Sunday, November 24, 2013

‘நான் ஆட்சி செய்து வரும்’


திரு.சொக்கன் அவர்கள் எழுதியது..

’ஆதிபராசக்தி’ படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதி பி. சுசீலா பாடிய ‘நான் ஆட்சி செய்து வரும்’ என்ற அருமையான பாடலை நண்பர் Jeyakumar Srinivasan நினைவுபடுத்தினார்.

கண்ணதாசனின் சொல் அழகு அற்புதமாக மிளிரும் பாடல் இது:

* முதலில் நான்மாடக் கூடலுக்கு “நான் ஆட்சி”, அதற்கு இயைபாக மீனாட்சி
* அடுத்து, “கங்கை நீர் ஆட்சி”, அங்கே அருள் புரியும் விசாலாட்சி
* காஞ்சிப் பல்லவனுக்குக் ’கோன் ஆட்சி’, அங்கே இருக்கும் காமாட்சி
* நிறைவாக, நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் ஒருவருக்குக் காட்சி தரும் மாரியம்மன் வடிவம் என்பதால் ‘கொடுங்கோல் ஆட்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்

அடுத்த வரிகள் இன்னும் சிறப்பானவை, பாமரனுக்கும் புரியக்கூடிய தத்துவ விளக்கம்:

ஆறென்றும், நதியென்றும், ஓடை என்றாலும் அது
நீர் ஓடும் பாதைதன்னைக் குறிக்கும், நிற்கும்
ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

(பல பெயர்களில் இருந்தாலும், நான் ஒன்றே!)

இந்த வரிகளில் இன்னொரு விசேஷம், ‘மாறி’க்குப் பதில் ‘மாரி’ என்றும் படிக்கலாம், மாரியம்மனே பாடுவதாக அமைந்த பாடல் என்பதால் 

No comments: