Wednesday, October 3, 2007

ஷேக்குகளுடனான அனுபவங்கள்.

அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள் குறிப்பாக ஷேக்குகளை பனி நிமித்தம் சந்திப்பவர்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும்.

எங்க கம்பெனி ஷேக்கை பாக்கனும்னா அது இப்படித்தான்.

முதலில் அவரிடம் இன்று உங்களை சந்திக்க வருகிறேன் என எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

அவர் சந்திக்கலாம் என நினைத்தால் உடனே உங்களுக்கு தொலைபேசுவார் அல்லது பதில் அனுப்புவார்..

பெரும்பாலும் இரவு பதினோறு மனிக்கு மேலும் காலை மூன்று மனிக்குள்ளும் சந்திப்பு நடக்கும். சந்திப்பு பெரும்பாலும் மஜ்லிஸ் என அழைக்கப்படும் அவரது அலுவலகத்தில்.
ஷேக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான ஹாலில் பிரம்மாண்ட சைசில் தொலைக்காட்சி பெட்டியில் உள்ளூர் கால்பந்து போட்டி அல்லது ஏதேனும் ஒரு அரபி தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அதுதான் அவரது பொது அறை. ஏதேனும் பிற ரகசிய விஷயங்கள் பேசவேண்டுமெனில் ஒரு தனியறையும் உண்டு.
முதலில் யார் வந்தாலும் கவ்வா அல்லது காவா எனப்படும் ஒரு அராபிய காப்பி வழங்கப்படும். பால், சர்க்கரை இல்லாமல். பின்னர் அடுத்தடுத்து ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு உங்களிடமும் காவா வேண்டுமா என கேட்டுகொன்டே இருப்பார்கள். குடித்துவிட்டு கோப்பையை கையிலேயே வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஊத்து என அர்த்தம். அதை இடவலமாக ஆட்டினால் வேண்டாம் என அர்த்தம். கோப்பையை வாங்கிச்சென்று விடுவார்கள்.
உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் அனைவருக்கும் சலாம் அலைக்கும் என தனித்தனியாக சொல்வார்கள். ஒரு சிலர் சத்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் என இரண்டு கையையும் உயர்த்திவிட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்வர். இரண்டும் சரிதான். இது ஷேக் மஜ்லிஸுக்குள் வரும் முன்னர். ஷேக் வந்து விட்டால் ஷேக்கிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக கைகுலுக்கிகொண்டே வரவேண்டும். எல்லாருக்கும் கைகுலுக்கிய பின்னர் காலியாக இருக்கும் ஆசனத்தில அமரவேண்டும். நம்மைப் போல பல கம்பெனிகளுக்கு அவர் ஸ்பான்சர். எனவே முதலில் வந்தவர் முதலிலும் மற்றவர்கள் வரிசைகிரமமாக வரை சந்தித்து விஷயங்கள், மற்றும் பிரச்சினைகளை சொல்லலாம்.
இரவு உனவு அருந்தும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய தாம்பாளத்தில் மட்டன் பிரியானியோ அல்லது மாட்டு பிரியானியோ இருக்கும். நிறைய சைடு டிஷ்களும் இருக்கும். தாம்பாளத்திலிருந்து உங்களுக்கு வேன்டியதை அப்படியே எடுத்து சாப்பிட வேன்டியதுதான். என்னைப்போன்ற சாக பட்சினிகளுக்கு ஏதாவது குளிர்பானம் அல்லது பழரசம் தரப்படும். அதையும் அவர்கள் உன்னுமிடத்தில் அவர்களது உடன் அமர்ந்து குடித்தால் மகிழ்வார்கள். பொதுவாக மஜ்லிஸில் குறைந்தது பத்து பேர் முதல் இருபது பேர் வரை உனவு அருந்துவார்கள். உனவு நேரம் இரவு பனிரெண்டுக்கு மேல்தான் பொதுவாய் இருக்கும். ஷேக்கின் அல்லக் கைகள், எங்களைப்போன்ற ஷேக்கை சந்திக்க வந்தவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என பலரும் சாப்பிடுவார்கள்.

ஷேக்கை சந்திக்க சென்ற பின்னர் சம்பிரதாயமான வார்த்தைகள் பேசி முடித்த பின்னர் நமது பிரச்சினைகள் அல்லது தேவைகளை கூறிய பின்னர் சாத்தியம் அல்லது இல்லை என கூறிவிடுவார். மேற்கொண்டு பேச அனுமதியில்லை.

அவரது ஸ்பான்சர்ஷிப் கமிஷன் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும். உங்களுக்கு வரவேண்டிய பனம் வந்ததா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் ஷேக் கவலைப்பட மாட்டார்.

இவர் லண்டனில் சென்று படித்த ஷேக். இவரே இப்படி என்றால் மற்ற ஷேக்குகள் எப்படி இருப்பார்கள்????.

கம்பெனிகளிடம் முன்பனமும் வாங்கி கொண்டு கமிஷனையும் வாங்கி கொண்டு எந்த உதவியும் செய்யாமல் ( விசா வாங்கி தருவது, நாட்டை விட்டு வெளியேற ஒப்பமிடுவது, அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஒப்பமிடுவது போன்றவைகள்) அலைக்கழிக்கும் ஷேக்குகளும் உண்டு.

நான் பனிபுரியும் நாட்டில் அங்கிருந்து எங்கள் கம்பெனியின் ஸ்பான்சர் கையொப்பமிடாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது. அதற்கு எக்ஸிட் எனப் பெயர்.

அதில் குறிப்பிட்ட ஆள் நாட்டை விட்டு வெளியேறலாம் என அனுமதித்து ஒப்பமிட்டு தருவார் ஷேக். அதைகொண்டு போனாலொழிய ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாது. சில சமயம் ஷேக் வெளியூர் அல்லது வெளிநாடு பயனம் போய் அவரிடம் வேலை செய்பவருக்கு அவசரமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசரம் ஏற்பட்டால் ஷேக் திரும்பி வரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

பல ஷேக்குகள் நம்பிக்கையான பினாமி ஆட்களை வைத்திருப்பார்கள். ஷேக் இல்லாதபோது ஷேக்கின் கையொப்பத்தை அவர்கள் இடுவார்கள்.
பொதுவாக ஷேக்குகள் அரசு உத்தியோகத்தில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு வாரியத்தலைவர் போல சுற்றுலாத்துறை, அது இது என ஏதேனும் ஒரு துறையில் ஏதேனும் பொருப்பிலிருப்பார். எங்கள் கம்பெனியின் ஷேக் இந்த நாட்டு அரசரது ஜாதியை சேர்ந்தவர். அல் தானி என்ற இனத்தை சேர்ந்தவர். எனவே உளவு பிரிவில் மிக முக்கிய பொறுப்பிலிருக்கிறார்.

இது தவிர அராபிய ஷேக்குகளை பெயர் சொல்லி அழைப்பது அவர்களுக்கு பிடிக்காது.. ஷேக் .. ஷேக்.. ஷேக் மாத்திரமே.. அவர்கள் நீங்கள் உள்ளூரில் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும், இங்கு வந்து முதல் போட்டு தொழில் செய்தாலும் இந்த நாட்டு சட்டப்படி உங்களது ஸ்பான்சர்தான் முதலாளி உங்களது கம்பெனிக்கு. எனவே அவரை முறைத்துக்கொள்ளுதலும் சாத்தியமில்லை.

நானும் முதல் தடவ ஷேக்க பாக்க போகும்போது நம்ம தமிழ் சினிமால எல்லாம் பாத்திருக்கமே அதுபோல ஏதாவது ஒரு பொன்னு டான்ஸ் ஆடிக்கிட்டுருக்கும்னு நெனச்சிட்டு போனா அங்க பக்காவா ஆபிஸ் நடந்துகிட்டுருக்கு. சத்தமில்லாம வேலய முடிச்சிட்டு திரும்பி வந்துட்டேன். என்ன இருந்தாலும் இந்த ஊரில் ஒரு பரபரப்புடன் இயங்க வேண்டுமெனில் நமக்கொரு ஷேக்கு வேனுமடா.... அப்பத்தான காலையில பத்து மனிக்கு ஆபிஸுக்கு வந்துட்டு நேத்து ஷேக்க பாக்க போனனா காலயில 4 மனிக்குத்தான் வந்தேன் அப்படின்னும் படமும் போடலாம்...

10 comments:

Karthi said...

I don't know much abt arabian countries...But,Shakes are really
dangerous & in a way,Funny....

ஹரன்பிரசன்னா said...

:)

Chenage the font color of side bar items and tag items. Its in yellow color, its not readable.

ஹரன்பிரசன்னா said...

ண -க்கு பதில் நிறைய இடங்களில் ன இருக்கிறது. கவனித்து சரி செய்துவிட்டு போஸ்ட் செய்யவும்.

போஸ்ட் செய்யும்போது ஜஸ்டிஃபை செய்யவேண்டாம்.

Prakash said...

ஷேக்குகளால் ரொம்பவே "ஷேக்" ஆகிப் போகி இருப்பது நன்கு புரிகிறது.
அது சரி.
அரபு நாடுகளில் இருப்பதால் அலுவலக மற்றும் அரசாங்க விஷயங்கள் எதை எதை எழுதலாம் எதை எழுதக் கூடாது என்பதில் கொஞ்சம் கவனம் கொள்ளவும்.
மற்றபடி நல்ல முயற்சி.
பிரசன்னா சொல்வது போல, எழுத்துப் பிழைகளை நீக்கவும்.
(கொஞ்சம் பொறுமை தேவை)
-பிரகாஷ்.

ஜெயக்குமார் said...

நன்றி ப்ரசன்னா.. மாற்றங்கள் செய்திருக்கிறேன்.

ப்ரகாஷ்.. வருகைக்கும் கரூத்துக்களுக்கும் நன்றி.

ஹரன்பிரசன்னா said...

பிரகாஷ், ஷேக்குகளுக்கு தமிழ் தெரியாத வரையில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். :))

பத்மகிஷோர் said...

Interesting write up. Great going JK

Surya said...

ஜெயகுமார் கலக்குற!!
கத்தார் கத நல்லாருக்கு
ஒங்கோடவே இருந்து பாத்தா மாதிரிருக்கு
நெறய எழுது
படிச்சி தொலக்கிறோம்

அஹ் ஹஹ் ஹஹ் ஹஹா

வலமனலயும் கலாய்ப்போம்ல

rama said...

மிக நல்லாயிருக்கிறது. இது போன்ற சந்திப்புகள் எல்லாருக்கும் அமைவதில்லை. தமிழ் தெரியாது என்பதற்காக எச்சரிக்கை இல்லாமல் எழுத வேண்டாம். போட்டுக்கொடுக்கும் ஆள்கள் இருக்ககூடும்.

கலாச்சார புரிதல் சம்பவமாக இதை எழுதுங்கள், அவர்கள் திருமண சடங்கு முறைகள், கிராமிய இசை, உணவு என எழுதலாம். வாழ்த்துக்கள்

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னிக்குத்தான் முதன்முதலா உங்க பதிவைப் பார்க்கிறேன்.நானும் கட்டார்தான்.என் ஸ்பொன்ஸரும் 'அல்தானி' ஷேக் தான்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
இங்கு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுதுங்கள் :)