மதுரையில் ”ஆதிகாலத்து ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை” என ஒரு கடை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
மீணாட்சி கோவிலின் கிழக்கு கோபுரத்திலிருந்து புதுமண்டபத்துக்குள் நுழைந்து வெளியேறினால் வலதுகைப்பக்கம் 3 வது கடை. (வலப்புறம் இருக்கும் கடையில் முதல் கடை) ஏனெனில் அருகிலேயே அதே பெயரில் அண்ணனோ, தம்பியோ கடைபோட்டிருக்கிறார்கள்.
அதன் ஸ்பெஷல் காராச்சேவு.. பட்டை வத்தலை அரைத்து காரத்துக்காக சேர்த்திருப்பார்கள். காரம் பிடிப்பவர்களுக்கு தேவாமிர்தம். பிடிக்காதவர்களுக்கு, காரமா என அலறுபவர்களுக்கு ஒரே ஒரு சேவு குச்சியை வைத்துக்கொண்டு ஒரு தட்டு சோற்றை உள்ளே தள்ளிவிடலாம்.
எனது அப்பாவுக்கு ”படுக்கார முத்தே” என்றழைக்கபடும் பட்டை வத்தல், பெருங்காயம், புளி சேர்த்து பிசைந்த சட்னி போன்ற வஸ்து பிடிக்கும். ஒரு துளி நாக்கில் எடுத்து வைத்தாலே கண்ணீர் மல்கும். அவரைப்போன்ற ஆட்களுக்கு இன்றுவரை அதன் சேவுக்காகவே அந்தக்கடையில் இருந்து வாங்கி வரச் சொல்வார்கள். போன ஜனவரியில் ஊரிலிருந்து எனது நண்பர்களுக்காக அரைக்கிலோ காராச்சேவு துபாய்க்கு கொண்டு சென்றிருந்தேன். ஒரே ஒரு சேவை வாயில் போட்டவர்கள் ஏய், என்ன இது பட்டவத்தலையே அரைச்சு சேவு மாதிரி செஞ்சிருக்காய்ங்களா என மதுரைக்கார நண்பரே கேட்டார். பின்னர் முழுதும் நானே வரும்போதும், போகும்போதும் தின்று தீர்க்க வேண்டியதாகிற்று.
வாய்ப்புக்கிடைத்தால் அவர்களின் சூடான அல்வா ஒரு வாயும், இந்த காராசேவையும் காம்ப்னேஷனாக வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.. வாழ்க்கைக்கும் மறக்காத சுவையாய் இருக்கும்.

No comments:
Post a Comment