அபார்ட்மெண்டுகளில் இல்லாமல் தனி வீட்டில் வசிப்போர் வீட்டுக்கு குறைந்தது ஒரு வேப்ப மரமோ, புளிய மரமோ வளர்த்தால் எத்தனை கோடி மரங்கள் ஓராண்டில் உண்டாகும்.
அதே போல பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு 5ம் வகுப்பின் ஆரம்பத்தில் ஆளுக்கு 5 மரக்கன்றுகள் கொடுத்து வளர்த்து வரச் சொல்ல வேண்டும்.
நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எங்கள் நேரடிக் கண்கானிப்பில் வளர்ந்தமரங்கள் இன்று பெரிதாய் கிளை விரித்து நிற்பதை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
1988ல் நட்டு 90களில் பள்ளியை விட்டு வெளி வரும்போதே அதற்கு நாம் தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லாத அளவு வளர்ந்து விட்டது.
இன்றும் எங்கள் பள்ளியின் விசேஷம் எங்கெங்கெல்லாம் காலி இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மரம் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கூகிள் மேப்பில் எங்கள் ஊரைப்பார்த்தால் எங்கள் பள்ளி மட்டும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.
மரம் வளர்ப்பதையும், மழைநீர் சேகரிப்பதையும் தொடர்ந்து அரசாங்கம் ஊக்குவிப்பதுடன் தேவையெனில் நம்ம அம்மா போல சவுக்கையும் சுழற்றலாம்.
எத்தனை நாளைக்குதான் ஸ்டெட்டஸ் மட்டும் போட்டுக்கொண்டிருக்கப் போகிறோமோ?
நீ என்னடா செஞ்ச என என்னைக் கேட்க முடியாது. நான் நட்டு வளர்த்த வேப்ப மரங்கள் இன்று நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது..

No comments:
Post a Comment