்பதை குடும்பச் சமநிலைக்குப் பின்னரே வைத்திருப்பதைக் கவனியுங்கள்.

சமநிலை என நான் சொல்ல வருவது உங்கள் குடும்பம், உடல்நிலை, மற்றும் மனநிலை யாவும் சரியாக இருத்தல்.

தமிழில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயன் என்ன என்ற ஒரு பழமொழி உண்டு. அதுபோல இளமையில் வேலையின் பின்னாலும், குறிக்கோள்களின் பின்னாலும் ஓடிக்களைப்படைந்த நேரத்தில் கைநிறைய செல்வமும், பேரும், புகழும் இருந்து என்ன பயன்.. அதை அனுபவிக்க முடியாமல்

(வேலையினால்) முதுகுவலி வந்து அவதிப்படும்போது காரில் செல்லுதல் மகிழ்ச்சியளிக்குமா?

மனம் முழுக்க ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க ஷாப்பிங் செய்தல் என்பது மகிழ்ச்சியாய் இருக்க முசியுமா?

வாழ்க்கை என்பது நர்சரி பள்ளிகளில் நடத்தப்படும் கோலிகுண்டை ஸ்பூனில் வைத்து அதை வாயில் கவ்விக் கொண்டு ஓடும்போட்டி போன்றது. ஸ்பூனில் இருக்கும் கோலிகுண்டு விழுந்தபின்பு முதலில் ஓடி வந்து பயனில்லை.


வாழ்க்கையும் அதுபோன்றதே.

உறவுகளை பேணுதலும், உடல்நிலையைப் பேணுதலும் ஸ்பூனிலிருக்கும் கோலிகுண்டு போன்றதே. முதலில் வருவதற்கான உங்களின் முயற்சி, அல்லது வெற்றி என நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் ஒன்று எப்போது பயனுள்ளதாகும்? வாழ்க்கையில் எல்லாமும் ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன் இருக்கும்போது மட்டுமே

இல்லையெனில், நீங்கள் வெற்றியடையக்கூடும், ஆனால் உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்தத்தீப்பொறி, மற்றும் உயிர்ப்புடன் இருக்கும் அந்த உணர்வு மங்கத் தொடங்கி விடும்.

அந்த உயிர்ப்பை உயிருடன் வைத்திருக்க ஒரு வழி.

வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை என்பது சீரியஸாய் வாழ்வதற்காக அல்ல, நாம் எல்லாம் இங்கே தற்காலிகமாக வந்திருக்கிறோம்.

நாமெல்லாம் முன்பணம் செலுத்தப்பட்ட தொலைபேசி கார்டு போல என்றோ ஒரு குறிப்பிட்ட நாளில் காலாவதியாகக்கூடியவர்களே.

அதிர்ஷடமிருப்பின் மேலும் ஐம்பது ஆண்டுகள் வாழலாம். கிட்டத்தட்ட 2500 வார இறுதி நாட்கள் மட்டுமே.


நாம் இவ்வளவு தூரம் வேலை செய்தே ஆகவேண்டுமா?

சில வகுப்புகளுக்கு கட் அடிப்பதோ, சில தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுவதோ, சில நேர்முகத் தேர்வுகளில் தோற்பதோ, வேலையிலிருந்து சில நாட்கள் விடுமுறை எடுப்பதோ, காதலில் விழுவதோ, மனைவியுடன் சிறு, சிறு சண்டைகள் இடுவதோ, தவறே இல்லை.

நாம் மனிதர்கள், நாமொன்றும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் அல்ல..

உண்மையாய் இருங்கள், சீரியஸாய் அல்ல..

சேத்தன் பகத் அவர்களின் வலைமுகவரி இது

Friday, July 9, 2010

ஜெயமோகனின் அனல் காற்று.பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ.மோ நினைத்ததன் விளைவு இப்படியொரு அருமையான கதை. பாலுமகேந்திரா படமென்றாலே ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதைதான். ரெட்டைவால் குருவி, மறுபடியும், வண்ண, வண்ண பூக்கள் இப்படி.. அதே வரிசையில் அனல்காற்றும் ஆகியிருக்க வேண்டியது.. படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பட்டையைக் கிளப்பியிருக்கும். அவ்வளவு அருமையான கதை. குறிப்பாய் ஜெயமோகனின் நடிகர்களுக்கு எழுதையிருக்கும் வசனங்கள்.


அனல்காற்று அவரது வலைமனையில் தொடராய் வந்துகொண்டிருக்கும்போதே ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்..

// உங்களது அனல்காற்று மீண்டும் ஒரு அழகான உணர்ச்சிக்காவியம்.

மனித மனங்களின் போராட்டங்களும், சிக்கல்களும், உறவுகளுடனான வரைமுறை குறித்த கோடுகள் தாண்டப்பட்டுள்ளது உங்களது தொடரில். சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாயிருக்கும். இங்கு கத்தரில் பதினோரு மணிவாக்கில் உங்கள் அனல்காற்று தொடரை படித்த பின்பே நானும், என் மனைவியும் உறங்கசெல்வோம். அத்தனை அருமையாக இருந்தது.//

இன்று புத்தக வடிவில் படிக்கும்போதும் அதே உணர்ச்சியை பெற முடிகிறது.

அருன் என்பவனின் ஃபிளாஷ்பேக்கில் தொடங்குகிறது, கதை.

மொத்தக் கதையும் சந்திரா - அருண் - அருணின் அம்மா - சுசி இவர்களை மட்டுமே சுற்றி வருகிறது. மற்றவர்களெல்லாம் அப்படியே வந்து கதையில் வந்து போகிறார்கள் அல்லது கதை மாந்தர்களின் குணாதிசயங்களைக் காட்ட இதர உதிரி கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அருண் - சந்திரா - சுசி இந்த மூவருக்குள்ளும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், அருணை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் சந்திராவும்,

சந்திராவிடமிருந்து பிரிந்து தன்னை மட்டுமே மனைவியாய் ஏற்றுக்கொள்ளும்படிக் கெஞ்சும் அருணைக்காதலிக்கும் சுசியும்

கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் மகன் அருணுக்காக மட்டுமே தனது வாழ்க்கையைக்கடத்திய அருணின் அம்மா ஜி.எஸ் ஸும்...

தனது மகனிடம் ச்ந்திரா கள்ள உறவு வைத்திருப்பதை அறிந்தும் அதை நம்ப விரும்பாத ஜி.எஸ்ஸுக்கும், சந்திராவுக்குமான மனப்போராட்டங்களும்....

எத்தனை பேர் தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருப்பார்கள், அல்லது நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது இப்படிச் சிக்கி சீரழிந்திருப்பதைப் பார்த்திருந்தால் இந்தக் கதை நம்மை மிக நெருக்கமாய்த் தொடக்கூடும்.

ஆந்திராவில் ஒரிசா எல்லையை ஒட்டி ஸ்டெர்லிங் கம்பினிக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது (இப்போது ஊத்திமூடப்பட்டு விட்டது) இதுபோன்ற சூழ்நிலையில் இருந்த ஒரு நண்பன் எனக்கிருந்தான். ஸ்ரீநிவாஸ் எனப்பெயர். வீட்டில் கல்யாணத்திற்காக அவனை கடப்பாறையால் அவனது பெற்றோர்கள் நெம்பிக் கொண்டிருக்க, இங்கு இவன் தனி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான். குழந்தையும், கணவனும் இருக்கும் ஒரு உணவகம் நடத்தும் பெண்ணிடம். ஊருக்குச் செல்வதுகூட அவனது காதலியைக் கேட்காமல் செய்யமாட்டான். அவ்வளவுதூரம் அதில் மூழ்கி இருந்தான். இந்தக் கதையில் வருவதுபோல மேகமெல்லாம் விலகி நிர்மலமான வானமாக அவனது வாழ்க்கை அமைந்திருக்கும் என இப்போது நான் எண்ணிக்கொள்கிறேன். அதை நேரடியாகப் பார்த்ததுமுதல் அங்கு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். அவனும் குற்ற உணர்ச்சியினால் என்னிடமிருந்து விலகிவிட்டான்.

கதையின் ஆரம்பம் முதல், இறுதிவரை வரும் கொஞ்சம் கூட குறையாத டெம்போ இந்த புத்தகத்தை மிகச்சிறிய புத்தகத்தைப் படித்ததைப் போன்ற உணர்வளிக்கிறது. அவ்வளவு வேகமாகப் படித்துவிடுவோம். மேலும் மிக, மிகக் கூர்மையான வசனங்கள், உரையாடல்கள், மூவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சிகள், எல்லாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்திருந்து, அதைக் கதை வடிவில் படித்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர வைக்கிறது.

எப்படி இப்படி ஒரு கதைக் கருவை ஜெயமோகன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு ஆச்சரியம். தத்துவமும், நாட்டை குறித்த சிந்தனையும், இந்திய ஞான மரபும், இலக்கியமுமாக தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இந்தக் கதையை எழுதினார் என்பதும், இத்தனை தீவிரமாக எழுதினார் என்பதும் ஆச்சரியமே. அவரது பலமே இதுதான் என நினைக்கிறேன். ஆகக் கடினமான தத்துவங்களை எழுதிக்கொண்டே நகைச்சுவைக் கட்டுரையையும் அதே வாரத்தில், இல்லையெனில் அதே நாளில் எழுதும் திறன் இவருக்கு மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கெல்லாம் சாமி உள்ளேவந்து எழுதினால்தான் தத்துவமோ, அல்லது நாலுபேர் பரவாயில்லைனு சொல்ற மாதிரி கட்டுரைகள் மற்றும் பத்திகளை எழுத முடியும்போது, இவருக்கு இப்படி ஒரு திறன் இருப்பது அவருக்குக் கிடைத்த வரமே.

கதை முழுக்க அருன் - சந்திரா வரும் கட்டங்களும், பேசும் வசனங்களும், சூழ்நிலையும் நமக்கு ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பையும், உண்டாக்குகிறன. ஒருவேளை மனதளவில் நான் இன்னும் சின்னப்பையந்தானோ என்னவோ?

சந்திரா - வளர்ந்த மகன் இருக்கும்போது தன்னிடம் படிக்கும் மாணவனிடம் கொண்டிருக்கும் கள்ள உறவு, படிக்கும்போது சற்று அதீதமாய்த் தோன்றினாலும், இன்றைய செய்தித்தாள்களை தினமும் படிப்போருக்கு இந்த உறவுநிலை மிகச் சாதாரனமாய்த் தோன்றும்.

அருணின் தகப்பனாரின் கள்ள உறவு அதனால் உருவாகும் இன்னொரு குடும்பம். நமது தொலைக்காட்சி சீரியல்களுக்கு இந்தக் கதை கிடைத்தால் ஒரு மூன்று ஆண்டுகள் ஓடும் தொடர் எடுத்து விடுவார்கள்.

அனல்காற்று மூலம் உறவுகளின் அதிகபட்ச எல்லையை தொட்டு வந்திருக்கிறார் ஜெயமோகன்.

நல்ல வசனங்களுக்காககவும், ஜெயமோகன் கதை முழுக்க பொதுவாகவும் பெண்கள் குறித்தும்,சொல்லிச் செல்லும் தற்குறிப்பேற்றத்திற்காகவும், மிக வேகமான கதையோட்டத்திற்காகவும் இந்த நாவலை அவசியம் படிக்க சிபாரிசு செய்வேன். படித்து முடித்த பின்பு கிடைக்கப்போகும் ”எல்லாம் சுபம்” என்ற ஆசுவாசத்திற்காகவும் இதனைப் படிக்கலாம்.