Wednesday, October 24, 2007

பாலமுருகன்.

என்னன்னே தெரியல பாலமுருகனுக்கு அப்படியே காத்துல பறக்க்குற மாதிரியே இருக்குது ரெண்டு நாளா.. மெட்ராஸ் ஏஜண்ட் மீதி 65 ஆயிரத்த எடுத்துட்டு வா உணக்கு டிக்கெட் ரெடி பண்ணியாச்சி ரெண்டு நாள்ல கிளம்பனும்னு சொன்னதுல இருந்தே இப்படித்தான் ஆய்ட்டான் நம்ம பாலு.
மத்தவைங்க கதய கேட்டா சிரிப்பா இருக்குது இவனுக்கு. துட்ட குடுத்துட்டு ரெண்டு மாசம் பம்பாயில இருந்துட்டு பணமும் போயி, பாஸ்போர்ட்டும் போயி வந்திருந்த ஹமீது இவன்கிட்ட பாத்து செய்யுப்பா என்ன மாதிரி ஆயீடாம அப்படின்னு சொன்னதெல்லாம் கேட்டு மனசுக்குள்ளயே சிரிச்சுகிட்டான்.
அப்பாவும் கவர்மெண்டுல வேலைங்கிறதுனால லச்ச ரூவா பெரட்டுரதெல்லாம் பெரிய விஷயமாவே படல அவனுக்கு. பத்தாப்பு முடிச்ச உடனே பக்கத்துல இருக்குற ஒரு பாலிடெக்னிக்குல ஒரு டிப்ளோமாவும் முடிச்சு வச்சான். அப்புறம் அவங்க ஊர்க்காரன் ஒருத்தன் ட்ராவல் ஏஜென்சி நடத்துரான்னு கேள்விப் பட்டு அவங்கப்பா நம்ம பயலையும் கொஞ்சம் தள்ளி விடுப்பான்னு சொல்லும்போது அவர் நாக்குல சனி இருந்தது பாவம் அவர் கவனிக்கல போல..
பயலும் மெட்ராஸ் போயி புது துணீ எல்லாம் எடுத்துட்டு ஏஜெண்டு பனத்தையும் அடைச்சிட்டு டிக்கெட்ட வாங்கிட்டு மஸ்கட் போறதுக்கு ரெடி ஆயிட்டான். காலையில 6 மணிக்கு பிளைட்டு. அப்பா, அம்மா, தங்கச்சி எல்லார்ட்டயும் போயிட்டு வர்ரேன்னுட்டு பய வண்டியில ஏறுனான்.. அப்ப வரைக்கும் ஏஜென்ட்டு சொன்னது மஸ்கட்ல வேலை மாசம் 10 ஆயிரத்துல இருந்து 12 ஆயிரம் வரைக்கும் அப்படின்னு சொன்னானே தவிர என்ன வேலைன்னு சொல்லவே இல்ல. நம்ம பாலமுருகணுக்கும் வெளிநாட்ல வேலைங்கிறததவிர வேற எதுவும் கேக்கனும்னு தோனவே இல்லை.
பய காலையில் 8 மனிக்கு மஸ்கட்ல இறங்குனதும் ஒரு வேன்ல அவனமாதிரியே வேலைக்கு வந்திருக்குற 15 பேர்கூட இவனையும் கூட்டிட்டு போனாங்க..
இன்னைக்கு உங்களுக்கு வேலையெல்லாம் கிடையாது.. கேம்ப்ல சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கங்க.. வேனுங்குற சாமான வாங்கிக்குங்க அப்படின்னாரு கேம்ப் பாஸ் தமிழ்ல. நம்ம ஆளுக்கு அப்பவே புல்லரிச்சிருச்சி. இப்படி இல்லய்யா இருக்கனும் கம்பெனின்னா அப்படின்னு நெனச்ச்சுக்கிட்டான்.
சாயந்திரம் புதுசா வந்தவங்களுக்கு யுனிபாரம் கொடுத்தாங்க.. கழுத்துல இருந்து கால் வரைக்கும் ஒரே துனி.. மொரட்டு ஷூ, அப்புரம் கைக்கு போட ஒரு கிளவுஸ்.. அப்படியே கிளாஸுக்கு கூட்டிட்டு போனாங்க..
மஹாஸுன்னு இலங்கைக் காரர் ஒருத்தர் தான் வகுப்பு எடுத்தார்..
தம்பீ அப்படின்ன்னு அவர் கூப்புடுறதே நம்ம சொந்த அண்ணன் கூப்புடுற மாதிரி இருந்துச்சு.
காலையில இருந்து மத்தியானம் வரைக்கும் எப்படி கக்கூஸ் இருக்கும், எந்த எந்த இடத்துல கவனமா இருக்கனும்?? எந்த இடம் சுத்தமா இல்லன்னா நம்ம கம்பெனி பேரு கெடும் அப்படிங்கிறதெல்லாம் வெவரமா எடுத்து சொல்லிட்டு நம்ம ஆளுக்கு நாளையில இருந்து ஏர்போர்ட்ல வேலைன்னு சொன்னார். அப்பவெ நம்ம ஆளுக்கு சர்வ நாடியும் அடங்கிருச்சி. போயும், போயும் இந்த வேலைக்குத்தானா லச்ச ரூவா குடுத்து வந்தோம்னு நெனக்கும்போதே அழுகையா வந்துச்சு.
நான் டிப்ளோமா படிசிருக்கேன் எனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா குடுங்கன்னு கேட்டுப் பாத்தான்.. பதில் சொல்லாம நம்ம ஆள் கூட வெலைக்கு இருக்குற இன்னொரு ஆள காமிச்சு இவர் என்ன படிச்சிருக்காருன்னு நெனக்கிற அப்படின்னார் மஹாஸ். தம்பி நானு எம்.எஸ்.சி படிச்சிருக்கேன் தம்பி..அப்படின்னார் அவரு.
இனிமே ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் ஊருக்கு போகமுடியும் அதனால ரொம்ப கவலப் படாம வேலயப் பாரு.. நல்லா வேல செய்யுறன்னு தெரிஞ்சா சூப்பர்வைசர் ஆக்குனாலும் ஆக்குவாங்க அப்படின்னார்.
வந்த அன்னிக்கு எல்லாம் நல்லா இருக்குப்பான்னு அப்பாக்கு போன் செஞ்சது ஞாபகம் வந்துச்சு. இனிமே என்னத்த சொல்லி என்னத்த ஆகப் போகுதுன்னு அப்படியே வேலயப் பாத்து இன்னைக்கு சூப்பர்வைசர் ஆகிட்டான் பாலமுருகன்..
இன்னும் 10 நாள்ல ஊருல இருப்பான்.. அப்பா வாங்குன கடனெல்லாம் இப்பதான் அடைஞ்சு கொஞ்சம் பணம் சேத்துருக்கான்.. இனிமே எல்லாத்துக்கும் சாமான் வாங்கிட்டு போகனும்.. எல்லாருக்கும் நானு என்ன வெலை செய்யுறேன்னு மட்டும் சொல்லாம சூப்பர்வைசர் அப்படின்னு சொல்ல வேண்டியதுதான்னு நெனச்சுக்கிட்டான்..
இப்ப பாலமுருகன் என்ன செய்யுறான்னு நெனக்கிறீங்க..அங்க வேலய பாத்துக்கிட்டே கம்பெனியில இருந்து வருஷத்துக்கு ரெண்டு மூனு விசாவ வாங்கி அவங்க ஊர்ல இருந்து ஆளுகள கொண்டுவந்து இங்க விட்டுக்கிட்டு இருக்கான்... ஒரு விசாவுக்கு 50 ஆயிரம்தான் வாங்குறான்.. என்ன வேலைன்னும் சொல்லிப்புடுறான்.. என்னயமாதிரி (??) வந்த உடனேயே சூப்பர்வைசர் வேலையெல்லாம் கிடைக்காதுன்னு சொல்லியே கூட்டிட்டு வர்ரான்.. பாலமுருகன் அப்பாவுக்கு பய பொழச்சுக்கிட்டான்னு ஒரு பக்கம் சந்தோசம். அவனே கடனையெல்லம் அடைச்சு தங்கச்சி கலியானத்துக்குன்னு பணமெல்லாம் குடுத்து வச்சிருக்கான்.. ஒரு வழியா பாலமுருகன் கதை நல்லபடியா முடிவுக்கு வந்துச்சுன்னு வச்சுக்கங்க...
எத்தன பாலமுருகன நம்ம வாழ்க்கையில பாக்குறோம்.. எத்தன பேருக்கு இது மாதிரி வந்த இடத்துல பொழச்சிக்கிரனும்னு எண்ணம் வருது??? அல்லது பொழச்சுக்க முடியுது. பாலமுருகனுக்கு நல்ல நேரம்..
இந் நேரம் அவன் தப்பான இடத்துல மாட்டியிருந்தா??? அவன் வேல பாக்குற கம்பெனி அவனுக்கு சம்பளமும் தராம ஊருக்கு போகுற டிக்கெட்டும் தராம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்??

நம்ம பால்ராஜுக்கு ஆன மாதிரிதான்.. அடுத்த தடவ பாப்போம்...

2 comments:

பத்மகிஷோர் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பலமுருகன் பால்ராஜுன்னு எவ்வளவு பேரோட கதையை சொல்லப்போறீங்க?

பாரதிய நவீன இளவரசன் said...

//இந் நேரம் அவன் தப்பான இடத்துல மாட்டியிருந்தா??? அவன் வேல பாக்குற கம்பெனி அவனுக்கு சம்பளமும் தராம ஊருக்கு போகுற டிக்கெட்டும் தராம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்??//

ரொம்ப பேர் நிலைமை அப்படித்தான் சார் இருக்கு... ஒரு லட்சரூபாய் வரை செலவு பண்ணிட்டு இங்க வந்து மாசம் 500-600 ரியாலுக்கெல்லாம் வேலை பாக்குறாங்க... போட்ட காசை என்னிக்கி எடுப்பாங்களோ? தவிர, இவங்க முதலீடா போட்ட அந்த ஒரு லட்ச ரூபாயேகூட கடனவுடன வாங்கி ஒப்பேத்தியதாத்தான் இருக்கும்... சரி, வந்த இடத்திலயாவது நிம்மதி இருக்கா... சம்பாதிக்கிற பாதி காசு ஃபோன் பேசியே போயிடும் (இப்பத்தான் எல்லார் கைலையும் ஒரு மொபைல் இருக்கே)