Tuesday, June 10, 2014

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோதி பதவி ஏற்பு

திரு.நரேந்திர மோதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பதவி ஏற்பு விழாவின் வீடியோவை முழுதும் இப்போதுதான் கண்டு முடித்தேன்..

முதலில் இத்தனை நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்ததே அவரது மிகப்பெரிய சாதனை. இப்படி ஒரு யோசனையை சொன்னவுடன் நம் மக்கள் எவ்வளவு கேவலமாய் பேசமுடியுமோ அவ்வளவு பேசினர். 

பாக்கிஸ்தான் பிரதமர் வரமட்டார்... இந்த அசிங்கம் தேவையா என அவர்களே ஆருடம் கூறினர். 

எல்லாம் முடிந்து எல்லோரும் சபையை அலங்கரித்தவுடன் இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய விழாக்களில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் ஒன்றாகிப்போனது.

பார்க்கும்போதே எவ்வளவு பெருமையாய் இருந்தது? முதல் வரிசையில் சாமியார்கள் அணிவகுப்பு.. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் மற்றும் இதர சாமியார்கள் என களை கட்டியிருந்தது.

மந்திரி சபையை இத்தனை சுறுக்கிய பின்னரும் எத்தனை பெண்கள் பதவி ஏற்றனர். பாக்கிஸ்தான் அதிபருக்கும், ஆப்கன் அதிபருக்கும் நிச்சயம் ஆச்சரியமாய் இருந்திருக்கும்..

டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா மட்டும் குரல் கொஞ்சம் ஓவராய் நடுங்கிவிட்டது.

ஒரு இஸ்லாமியர் தாமரை படம் பொறித்த சட்டையுடன் வந்திருந்து ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்தார்.

மான் வேட்டை மைனருக்கெல்லாம் ஏன் அழைப்பு எனத் தெரியவில்லை.

தமிழகம் அதன் மரியாதையை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலமும் நிர்மலா சீதாராமன் மூலமும் பெற்றுக்கொண்டது.

இறுதியில் போலோ பாரத் மாதாகி ஜி ஜெய் யும் கேட்டது.

அருமையாக எல்லோரும் வந்து கைகுலுக்கி நட்புகளை பரிமாறிக்கொண்டனர். முகமெல்லாம் பூரிப்பு இருப்பினும் மிக ஜெண்டிலாக நடந்துகொண்டார் மோடி.

இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறோமா இல்லையோ நிச்சயம் நமது அண்டை நாட்டாருக்குஎப்படிப்பட்ட குழுவுடன் நாம் தொடர்பில், உறவில் இருக்கப்போகிறோம் எனத் தெரிந்திருக்கும்.

பதவி ஏற்கும் முன்னரே தனது கடமையை ஆரம்பித்து அண்டை நாடுகளில் சிறையில் இருந்த மீனவர்களை விடுதலை செய்ய வைத்திருக்கிறார்,.

இது தொடரவேண்டும் என்பதே எனது ஆசை.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்...

நமது புதிய பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் வாழ்த்துகள் ..

தூர்தர்ஷன் இறுதியில் தாமரை மலர்வதைக் காட்டியது.. 


(27 மே 2014ல் எழுதியது)

No comments: