Sunday, November 24, 2013

சாரு - சிறுகதை ( முயன்றிருக்கிறேன்)

சாரு சமைத்துக்கொண்டிருக்க காலிங்பெல் சத்தம்.. இந்த ஊரில் மொபைலில் அழைக்காமல் யாரும் கதவைத் திறப்பதில்லை.. அவ்வளவு பயம் மற்றும் முன்னெச்செரிக்கை. 

வந்திருந்தவன் சிங் எனப் பெயர்கொண்ட மலையாளி.. எந்தா சாரே.. ஊனு கழிச்சோ எனக் கோட்டுக்கொண்டே டின் பியரை டேபிளீல் வைத்தான். அது பியர் அல்ல.. விஸ்கி என புரிந்துகொள்ள சில நிமிடங்களானது..

முன்னேற்பாடாக இரண்டு பெப்சியும் இரண்டு செவன் அப்புடனும் வந்திருந்தான்.. நானும் வந்துவிட்டானே..போகச்சொல்லுதல் முறையா என நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஃபிரிட்ஜின் கதவைத் திறந்து சோடா இவ்விட கிட்டுன்னுதா எனக் கேட்டுக்கொண்டே ஒன்றை உடைத்தான்..

என்ன எளவு பஞ்சாயத்துடா இது என நினைத்துக்கொண்டிருக்கும்போதே இதெல்லாம் பழய பேப்பரல்லே என்க் கேட்டுக்கொண்டே டேபிளில் பரப்பினான்.

முதல் ரவுண்டு வரும்போது இந்நாட்டில் இதுவரை போன இடங்களையும், முதலாளி அவனை சக்கையாய் பிழிந்துகொண்டு வெறும் 2000 டாலர்களை மட்டுமே சம்பளமாய்த் தருவதையும் பற்றி புலம்பிக்கொண்டிருந்தான், தெளிவுடன்.

அடுத்த இரண்டாமத்து ரவுண்டில் ஏன் ஆப்கானிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இஸ்லாம் பரவியது என்பதைக்குறித்து சொல்ல முயற்சித்து உளரினான். எனக்கே அவன் சொல்வது உண்மையாய் இருக்குமோ என்று நம்பும் வகையில்..

அடுத்து அமெரிக்கா எப்படி ஈரானை வளைத்துவிட்டது என்றும் ஈரான் எப்படி தனிமைப்பட்டு சக்ரவியூகத்தின் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளது என்பதைக்குறித்தும் சிரித்துக்கொண்டே விளக்கினான். குடிபோதையில் அவன் உளரவில்லை என்பதை எனக்கு உணர்த்த மிகப்பிரயத்தனப்பட்டான்.

தயிர்சாதத்துக்கு குக்கரில் வைத்திருந்த அரிசி நன்கு குழைந்திருந்தது. சாரு சென்று வெங்காயம், பச்சை மிளகய், இஞ்சி இவற்றை நறுக்கி எண்ணெயில் வதக்கி சாதத்தில் போட்டான். மாலை டீக்கு போட்ட பால் மிச்சமிருந்தது. இனி எங்கு காஃபி குடிப்பது என அதையும் சோற்றில் கொட்டினான். தயிர் வாங்கியது டப்பாவில் மிச்சமிருந்தது, அதையும் கொட்டினான் சாதத்தில்.. பின்னர் நேற்று வாங்கிய மோரில் பெரும்பான்மை மிச்சமிருந்தது. அதையும் சாதத்துடன் சேர்த்தான்... கொஞ்சம் பெருங்காயத்தை நேரடியாக தூவி கொஞ்சம் தண்ணீர்விட்டு பிரட்டினான்.

கொஞ்ச நேரத்தில் சாதம் குழைவாக, நல்லரிசி மணத்துடன் உப்புக்காரத்துடன் ஆங்காங்கே வெங்காயம், பச்சை மிளகாயுடன் இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு சாரே, எனக்கு கொஞ்சம் இவ்விட கொடு. பச்சை மிளகாய் அச்சார் உண்டல்லே, அதையும் கொடுக்கனும் எனக் கேட்டு சாப்பிட்டு நல்ல ரசமல்லே.. எனக்கேட்டுக்கொண்டே போதையில் தள்ளாடிச் சென்றான். எதிர் வீடுதான்.. புதிதாய் வந்திருக்கிறான்..

சாருவுடன் பேச திரும்ப வந்து பேசிக்கொண்டிருக்கையில் கதவத் திறடா இந்தியனே.. என ஒரு கனத்த குரலில் சப்தம் வர கலைந்த போதையுடன் கதவைத் திறக்க ஒடினான்..

சாருவிற்கு கதவைத் திறந்ததுமுதல் அவன் ஒடியதற்கும் இடைப்பட்ட நேரத்தில் எப்படி அவனது கைப்பாவையாய் இருந்தோம் என ஆச்சரியாமக நினைத்துக்கொண்டே பெரிய இரும்புக்கதவை மூடினான்.

--முற்றும்

No comments: