Tuesday, June 10, 2014

பாரு தகதிமிதா எனும் ஒப்பற்றோன்..

என் பெயர் பாரு தகதிமிதா..

எனக்கு சில சந்தேகங்கள்..

உலகமே வியக்கும் அளவு எழுதுகிறேனே..(யார் சொன்னா? நான் தான் சொல்றேன்) அப்டி இருந்தும் ஊரெங்கும் போகுமிடமெல்லாம் செருப்படி மட்டுமே கிடைக்கிறதே, ஏன்?

உடலின் ஜனனேந்திரியங்களை வைத்து வாசகர் ஒவ்வொருவனையும் கிழி கிழி எனக் கிழித்துவிட்டு, நான் மனிதனை தெய்வமாக மதிப்பவன் என எழுதினால் ஏன் ஒருவரும் நம்புவதில்லை?

தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் என பட்டியல் வரும்போதெல்லாம் எத்தனை கதறி, கதறி கேட்டாலும் என்னை ஒரு பயலும் லிஸ்ட்டில் சேர்க்க மாட்டேனென்கிறான்.. இனி, நான் என்ன செய்ய வேண்டும்?

மகள் வயதுப்பெண்ணுடன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சாட்டிங் செய்தேன்.. ஊரே என்ன செருப்பால் அடித்ததே, ஏன்?

நான் கேவலமாக திட்டும் இன்னொரு எழுத்தாளனுக்கு (உத்தமன்) மட்டும் எப்படி 100 பேர், 150 பேர் என வாசகர் கூட்டங்களுக்கு வர தயாராய் இருக்கிறார்கள்? நான் வாசகர் கூட்டம் போட ஒவ்வொருவன் காலையும் (நாகரீகம் கருதி கால்) பிடித்து உருவ வேண்டியிருக்கிறதே..

பங்குனி சம்பல் செய்வது எப்படி என்பதை தானமாக கொடுத்தவனிடமே கேட்டு தெரிந்துகொண்டு அதையும் பதிவாக்கினேனே, அப்படியுமா என் எழுத்தை வாசித்து தமிழ் வாசகர்கள் மயங்குவதில்லை?

நெய், புளி, மீன், கருவாடு, இப்படி தமிழகத்தில் எங்குமே கிடைக்காத பொருட்களைத்தானே நான் என் வாசகர்களிடம் கேட்கிறேன், அதற்கு ஏன் என்னை பிச்சைக்காரனைப்போல பார்க்கிறார்கள்..?

போன தேர்விலேயே (இதை கடந்த 10 வருடங்களாக சொல்லி வருகிறேன்) என்னை உலகின் உச்ச எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால், என் எழுத்துகளை தீவிர வாசகர்கள்கூட மறுபடியும் அதே அரைத்த மாவா எனக் கேட்டு அழுகிறார்களே ஏன்?

நான் இலக்கியம் படைப்பதாக தீவிரமாக நம்புகிறேனே, ஏன் இந்த நம்பிக்கை வாசிப்பவர்களிடம் இருப்பதில்லை?

காசு இல்லாததால்தானே நான் 10 அப்பிங் போன்ற பார்களில் குடிக்கவும், மோல்வின் உள்ளாடைகளையும் வாங்கி அணிகிறேன்.. சில பல ஆயிரங்கள் மட்டும்தான் செலவு. இந்த செலவில்லாத பொருட்களை வாங்க என் வாசகர்கள் என நம்பும் மூடமக்களிடம் காசு கேட்கிறேன் தவறா?

தமிழ் சமூகம் என்றைக்கு என் எழுத்துகளைப் படித்து திருந்தி என் கணக்கிற்கு இன்னும் சில லட்சங்களை அனுப்பி தமிழ் எழுத்தாளனை வாழ வைக்குமோ, அன்றைக்கே இந்த தமிழ் சமுதாயத்துக்குவிடிவுகாலம்..

கொடுத்த காசை என்ன பேங்கில் போட்டா மகிழ்கிறேன், எழுத்துக்கான மூலப்பொருளைப் பெற தாய்லாந்து அழகிகளிடமும், மசாஜ் பார்லர்களிலும் தேடுகிறேன், இதுகூட தவறா? நான் எவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதுகிறேன் என்பதை முட்டை டிகிரியில் காணலாமே..

இனியாவது வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பட்டியலில் சேரும் தகுதி உடைய எழுத்தாளர்கள் பட்டியலிலாவது என்னைச் சேர்த்து விடுங்கள், சாவதற்கு முன்னர் ஏதேனும் ஒரு பட்டியலிலாவது என் பெயரை பார்க்க ஆசை.

சோகபுரம்
08.06.2014

விருமாண்டி (கமலின் மிகத்தேர்ந்த நடிப்பு)

விருமாண்டியில் கெளவி செத்த பிறகு புதைக்குறதுக்குள்ள கமலஹாசன் செய்யுற அளும்புக்கே இந்தப் படத்தை ஒரு 10 வாட்டி பாத்திருப்பேன்... கலக்கல் நடிப்பு..

கொத்தாளன் வீட்டுக்குள்ள நுழையும்போதே ஒப்பாரிக் கெளவி மாடவிளக்கேன்னு சுதி இல்லாம ஆரம்பிச்சிருது...

அப்டியே பேய்க்காமன் வந்து நிலத்தை நல்லமநாயக்கருக்கு கைமாத்தி விட பேச ஆரம்பிக்கிறது..

கமல்: தண்ணிய போட்டுட்டு சம்சாரம் வேனும்னு இருந்தா அவுசாரிட்ட போறேன் ..

கமல் (கழுத்தக் காட்டி) இந்த இங்கையும் ஒரு வெட்டு வெட்டிரு.. ஐயா சொன்னமாதிரி அப்பத்தா கூட குழியில எறங்கிர்ரேன்...

பேய்க்காமன்: அடக்கம் எங்க கெணத்துலையா? நம்ம வழக்கத்துலையே இல்லயேப்பா.. அப்பத்தா என்ன பிள்ளையாரா?

கமல்: அப்பத்தாள இந்த நெலத்துல பொதச்சா போலிஸ் என்ன கைது பன்னுமா? நீ என்னைய கைது பன்னுவியா?

கமல்: நல்லமநாயக்கனா இருந்தாலும் சரி.. கொத்தாள தேவனா இருந்தாலும் சரி,..

எங்க அப்பத்தா எனக்கு 5 சாமி கும்புடச் சொல்லி சொல்லிக்குடுத்திருக்கு.. நிலம் நீர் ஆகாசம் நெருப்பு காத்து... ஒரு சாமிய தப்ப விட்டாலும் பஞ்சம் வந்திரும்..

இங்க இருக்குற பணக்கார பயலுவல்லாம் ரத்தக்காட்டேரி மாதிரி தண்ண்ய உறிஞ்சி உறிஞ்சி இந்த வட்டாரத்துலையெ 250 அடில பம்பு செட்டு போட்டு உறிஞ்ச வேண்டியதா இருக்கே..



பெரிய மனுஷங்களா.. தப்பா பேசிட்டேன் .. மன்னிச்சிருங்கடா... 
( இந்த டயலாக் சொல்லும்போது கொத்தாளனும், நாயக்கரும் மண்டைய ஆட்டுறதும்..)

இங்கதான் வெவசாயம், போங்கடா... (இதச் சொன்னதும் தலையில அடிச்சிட்டு போறதும்.. )

(கெளவிய பொதைக்கிற குழியில தண்ணி வந்ததும்..) இது தண்ணி இல்லடா.. எங்க அப்பத்தா ரத்தம்டா என அழுவதும்,இந்த நெலத்த யாருக்கும் தரமாட்டண்டா எங்க அப்பாத்தா உடம்புடா என அழுவதும்...

நல்ல தமிழில் சொல்வதாய் இருந்தால் அமேசிங்.. சான்ஸே இல்லை..

உலக்க நாயகன் என அளும்பு செய்யும் கமலஹாசன் எப்பவாச்சும் இப்படி மனதை தொட்டு விடுகிறார்...

இஸ்லாமிய அடிப்படைவாதமும் அதன் விளைவுகளும்

ஒரு நாடு முழு இஸ்லாமிய தேசம் ஆகும்போது என்ன ஆகும் என்பதற்கு பாக்கிஸ்தான் ஒரு சிறந்த உதாரனம்..

இஸ்லாமியராய் இருந்தாலும் ஷியாவாய் பிறந்ததற்கு கொல்லப்பட்டவர்கள் அநேகம்.


//Jinnah made a mistake and I am ashamed of being a Pakistani. I am ashamed that I belong to a country that kills human rights lawyers and sitting governors, and issues death threats to university professors. I am ashamed that we cannot protect our women and children, and we cannot protect our men from the evil that is extremism and fundamentalism.

“Last year a polio worker was killed in Peshawar, and another shot dead in Khyber agency. Several were kidnapped in Bara. In January this year, gunmen killed five health workers taking part in a polio vaccination drive in Karachi. The highest refusal rates for polio vaccination were recorded in Karachi, because the people there have “little faith in public healthcare.” In North Waziristan, the Tehreek-e-Taliban Pakistan has forbidden vaccination since several years.

“Everything that is reported about Pakistan is about death, destruction, squabbling politicians, ailing children, extremists blowing up things, and a struggling economy.

“I raise my eyes to our neighbouring country, India. What would have happened if we were united? Maybe we would be polio free too. We share with our Indian brothers not only our DNA. Our food, language, clothes, lifestyles, etc are more like them than the Arabs we so badly want to mimic and ape.

Pakistan is a fledgling and failed state.”//

மேலே சொன்னதுதான் நடக்கும் இந்த அடிப்படைவாத கும்பல்கள் பலம் பெற்றால்..

இன்றைக்கும் தொழுகைக்குச் செல்லும் கூட்டங்களில் காலை எவ்வளவு தூரம் அகட்டி வைக்க வேண்டும், விரலை ஆட்டனுமா வேண்டாமா, தாடி வைத்தவன் மட்டும்தான் முஸ்லிம் என்ற அளவில் கூட்டங்கள் பெருகி வருகிறது.

பாக்கிஸ்தானை பார்த்தாவது தங்களை திருத்திக்கொள்ளாத கூட்டங்கள் அவசியம் திருத்தப்பட வேண்டும், நாளைய நமது சந்ததிகளுக்காகவும், சாதாரன இஸ்லாமியனின் சுதந்திரத்தை இந்த வெறிபிடித்த கூட்டத்திடமிருந்து காப்பாற்றவும்...

http://www.thehindu.com/opinion/op-ed/the-dangers-of-a-nonsecular-state/article6082666.ece

( ஈரோட்டு ராமசாமி நாயக்கர் பற்றியும், தி,க பற்றியும் எழுதி இருந்த பத்தியை எடுத்துவிட்டேன். இந்த இடத்தில் நான் எழுதிய குற்றச்சாட்டு பொருந்தாது என்பதால்)
The dangers of a non-secular state
www.thehindu.com
Given the tremendous diversity in the Indian subcontinent, only a secular state is feasible

2014 குடியரசுத்தலைவர் உரையின் தொகுப்பு

இன்றைய குடியரசு தலைவரின் உரையை முழுதும் படிக்காதவர்கள் அவசியம் படியுங்கள் என்பேன். 

நீண்ட காலத்துக்கு பிறகு தன்னம்பிக்கை மிளிரும், நாட்டின் எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, வளர்ச்சியை மட்டுமே பேசும், சவால் விடாத, அண்டை நாட்டினரை தூண்டிவிடாத, வேறுவகையில் சொன்னால் அண்டை நாட்டு மக்களுக்கு நமக்கு இப்படி ஒரு அரசு அமையாதா என ஏங்க வைக்கும் உரை.

கல்வியை ஊக்குவிப்பதில், ஐஐடிகளை மாநிலத்துக்கு ஒன்றாய் நிறுவ திட்டங்கள்..

தொலைதூரக்கல்வி.தொலைதூர வாசகசாலைகள்,

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய புதிய திட்டங்கள்.

மாநிலங்களுடன் இணைந்த வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்படும். (மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்த காலம் போய் இணைந்து செயல்பட திட்டங்கள்)

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, கட்டுபடியாகும் விலை கிடைக்க, விளை பொருட்களை சேமிக்க, அதை தொலைதூரங்களுக்கு கொண்டு செல்ல தனி ரயில் பாதைகள், ரயில்கள்

கிராமங்களிலும் நகரங்களில் கிடைக்கும் வசதிகளை தருதல் இதன் முக்கிய விளைவாக நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல் தவிர்க்கப்படும்.

எல்லா கிராமப் பள்ளிகளுக்கும் இண்டர்நெட் வசதியுடன் இணைக்கப்படும்.

கருப்புப் பணத்தை மீட்க குழு அமைக்கப்பட்டு விட்டாலும் வெளி நாடுகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டு துரிதமாக மீட்க நடவடிக்கை

நீதித்துறையில் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். தற்போதைய நீதிமன்றங்களின் எண்ணிக்கை படிப்படியாக இருமடங்காக்கப்படும்.

இளைஞ்சர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வெளிநாட்டு முதலீட்டுத்திட்டங்களுக்கு முன்னுரிமை.

நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்குள் நாட்டின் எல்லா மக்களுக்கும் 24 மணி நேர மின்சாரம், கழிவறை வசதிகள், தண்ணீர் இணைப்புடன் கூடிய,உறுதியான வீடுகள், கட்டித்தரப்படும்.

ராணுவ வீரர்களின் நலன் பேணப்படும் ஒரு ரேங்க், ஒரு பென்சன் என்ற திட்டம் அமல்படுத்தப்படும். அவர்களுக்கென ஒரு தனி கமிஷன் அமைக்கப்படும்.

ப்ராண்ட் இந்தியா - பாரம்பரியம்,(Tradition) திறன், (Talent) சுற்றுலா ( Tourism), வணிகம், (Trade) தொழில்நுட்பம் (Technology) இந்த 5 விஷயங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும்.

இது தவிர பல்வேறு மொழிகளில் இருக்கும் இலக்கியங்களை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய ஈ பாஷா (E Basha)

ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் சுத்தமான கங்கையை உருவாக்க அரசாங்கம் முழு முயற்சி எடுக்கும்.

இருக்கும் துறைமுகங்களை நவீனப்படுத்தப்படும், உலகத்தரத்துடன் புதிய துறைமுகங்கள் கட்டப்படும். அனைத்து துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் சாலை மற்றும் ரயில் கட்டமைப்புகளும் உருவாக்கப்படும்.

அதிவேக ரயில்திட்டங்கள் Diamond
Quadrilateral project of high speed trains.என்ற பெயரில் செயல்படும்.

தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, நகர கட்டமைப்பு, உள்நாடு பாதுகாப்பு, இந்தியாவின் கிழக்கு பகுதி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவம், அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடனான உறவு இப்படி எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய மிக அருமையானதொரு உரை.

நிச்சயம் இதைச் செய்து முடிக்கும் தைரியமும், தொலைநோக்குப் பார்வையும், அதற்குண்டான வழிகாட்டுதலும் உடைய நமது பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள் இந்த உரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் செய்து முடிப்பார் என நம்பலாம்.

முழுவதையும் ஆங்கிலத்தில் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.pmindia.gov.in/President_Address.pdf

Friday, March 28, 2014

ஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...




ஞாநியின் இட்லிவடைக்கான பேட்டியில் தெரிந்த ஒரே விஷயம் அரசியல்வாதியாகி விட்டால் யாரையும், எதையும் ஆதரிக்கும் தைரியமும், தலைவர் என்ன செய்தாலும் அதற்கான சப்பைகட்டும் கட்ட தெளிவும் வந்துவிடும் என்பதே.

ஞாநி சங்கரனைப் போன்றோர் அரசியலுக்கு வந்து முகமூடி இழப்பது நல்லது. அவரையெல்லாம் அறிவுஜீவி என சொல்வோர்களுக்காவது உண்மை புரியும்.

இன்னும் அவரை எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லும் அளவு ஞாநி என நம்பிக்கொண்டிருப்போருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.. இந்தாளையா நாம கருத்து கந்தசாமி என நினைத்துக்கொண்டிருந்தோம் என..

அந்தவகையில் ஞாநி சங்கரன் அரசியலுக்கு வந்ததை அன்புடன் வரவேற்கிறேன்.. 

---------------- 


 ட்ரெயின்ல போனா கேமெரா


சும்மா கைய பொடனியில கட்டிகிட்டு ஹாயா உக்காந்திருந்தா கேமெரா

ரோட்டுல உக்காந்தா, படுத்தா, நடந்தா கேமெரா,..

பல்லுவெளக்குனா, சாப்டா, கைகழுவுனா கேமெரா

நேத்தைக்கு காசியில குளிக்கிறாருன்னு ஒரு படம்..

அப்புறம் பட்டைய போட்டு அண்ணாமலை மாதிரி ஒரு படம்..

இன்னும் ரெண்டே ரெண்டு படம்தான் வரலை.. அதப்போட்டுட்டீங்கன்னா அர்விந்த கேசரிவாலு ஒரு முழு திறந்த புத்தகமா ஆகிருவாரு..

மீடியா மக்களே கொஞ்சம் பாத்துச் செய்யுங்க..


(26.03.2014 at Face Book)

அரசியல் போலிகள்.. கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகியின் போலி மதச்சார்பின்மை

Banu Gomes தங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திரு.வாசுகி அவர்களின் மதச்சார்பின்மை மஹாத்மியம்... 

இந்துக்களை எவ்வளவு முட்டாள்களாய் நினைத்திருக்க வேண்டும், இந்துக்களுக்கு எதிராய் புத்தகம் எழுதிவிட்டு இந்துக்கள் வாழும் பகுதியில் சென்று வாக்குக்கேட்க...?

இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளும், கொலைகளும், லவ் ஜிகாத்துகளும் இந்துக்கள் செய்ததா? அதைப்பற்றி இந்த வாசுகி அம்மையார் என்ன எழுதி இருக்கிறார்கள் இந்தப்புத்தகத்தில் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

மசூதிக்குள் சென்று உங்களுக்கு ஆதரவாய் புத்தகம் எழுதி இருக்கிறேன் எனச் சொல்லி வாக்கு கேட்பார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

சர்ச்சில் சென்று ஆசி பெறுவார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

இந்துக்களை கேவலப்படுத்தியும், அவர்களின் நம்பிக்கையை உதாசீனப்படுத்தியும்விட்டு, வாக்குகள் கேட்க மட்டும் 32 பல்லையும் இளித்துக்கொண்டு வரும் இவர்களுக்கும், நாம் பொதுவாய் ஏமாத்துப்பயக, ஏமாத்தும் பொம்பளை எனச் சொல்லும் மக்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மை என்றால் அந்த எளவே எனக்கு வேண்டாம்..h


ஈராக்கிய தேர்தல் குறித்து எனது பார்வை..

அடுத்த மாதம் ஈராக்கில் தேர்தல்.. தற்போதைய பிரதமரான நூர் அல் மாலிக்கி தலைமையில் ஸ்டேட் ஆஃப் லா என்ற கூட்டணி, முவாதீன் என்றொறு கூட்டணி இன்னொன்று அல் சாதர் என்ற ஒரு கூட்டணி. இந்த மூன்று கூட்டணிகள் மட்டுமே கொஞ்சம் பலமான அணிகள். இதுதவிர நிறைய சில்லரைக் கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் உண்டு.

உண்மையான போட்டி ஷியா அரபிகளுக்கும், சன்னி அரபிகள்க்கும், குர்திகளுக்குமே. வேறு வேறு அரசியல்கட்சிகளின் பெயரில் போட்டி இடுகின்றனர் அவ்வளவே.

தேர்தல் வரப்போவதின் ஒரே அறிகுறி 10 அடிக்கு 12 சைஸுல நூர் அல் மாலிக்கியோட போட்டோ மட்டும் ஒட்டி ஈராக் மேப் போட்ட ஒரு தட்டி. லைட் போஸ்ட்டுகள்ல ஏ3 சைஸ்ல போஸ்டர். நம்மூர் போல ஜீப்புகளிலும் கார்களிலும் மைக் கட்டிக்கொண்டு அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களேன்னு சொல்லிகிட்டு வாரதெல்லாம் இல்லை. பெரும்பாலான வாக்குகள் யாருக்குப் போட வேண்டும் என்பதை மதத்தலைவர்கள் சொல்லி விடுவார்கள். ஷியா வேட்பாளர்களுக்கு அவர்களின் மசூதிகள், சன்னி வேட்பாளர்களுக்கு அவர்களின் மசூதிகளில் உத்தரவு வந்துவிடும்.

பொதுஜனம் ஈராக்கியர்கள் எல்லோரும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் ஆள்பவர்கள்தான் கொள்ளையடித்து வீட்டுக்கு கொண்டு செல்லப்போகிறார்கள். நமக்கு என்னத்த கிடைக்கப்போகுது என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

நூர் அல் மாலிக்கி பொதுவாக நன்றாக ஆள்வதாக பாஸ்ரா மக்கள் நம்புகிறார்கள். (நான் இருக்கும் பாஸ்ராவில் 90% ஷியாக்கள்) நூர் அல் மாலிக்கியும் ஷியாதான். அதுதான் நாட்டின் இன்றைய தலைவலியின் முக்கிய காரணம். சன்னிகள் நூர் அல் மாலிக்கியை ஏற்றுக்கொள்ளவில்லை. சதாமைப்போல ஒரு சன்னிதான் பிரதமராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனாலேயே தினமும் அரசாங்கப் படைகள் வீக்காக இருக்கும் இடத்தில் தாக்குதல்களை நடத்தி 100 -200 பேர்களைக் கொன்று அந்த இடத்தில் சன்னிகளின் ஆட்சியையும், ஆதிக்கத்தையும் நிறுவுகின்றனர். இதில் ஜோக் என்னவென்றால் ஷியாக்களும் சன்னிகளின் பார்வையில் காஃபிர்கள். எனவே இரண்டாம்தர மரியாதைதான் அவர்களுக்கு.

கிட்டத்தட்ட நம் நாட்டில் நடப்பதைப்போலத்தான். மைனாரிட்டிகளுக்கு எப்படி நாட்டை ஆளவேண்டும், முழுதும் இஸ்லாமிய / கிறிஸ்தவ மயமாக்கிட வேண்டும் என துடிக்கிறார்களோ அதேபோல ஈராக்கின் மைனாரிட்டியான சன்னிகள் ஈராக்கை சன்னிகள் ஆளும் நாடாக்க வேண்டும் என விரும்புகிறார்கள், அதுவும் வன்முறையின் மூலம். இந்த தேர்தல் நடக்கும்போது குறைந்தது 3000 பேர் இறக்க நேரிடலாம்.

நம்ம நாட்டின் ஜனநாயகம் மட்டும் உலகின் எந்த மூலையிலும் வரப்போவதில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒருவருக்கொருவர் அதிகபட்சம் பொய்ப்புகார்கள், சேற்றைவாறி இறைத்தல் கேரக்டர் அசாசினேஷன் தாண்டி ஆட்களைக் கொல்லும் அளவு இன்னும் முன்னேறவில்லை. கரன் தப்பார் போன்றோர் மட்டும் அவ்வப்போது ~மோடியை திடீரென அகற்றிவிட்டால்~ என திகில் ஸ்டேட்மெண்ட் மட்டும் விடுவார்கள்.

இப்படி இந்த நிலைமையில் நம்ஜனநாயகம் இருப்பதே நமக்கெல்லாம் பெருமை.

ஈராக்கில் எதற்கு ஆட்சியை பிடிக்க இவ்வளவு போட்டியும், கொலைகளும், வெடிகுண்டுகளும் என்றால் ஈராக்கில் இன்றைய தேதிக்கு ஒரு ப்ராஜக்ட் கிடைத்தால் அதன் மதிப்பை குத்துமதிப்பாக 100 மில்லியன் டாலர்கள் என வைத்துக்கொண்டால் அந்த ப்ராஜக்டின் உண்மையான மதிப்பு 25 மில்லியன்மட்டுமே இருக்கும். மீதம் 75 மில்லியன் டாலர் டெண்டர் ஸ்டேஜிலிருந்து ப்ராஜக்டை முடித்து கமிஷனிங் செய்வதற்குள் பல கம்பெனிகள் பல நிலையிலும் பல அதிகாரிகளுக்கு நீங்கள்கொடுக்க வேண்டியிருக்கும் இந்தப்பணத்தைக் கைப்பற்றுவோர்களிடமே அதிகாரம்.

இதை யார் எடுத்துக்கொள்வது என்பதற்குதான் ஈராக்கில் தேர்தல்..

Thursday, January 23, 2014

வடக்கு ருமைலா - Iraq

இன்று வடக்கு ருமைலா என்ற இடத்தில் ஒரு வியாபார சந்திப்பு. பாஸ்ராவிலிருந்து 100 கிலோமீட்டர்கள் பாக்தாத் போகும் வழியில். செக்போஸ்ட் சோதனைகள் முடிந்து உள்ளே சென்றால் தனி உலகம். எல்லாக் கம்பெனிகளும் தங்களது கிளையை இங்கேயும் வைத்திருக்கின்றன.

நான் சந்திப்புக்குச் சென்றது ஒரு ஈராக்கிய கம்பெனிக்கு. சந்திப்புக்கு அழைத்திருந்தவர் பாக்கிஸ்தானி.. அந்த நிறுவண சி.ஈ.ஓ ஒரு இந்தியர்.

சந்திப்பெல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் வரைக்கும் அந்த சி.ஈ.ஓ வை எங்கேயோ நெருக்கமாக சந்தித்திருக்கிறேன் என மனது சொல்லிக்கொண்டே இருந்தது. புறப்படும்போது சட்டென ஞாபகம் வந்துவிட்டது.

ஈராக் கிளையை ஆரம்பிக்கும்போது ஒரு ஆர்டருடன் ஈராக்கில் நுழைந்தால் கைக்காசு செலவில்லாமல் கம்பெனியை ஆரம்பித்துவிடலாம் என அவரிடம் ஒரு பைப்லைன் வேலையை எங்கள் கம்பெனிக்கு ஒதுக்கித் தரும்படி கேட்கப் போயிருந்தேன்., 2012 செப்டம்பரில்.

உங்களால் ஈராக்கிலெலாம் வேலை செய்ய முடியாது. விசாவில் ஆரம்பித்து, சாதனங்களை ஈராக்குக்குள் கொண்டு வருவதும், வெளியே கொண்டு செல்வதும் பெரிய கம்பெனியான எங்களாலேயே முடியவில்லை. அதனால் உங்களுக்கு ஆர்டரைக்கொடுத்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட முடியாது எனச் சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.

இன்றைய சந்திப்புக்குப் பின்னர் எப்படிப் போகுது ஈராக் பிஸினஸ் எல்லாம் என்றார்.. நீங்க முடியாதுன்னு சொன்ன உடனேயே எங்கே ஈராக்கில் கம்பெனி திறக்க முடியாதோ என்ற பயத்தில் முழுசா இறங்கி அடுத்த மாசமே கம்பெனி லைசென்ஸ் அப்ளை செஞ்சு 2013 ஜனவரிக்குள்ளேயே நாங்கள் ரெடியாகி இதுவரை 3 பெரிய ப்ரஜக்டுகளை முடித்து விட்டேன். நீங்கள் என்னை சந்திப்புக்கு அழைத்திருக்கும் இந்த வேலையின் மிகப்பெரிய பகுதி ஒரு துருக்கிக் கம்பெனியிடம் உள்ளது. அந்த வேலையை நாங்கள்தான் செய்கிறோம் என்றதும் மிக்க மகிழ்ச்சி எனச் சொல்லி கை குலுக்கினார்.

போகும்போது ”I was wrong Jay. We should have given the job to you guys. The contractor killed us you know?" என்றார்.

இப்படிப் பட்ட பொட்டல்காட்டில்கூட எதிர்பாராத ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே சினிமா டயலாக் “ ரொம்ப ஸ்மால் வேல்டுங்க”

சந்திப்புக்கு பின்னர் சுற்றிப் பார்த்ததில் நிறைய தமிழ் முகங்கள். திருச்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற புதிய நண்பர் கிடைத்தார். பார்த்த 5 நிமிடங்களிலேயே நண்பர்கள்... 

இன்னும் சில தமிழர்கள் வேலைக்காக சைட்டுக்கு சென்றிருந்தனர். அவர்களிடம் போனில் பேசினேன்.

எல்லோரும் சில நிமிட உரையாடலுக்குப் பின்னர் கேட்கும் ஒரே கேள்வி, எப்ப சார் அடுத்து ஊருக்கு? 

A CM who never respects the law of the land - கேஜ்ரிவால்

Date : 21.01.2014

நம் நாட்டின் தலைநகர் இன்றைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த்
கேஜ்ரிவால் கும்பல்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. 

குடியரசு தினவிழா நடைபெறப்போகும் இந்த வேளையில் இந்த நாடகத்தை அரங்கேற்ற அர்விந்த் கேஜ்ரிவால் தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் டெல்லியில் பேரழிவு ஏற்படுத்த வழி எற்படுத்தவே என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வங்கிக் கொண்டு கேஜ்ரிவாலை சிறையில் அடைத்து இந்த ரவுடித்தனத்திற்கு முற்றுப்புள்ளீ வைக்க வேண்டும். ஆனால் அறிக்கைப்போர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காளான் நம் நாட்டின் தலைநகரின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்பொதுகூட செயலபட மாட்டார்கள் என்றால் நம்மை விட அழுகிப்போன ஜனநாயகம் வேறு இருக்காது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் குடியரசு தின விழா குறித்த கருத்து அவர் உண்மையில் எந்த நாட்டு உளவாளி என்ற சந்தேகம் வலுக்கிறது. வழக்கமான தேசத்துரோகிகளான கம்யூனிஸ்ட்டுகளும், அடிப்படைவாத இஸ்லாமிய கும்பல்களும், நக்சல்பாரிகளும் பேசும் பேச்சை அர்விந்த் கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பம்பாய் நிகழ்வை நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது ஆம் ஆத்மியும், அதன் தலைவர் கேஜ்ரிவாலும் மற்றும் இதை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காங்கிரஸும்.

இருக்குடா உங்களுக்கெல்லாம் ஆப்பு... இன்னும் கொஞ்ச நாள்தான்..

கல்யாண சமையல் சாதம்..

கல்யாண சமையல் சாதம்.. ( என்னது எம்.ஜி.ஆர் செத்துட்டாரா பார்ட்டிகள் ப்ளீஸ் எக்ஸ்கியூஸ்..)

லேகா வாஷிங்டன் நடித்து சமீபத்தில் வந்த கல்யாண சமையல் சாதம் நேற்று பார்த்தேன். படத்தை தூக்கி நிறுத்துவதில் லேகா வாஷிங்டன் முதலில் நிற்கிறார். மற்றபடி ஹைஃபை பிராமண குடும்ப கல்யாணம். அது நடக்கும் முன்னர் ஏற்படும் சிறு குழப்பம் கடைசியில் சுபம். இவ்வளவே. ஆனால், முழுப்படத்தையும் லேகா வாஷிங்டனுக்காகவே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாதாரன உடை, நாகரீக உடை, பாரம்பரிய உடை என எல்லாவற்றிலுமே அழகாக தெரிகிறார். நேற்றுதான் சப்பி சீக்ஸ், டிம்பிள் சின், ரோஸி லிப்ஸ், கர்லி ஹேர், வெரிஃபேர் , ஐஸ் ஆர் ப்ளூ, லவ்லீ டூ, என்ற பாடலை ஸ்கைப் மூலம் என் மகளுடன் சேர்ந்து பாடி அவளை அங்கு ஆடவைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது மகளுக்கு அடுத்து இந்த குணங்கள் அனைத்தும் கொண்டவராய் லேகா வாஷிங்டன் இருக்கிறார். 

எப்படிப் பார்த்தாலும் அழகாய் இருக்கிறார். பிரசன்னா லேகாவாஷிங்டனுடன் நடித்திருக்கிறார். ஓரளவு நன்றாகவே செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கதையை சொதப்பாமல் எடுத்த இயக்குனருக்கு பாராட்டு.

நகைச்சுவைதான் பிரதானம் என முடிவு செய்து படமெடுத்திருப்பதால் அப்படியே கிரேஸீ மோகனின் மேடை நாடகத்தை திரையில் கண்டது போல எண்ணம்.

ஆஹா, ஓஹோ எனச் சொல்ல முடியாவிட்டாலும் நல்ல பொழுதுபோக்கு பட வரிசையில் வைக்கலாம்.

Friday, November 29, 2013

ஏர்பிலின் Citadel or Fort.. உலகின் மிகப் பழமையான மனிதன் வாழிடம்..

குர்தியில் கலா (Ghala) ஆங்கிலத்தில் (Citadel) தமிழில் கோட்டை
இன்று காலை நடைபெற வேண்டிய சந்திப்பு நாளைக்கு ஒத்திப்போனதால் எர்பில் நகரின் விசேஷங்களில் ஒன்றான சிட்டாடல் சென்று வந்தேன். கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறான் அதுவும் வீடுகள் கட்டி கிட்டத்தட்ட நகரை நிர்மானம் செய்து!.
எர்பிலில் இருக்கும் இந்தக் கோட்டை  உலகின் பழமையான மனித வாழிடம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்
Ghala எனும் கோட்டை வடிவில் இருக்கும் இந்த பழங்கால மனித வாழிடத்தை தூரத்தில் வரும்போதே காணலாம். அதைச் சுற்றி நிறைய சூக்குகள் எனப்படும் உள்ளூர் மார்க்கெட்டுகள் அமைந்திருக்கின்றன. அவைகளும் கோட்டைக்கு இணையாக அல்லது அதற்குப் பிந்தியகாலத்தில் அமைந்தவை. சூக்குகளில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அந்தக்கால சந்தையை நாகரீகப்படுத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. டீக்கடைகள், ஹோட்டல்கள், உள்ளூர் தின்பண்டங்கள், துனிமணிகள், மின்னணு சாதனப் பொருட்கள், சிகை திருத்தகம், இப்படி கலவையாக.

வெளிநாட்டவர் நிறைய வந்து இந்தக் கோட்டையைக் காணுவதால் கோட்டையைச் சுற்றி செயற்கை நீரூற்றுகள் அமைத்து பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் அமர்ந்துகொள்ள வசதி செய்திருக்கிறார்கள். தற்சமயம் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது ஈராக்கில். குர்திஸ்தானில் தற்சமயம் தென்றல்தான் பகலிலும், இரவிலும். இதை எனது ஹோட்டலின் ஜன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு ரம்மியமான காற்றை அனுபவித்துக்கொண்டே எழுதுகிறேன்.

இந்தக் கோட்டையின் கதை.

எர்பில் கோட்டை என்றழைக்கப்படும் இந்தக் உயரமான குடியிருப்பு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் (Millennias) மனிதன் வாழாமலேயே இருந்திருக்கிறது. இதன் ஆயுளை உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் தீவிர தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவுகள் மற்றும் கிடைத்த சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது இது 6000ம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கின்றனர்.

இந்த கோட்டை நகரமே கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1365ம் ஆண்டு முதல் 612 க்குள் அசிரியர்களின் காலத்தில் அதாவது இன்றைக்கு 3000 ஆண்டுகளுகு முன்பு இருந்திருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோட்டையானது புதிய கற்காலம் முதல் வென்கலயுகத்துக்குள் (6000 – 1500 கி.மு.) ஏற்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.

எப்படி இப்படி ஒரு உயரத்துக்கு மேடும் அதன் மீது கோட்டையும் அந்தக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் என ஆச்சரியப்படுவோர் இந்த தொடுப்பைத் தொடர்ந்து சென்று முழுதும் அறிந்துகொள்ளுங்கள். (http://www.erbilcitadel.org/ErbilCitadel/history.php )
இனி சிட்டாடல் அல்லது கோட்டையை பார்த்தது பற்றி.
உள்ளே நுழையும் இடத்தில் நமது பெயர், நாடு பற்றிய விபரங்களைக் கேட்டு அதை கனினியில் பதிந்துகொண்டு நம்மை மேலே நடந்து செல்ல அனுமதிக்கிறார்கள். அனுமதிக்கட்டணம் இல்லை.

மேலே செல்ல சிறு சதுரக் கற்களால் ஆன சரிவான ஆனால் சீரான மலைப்பாதை. நகரின் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. நகரின் சுற்றுவட்டாரத்தில் மலைகள் போல அல்லது இவ்வளவு உயரமான பகுதி என எதுவும் இல்லை. இதை அந்தயுக மக்கள் மேடாக்கி அதன் மீது நகரை கட்டி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கோட்டையை யுனெஸ்கோவும், எர்பில் நகர சிட்டாடல் பாதுகாப்பு குழுவும் இணைந்து மறுநிர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது இந்த கோட்டை. அதன் நடுவே நகரம். மரம் கிளை பரப்பி நின்றால் எப்படி இருக்குமோ அதே வடிவில் தெருக்கள். எல்லா வீடுகளும் ஒரு அல்லது இரு அறைகள் கொண்டவை. மிஞ்சிப்போனால் 8 முதல் 10 அடி இருக்கலாம். ஒவ்வொரு தெருவிலும் 5 முதல் 8 வீடுகள் கொண்டிருக்கின்றன.

எல்லாத்தெருக்களுக்கும் கிளைத்தெருக்கள்  மற்றும் அவை எல்லாம் முக்கியத் தெருவில் வந்து சேருகின்றன. நகரின் மையத்தில் ஒரு பெரிய மைதானம். அதில்தான் தற்போதைய புனர் நிர்மான பணிகளுக்கான அலுவலகம் இயங்குகிறது.

மேலிருந்து கீழே பார்க்க முடியாத அளவு பெரிய மதில்கள். மிகப்பெரிய நுழைவு வாயில். அங்கிருந்து கோட்டைநகரின் மையம் செல்ல நீளமான மற்றும் அகலமான பாதை. மொத்த ஊரின் அளவே 12.5 ஹெக்டேர் என அங்கிருக்கும் தகவல் குறிப்பு சொல்கிறது.
மராமத்துப் பணிகளை அந்தக்காலத்தில் இருந்ததுபோல அதேநிற மண்னை எங்கிருந்தோ எடுத்து வந்து அதில்தான் கட்டுகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் சுற்றி வந்தேன். கிழே இறங்கி சூக்குகளை சுற்றி வந்தேன்.

புஸ்தகக் கடைகளை மேயும்போது நமது காந்தியடிகள் அவரது சத்திய சோதனையை குர்தி மொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். குர்தி இன மக்களுக்கு காந்தியடிகளின் சரிதம் தெரியுமாம்.
ஜான்ஸிராணி லக்குமிபாயால் உத்வேகம் பெற்றிருக்கிறார்களாம். இன்றும் குர்தி தொலைக்காட்சியில் தினமும் ஜான்ஸிராணி தொடர் உண்டாம்.

மதியம் இந்தியா கேட் உணவகத்தில் தால் கிச்சடியும், தயிர் சாதமும் சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினேன்.
நான் எடுத்த படங்களை இந்த சுட்டியில் காணலாம்.