Saturday, April 16, 2011

அண்ணா ஹசாரே !!!!

ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட மஹான் அண்ணா ஹஸாரே அன்று.. ஆனால் போலி மதச்சார்பின்மை கூட்டத்தின் கைப்பாவை இன்று.

சமீபத்தில் லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவேண்டும் என்றும், அந்தச் சட்டம் வந்துவிட்டால் உடனே எல்லா அரசியல்வாதிகளையும் தண்டிக்கலாம் என்றும் கூறி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி ஊழல் மன்னன் கபில்சிபல் சில நாட்களை கடத்திவிட்டு எல்லாக் கோரிக்கையையும் ஏற்பதாகவும், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார். இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தேசப்பற்று பொங்க ஆரம்பித்து, ஊழலை ஒழிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.

அண்ணா ஹஸாரே ”மிகச்சிறந்த நிர்வாகி”யாக நரேந்திர மோடியையும், சிறந்த மாநிலமாக, அதாவது ஊழலற்ற மாநிலமாக குஜராத்தையும் சொன்னார். நரேந்திரமோடி நன்றி தெரிவித்ததுடன், இப்படிச் சொன்னதற்காக உங்களை கேவலப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என கவலையுடன் கடிதம் எழுதினார். மோடி சொன்னதுபோலவே உடனே பர்கா தத்துக்கள் தொடங்கி, இதர கொலைவெறி நிருபர்கள் அவர்களின் வழக்கமான உச்சகட்ட குரலில் இவரை ஆர்.எஸ்.எஸ் ஆளோ என சந்தேகப்படும்படியாக செய்திகளை வெளியிட்டனர்

போதாததற்கு அவரது உண்ணாவிரதப்பந்தலில் பாரதமாதா படமும் இருந்தது. பாரதமாதா படத்தைக்கூட இந்துத்துவ சார்பு என மதச்சார்பின்மை மஹாத்மாக்கள் அண்ணா ஹஸாரேயிடம் போட்டுக்கொடுக்க, அவரும் தனது மதச்சார்பின்மையை நிரூபிக்க பாரத மாதா படத்தையும் எடுத்துவிட்டார். இனிமேல் சோனியா படம் வைக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அண்ணா ஹஸாரேயைப் பொருத்தவரை சோனியா ஊழல்வாதி கிடையாதாம்.

இனிமேல் இந்த மதச்சார்பின்மை கோஷ்டி அண்ணா ஹஸாரே பேரைச் சொல்லி தனது ஆட்களை ”பொதுமக்கள்” என்ற பெயரில் உள்ளே அனுப்ப ஆரம்பிக்கும். வழக்கமான இந்திய எதிர்ப்பு, எவாஞ்சலிக்கல் கோஷ்டியினர் சட்டம் அமைக்கும் லெவலுக்கு தங்களை உயர்த்திக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு குடைச்சலைக் கொடுப்பார்கள். வாயை அடைக்க அவர்கள் செய்யும் அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாதது மாதிரி இருப்பார்கள்.

அண்ணா ஹஸாரேயின் குறிக்கோள்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. அதுதான் ஒவ்வொரு இந்தியனும் கணவு காண்பது. ஆனால் அவர் கூட சேர்த்துக்கொண்டிருக்கும் ஆட்கள் எவருக்கும் நாட்டு நலன் குறித்த அக்கறையோ, இந்த மிகப்பெரும் மக்கள் எழுச்சியை எப்படி ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமாக கொண்டு செல்லுவது என்ற பிரக்ஞையோ இன்றி வெற்று விளம்பரத்துக்காகவும், கூச்சல் இடவுமே இதுவரை பயன்படுத்தியுள்ளார்கள்.

பிரான்ஸில் முகத்தை மூடும் துணியை சட்டவிரோதம் என்று சொன்னால், இந்திய மீடியாக்கள் இஸ்லாமியர்கள் இனிமேல் வாழவே முடியாது என்ற ரேஞ்சில் முஸ்லீம்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தனர். எப்படியாவது ஒரு கலவரம் நடந்துவிடாதா, நமக்கு பரபரப்பாக செய்தித்தீனி கிடைக்காதா என ஏங்கியது இந்த செல்லரித்துப்போன மீடியா. நல்லவேளையாக முஸ்லிம்கள் இவர்களின் போலிக்கூச்சலை கண்டுகொள்ளவில்லை.


இவர்களை வைத்துக்கொண்டா இனி லஞ்சத்தை ஒழிப்பது??

2 ஜி ஊழலில் பர்காதத்துக்கு சம்பந்தம் இருக்கிறது என டெலிபோன் உரையாடல்கள் சொல்கின்றன. ஊழலுக்கு எதிரான கூட்டத்தில் அவரே முண்ணனியில்.. என்ன ஒரு முரன் நகை?

கிட்டத்தட்ட சோடாவைத் திறந்தது போன்ற உற்சாகத்தில் ஆரம்பித்து, தற்போது மக்கள் அனைவரும் நான்குநாள் கூத்துடன் தங்களது வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். தமிழக மக்களோ தேர்தல் ஆணையம் மீதான உச்சகட்ட கடுப்பில் இருந்தனர். வாக்குக்கு கிடைக்கும் பணத்தையும் கிடைக்க விடாமல் செய்துவிட்டனர் என்ற ரீதியில்.


என்ன நடக்கும் இனி? சட்டம் இயற்றப்படும், அதற்கு மாலை, மரியாதை எல்லாம் செய்து ஓரமாக படுக்கவைத்துவிட்டு, அடுத்த ஊழலுக்கு அரசியல்வாதிகளும், காரியத்தை சாதிக்க லஞ்சம் கொடுக்க மக்களும் கிளம்பிச் செல்வார்கள்.

இந்தியா வழக்கம்போல இயங்கும்..

இப்படிப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே உழைக்கும் அண்ணா ஹஸாரே செய்யவேண்டியது ஊழல் பெருச்சாளிகளையும்,போலி மதச்சார்பின்மைவாதிகளையும் அண்டவிடாமலும், தீர்க்கமான ஒரு முன்வரைவை உண்டாக்கி அரசுக்கு அனுப்பி அதை அரசு செயல்படுத்துகிறதா எனப்பார்ப்பதே சரியாக இருக்கும். அரசியல்வாதிகள் ஹஸாரே குறித்து பாராட்டி கருத்துக்கூட சொல்ல அனுமதிக்கக் கூடாது.

இதற்கிடையில் இன்னொரு கும்பல் அண்ணா ஹஸாரே மீதான பழைய ஊழல் பட்டியலைத் தேடிக்கொண்டிருக்கிறது.

உச்சகட்ட நகைச்சுவையாக பதவிவெறியற்ற, தன்னலமற்ற தாய் சோனியா காந்தியும், அண்ணா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதே எங்கோ கருகல் வாசனை அடித்தது. இனி இது தேறாது என.

இன்று அது நிருபிக்கப்பட்டிருக்கிறது.

சோ எழுதிய இந்தக் கட்டுரையும் அதைத்தான் எதிரொலிக்கிறது..

அயல்நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கிற, கற்பனைக்கும் எட்டாத, கோடானு
கோடி ரூபாய்களுக்கும் மேலான, கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு
வர, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று அவர் கோரவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற உலக அற்புதங்களில் ஒன்றாகி விட்ட ஊழலில், பிடிபட்ட
சுண்டெலிகளுக்குப் பின் உள்ள பெருச்சாளிகளையும் பிடியுங்கள் – என்று அவர்
கேட்கவில்லை.

சுதந்திர இந்தியாவில் பதவி ஏற்ற அரசுகளில், மிக அதிகமாக ஊழலில் திளைத்த
அரசு வெளியேற வேண்டும் – என்று அவர் கூறவில்லை.

தன்னைச் சுற்றி நடக்கிற ஊழல்களை எல்லாம் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய
புகழ் பெற்ற ‘நேர்மை’ப் போர்வையால், எல்லா மோசடிகளையும் மூடி மறைக்க
முயன்று கொண்டு, ‘தருமம் எது என்று எனக்குத் தெரியும்; ஆனால் அதை என்னால்
கடைப்பிடிக்க முடியவில்லை’ என்று ஒப்புக்கொண்ட, திருதராஷ்டிரனின் நேர்மை
கூட இல்லாத பிரதமர், பதவி விலக வேண்டும் – என்று அவர் கோஷம்
எழுப்பவில்லை.

இதற்கெல்லாம் தாயாகத் திகழ்கிற அன்னை பற்றியோ, அன்னையின் அருள் பெற்ற
ஊழல்கள் பற்றியோ – அவர் ஒரு முணுமுணுப்பு கூட செய்யவில்லை.
ஸி.பி.ஐ.யையும், ஊழல் ஒழிப்புத் துறையையும் நேர்மையாகச் செயல்பட விட
வேண்டும் என்று கூட அவர் பேசவில்லை.

பின் என்னதான் செய்தார் அன்னா ஹசாரே? ஊழல் புகார்களை உடனடியாக
விசாரித்து, வழக்கை விரைவில் முடித்து, சரியான தீர்ப்பு வழங்க – முறையாக
நிறுவப்பட்ட லோக்பால் அமைப்பு தேவை; அதற்கான மசோதாவை தயாரிக்க, அரசு
பிரதிநிதிகளுடன் அரசியல் சாராத நேர்மையாளர்களையும், குடிமக்களைப்
பிரதிநிதிகளாகக் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்! இதுதான் அன்னா
ஹசாரே விடுத்த கோரிக்கையின் சாராம்சம்.

இதைச் செய்யக் கூட இந்த மத்திய அரசுக்கு, இத்தனை அமர்க்களம்
தேவைப்பட்டது. டெலிவிஷன் சேனல்கள், கிரிக்கெட் வெறியைக் கூட தணித்துக்
கொண்டு, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தைப் படம் பிடித்து, பிடித்து,
பிடித்துக் காட்டிக் கொண்டேயிருக்க – பத்திரிகைகள் ஐந்து மாநில சட்டசபைத்
தேர்தல்களைக் கூட பின்னுக்குத் தள்ளி, அன்னா ஹசாரேயின் போராட்டத்தை
பக்கம் பக்கமாக, பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இத்தனை நடந்த பிறகு அரசு மனமிறங்கி, ‘சரி, கமிட்டி போடுகிறோம்’ என்று

கூறிவிட்டது. கல்கி முன்பு சொன்னார்: ‘ஒரு விஷயத்தைக் கொல்வதற்கு, அதன்
மீது கல்லைப் போடு; அல்லது கமிட்டியைப் போடு’ என்றார். இப்போது அன்னா
ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு மசோதா கோரிக்கை மீது, அரசு ஒரு கமிட்டியைப்
போட்டு விட்டது.

‘ஒரு கொடிய விஷப் பாம்பைக் கண்டால், அதை அடித்துக் கொன்று விடு; அதை என்ன
செய்யலாம் என்று அறிய, ஒரு கமிட்டியை நியமிக்காதே!’ என்றார் ஒரு
மேல்நாட்டு அறிஞர். ஊழல் எனும் விஷப் பாம்பை ஒழிக்க, ஒரு அமைப்பைத்
தோற்றுவிக்க, ஒரு சட்டம் இயற்ற, ஒரு மசோதா தயாரிக்க, கலந்தாலோசனை நடத்த –
ஒரு கமிட்டி வந்தாகி விட்டது.

‘வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே!’ என்று பத்திரிகைகளும்,
டெலிவிஷன் சேனல்களும் மகிழ்ந்து முரசு கொட்டுகின்றன. நாமும் மகிழ்வோம்.
அம்மண ஊரில், கோவணம் கட்டித் திரிகிற பைத்தியக்காரத்தனத்தைத் தவிர்த்து,
நாமும், மற்றவர்களுடன் சேர்ந்து, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோம்! பூம்...
பூம்... பூம்....!

4 comments:

ஜெகதீஸ்வரன்.இரா said...

இதை நான் அமோதிக்கிறேன்..

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரததிற்க்கான ஒருங்கினைப்பாளர் ஒரு இஸ்லாமிய தோழரிடம் கேட்டாராம் உங்களிடம் நல்ல முஸ்லீம்கள் இருந்தால் போராட்டத்தில் பங்கேற்க்க சொல்லுங்கள் என்று. நாட்டுபற்றுடையவர்கள் தேவையில்லை போலும்.

கானகம் said...

ஜெகதீஸ்வரன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

இந்த இயக்கத்தை எவ்வளவுக்கெவ்வளவு நீர்த்துப்போகச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு அரசியல்வதிகளுக்கும், ஊழலில் திளைப்போருக்கும் நல்லது. அதற்காகா என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வர்.

மர்மயோகி said...

அன்ன ஹசாரே மீது இருந்த மரியாதையை அவரேதான் கெடுத்துகொண்டார்..
அரசியல்வாதி எல்லாமே சாக்கடைகள்தான்
இதில் பயங்கரவாதியான நரேந்திர மோடி என்பவனுக்கு ஏன் ஜால்ரா தட்டவேண்டும்?
நரேந்திர மோடி என்பவன் மனித இனத்திற்கே அவமான சின்னம்,
பல்வேறு நாடுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனுக்கு இவர் ஜால்ரா போடுகிறார் என்றால் காரணம் புரியவில்லை..
ஒழிக்கப்படவேண்டியது ஊழல் மட்டுமல்ல
பயங்கரவாதமும் நரேந்திர மோடி போன்ற மிருகங்களும்தான்
ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் இங்குள்ள தமிழ் வெறியர்கள், குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை மனிதர்களாக நினைக்கவில்லையா?
இந்த நரேந்திரன் என்ற நாயை என்ன செய்யலாம்?
அவனை ஒரு பொருட்டாக அதுவும் இவ்வளவு பிரபலமான பின் அவனை புகழ்வது சந்தேகமளிக்கிறது..

கானகம் said...

மர்மயோகி - பேரைக்கேட்டாலே வித்தியாசமா இருக்கு.

நேற்று சாருவின் வலைத்தளத்தில் உங்கள் வலைப்பதிவிற்கான சுட்டியைப் பர்த்தேன்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அண்ணா ஹஸாரே குறித்த கருத்தை ஏற்கிறேன். நரேந்திரமோடி குறித்த உங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு. எனக்கு ஊழல் கறை படியாத ஒரே இந்திய அரசியல்வாதியாக நரேந்திர மோடி மட்டுமே தெரிகிறார். குஜராத்தில் ஏற்பட்டது மக்களின் கொதிப்பேயன்றி வேறல்ல. ஆனால் ஒரு முதலமைச்சராக இந்தப் படுகொலைகளை தடுத்திருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அடிக்கடி வாருங்கள்.