பாக்தாதி (பாக்தாத்காரன்) ஷியா, சன்னியின் மசூதிக்குள் நுழைவதில்லை.. சன்னி, ஷியாக்கள் வாழும் பக்கமே போவதில்லை. போனால் அதுதான் அவர் எந்தப்பக்கமும் கடைசியாக போனதாக இருக்கும் என்பதால்..
இராக்கின் பெரும்பான்மை ஷியாக்களாக இருப்பினும் சன்னிகள் வாழும் பகுதிக்குள் போகவே பயப்படுகிறார்கள்.
இராக்கில் ஒரு இடத்தில் எங்கள் கம்பெணிக்கு வேலை ஒண்று வந்தது. வழக்கமாக பசுபதி எட்றா வண்டிய.. கெளம்புடா வேலைக்கு என்றால் துள்ளி வந்து வண்டியில் ஏறும் எனது ட்ரைவர்.. என்னைய பலிகுடுக்கப் பாக்குறியா என்றார் கொஞ்சம் கடுமையான குரலில். அவர் ஒரு ஷியா.
எனக்கு தெரிந்ததெல்லாம் இராக்கில் எங்கெங்கு எண்ணெய் வளம் அதிகம் என்பதும், எங்களுக்கு அதிகம் வேலை இருக்கும் என்பது மட்டுமே. உள்ளூர் அரசியல்களை தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. பின்னர் ஒரு வழியாய் நீ வரலைன்னா இன்னொரு ஆளை அனுப்பி வைன்னு சொன்னபின்னர் இன்னொருவரை அனுப்பி வைத்தார் எனது “பசுபதி”
வரமாட்டேன் எனச் சொன்னதற்கு காரணம் அந்தப்பகுதியில் சதாம்ஹுசைனின் ஆதரவாளர்கள் அதிகம் வாழ்கிறார்களாம். எனவே சதாமைக்கொல்ல உதவியதும் மற்றும் இன்று பதவியில் இருப்பவர்களும் ஷியா என்பதால் எந்த ஷியாவைக் கண்டாலும் ”செத்தாண்டா சேகரு” என்பதால்தான்.
இது தவிர இன்றைக்கு சன்னிகள் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தபடுவதாக ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. சதாம் ஆண்டதுமுதல் சாகும்வரை சிறுபான்மை சன்னிகள் ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஆடிய ஆட்டமென்ன என ஷியாக்கள் கேட்கின்றனர்.
இதுதவிர நாலு தெருவுக்கு ஒரு சர்ச் கட்டி வைத்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனையாவது தர குடிமக்களாய் இருப்பர் என்பதெல்லாம் யோசிக்க முடிவதில்லை.
எதற்கு மேலே சொன்னதெல்லாம் என்றால் புனித ரமலான் மாதத்தில்கூட ஓவர்டைம் போட்டு பாக்தாதிலும், சுலைமானியாவிலும், இதர முக்கிய இடங்களிலும் மாற்றி, மாற்றி குண்டுவைத்துக்கொண்டதில் கடந்த நான்கு மாதங்களில் பலியானோர் எண்ணிக்கை 2600. இந்த 2600ல் நான் இல்லை என்பதில் ஒரு அல்ப மகிழ்ச்சி.
http://www.usatoday.com/story/news/world/2013/07/13/iraq-mosque-blasts/2514797/

No comments:
Post a Comment