
எனது பிரியமான பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டது.
ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போன இடத்தில் இப்படி ஒரு சோகம்.
திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தவமிருந்து கிடைத்த குழந்தை இவள்.கிருஷ்ணணின் தீவிரபக்தை சித்ரா. வெறும் எட்டே ஆண்டுகளில் மீண்டும் இறைவன் அழைத்துக்கொண்டுவிட்டான். அதுவும் மலையாளிகளின் மிக முக்கிய தினமான விஷு அன்று.
நாம் எப்போதும் சிரித்த முகம் கொண்ட சித்ராவையே பார்த்திருக்கிறோம். அவரை ஒரு மலையாளியாகக் கூட நம்மால் நினைக்க முடியாத அளவு மனதைக் கொள்ளைகொள்ளும் பாடல்களால் நம்முடன் கலந்துவிட்டவர். எட்டு ஆண்டுகளாக சீராட்டி வளர்த்த குழந்தையை இழந்து தவிக்கும் சித்ராவின் ஆற்றாமையை, இழப்பை புரிந்துகொள்ள முடிகிறது.
அவருக்கும், அவரது கணவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருக்கு இந்த மிகப்பெரிய இழப்பை தாங்கிக்கொள்ளும் மனோபலத்தை இந்த துன்பத்தை அளித்த இறைவனே அளிக்கட்டும்.
காலம் எல்லாத்துயரையும் ஆற்றும் என்றாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத, எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வந்த சித்ராவிற்கு இது நடந்திருக்க வேண்டாம்.
இறைவனின் கணக்கை யாரறிவார்?
1 comment:
மிக மிக துயரமான சம்பவம். இந்த கொடிய சோகத்தை தாங்கும் சக்தியை கடவுள் சித்ரா அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இறைவன் அளிப்பாராக !!!
Post a Comment