Monday, November 25, 2013

தமிழகத்தின் போலி ஞானிகளும், அறிவுஜீவி(?)களும்

மார்க்ஸ் போன்ற போலி பேராசிரியர்(?)களும், ஞானி என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அஞ்ஞானிகளும், என்னவோ நியாயத்தராசை எப்போதும் கக்கத்தில் வைத்துக்கொண்டு அலைவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைந்து அதை சில இணைய உபயோகிப்பாளர்களும் உண்மையிலேயே இவர்களெல்லாம் ஞானியும், பேராசிரியர்களும்தானோ என நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

அதற்குத்தக்காற்போல் அவ்வபோது உதாரும், பொய்யும், புனைசுருட்டும் கூடிய கட்டுரைகளை வெளியிட்டு பார்த்தாயா நான் எவ்வளவு உத்தமமானவன் என காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனல் அவர்கள் உண்மையில் செய்வது வரலாற்றை தவறாக பதிவு செய்து அதை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் எப்படியாவது உண்மையாக்கி விடமுடியாதா என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் மருதன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளும் அடக்கம்.

இப்படி பொய்யும், செய்திகளை திரித்தும் எழுதி அதில் அறச்சீற்றம் காண்பிக்கும் இந்த மூடர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் உறைக்கவேமாட்டேனென்கிறது. உண்மையே இறுதியில் நிற்கும் என்பதே அது.

உண்மையிலேயே மானம், ரோஷம், வெட்கம் எனச் சொல்லப்படும் வஸ்துகள் ஏதேனும் அவர்களின் உடம்பில் ஒட்டியிருப்பின் தவறாக செய்திகளை வெளியிட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். இதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதை தெரிந்தே சொல்கிறேன்.

படிச்சவன் சூது, வாதும் செய்தால் அய்யோனு போவான், அம்போனு போவான் எனச் சொன்னவன் பாரதி. ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் பொய்ப்பதில்லை.

இப்படி மனதறிந்து பொய் சொல்லும் கும்பல்கள் அய்யோனு போவதையும்,அம்போனு போவதையும் காணும் நாளுக்காய் காத்திருக்கிறேன்.

இந்துக்களை ஏளனம் செய்தும், இந்து மத சம்பந்தப்பட்ட விஷயங்களை சிறுமைப்படுத்தியும் பேசுவதும், எழுதுவதும்தான் இன்றைக்கு தமிழ்ச் சூழலில் முற்போக்கு. சரியான பதிலடி கொடுப்பதன் மூலம் இந்த விலைபோகும் கும்பல்களை ஒழிக்க வேண்டும். 

No comments: