Tuesday, June 10, 2014

முத்தமிழ் வித்தோர்...

மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடைதன்னை அடைந்தேன்..

தென்னைபோல் வளர்ந்த ஒருவன் என்னைப்பார்த்துக் கேட்டான்.. அய்யா, என்ன எண்ணெய் வேண்டும் என்று..

அதற்கு நான் சொன்னேன், மண் எண்ணெய் வேண்டும் என்று..

அதற்கு அவன் சொன்னான், நல்லெண்ணெயும் நம்மிடம் உண்டு, கடலை எண்ணெயும் கடைக்குள்ளே உண்டு, பாமாயில் என்றொரு பகட்டு எண்ணெயும் பலகை மீது உண்டு, மண் எண்ணெய் இல்லை, என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்னை என்றான்..

அதற்கு நான் சொன்னேன், நல்லெண்ணெய் நமக்குதவாது, கடலெண்ணெய் கட்டுபடி ஆகாது, மண் எண்ணெய் உண்டா என்றேன்..

அதற்கு அவன் சொன்னான், மண் எண்ணெயை தர இயலாது என்றான்..

வாழ்க.. தமிழ் அன்னையை யாருக்கும் தர மறுத்த அந்த தலைமகன் வாழ்க..

இப்படி உளறிக்கொட்டினா, நீங்களும் முத்தமிழ் வித்தவர் ஆகலாம்..

இது மேற்படியார் சொன்ன டயலாக் இல்லை. ஆனால், இந்த ரேஞ்சில்தான் இருந்தது என்பதை மயில்சாமி, லக்‌ஷ்மணன்கள் 80களிலேயே சொல்லிவிட்டனர். ஆனால், இன்றும் படித்த, நாலும் தெரிந்த மக்கள் முத்தமிழ் வித்தவரை தமிழ் தொண்டாற்றியவர் என நம்பிக்கொண்டும், பாராட்டிக்கொண்டு இருப்பதைப் பார்க்கத்தான் ஆச்சரியமாய் இருக்கிறது.

No comments: