Tuesday, June 10, 2014

பாக்தாத் விமான நிலைய சோதனையான சோதனைகள்

ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி பாஸ்ராவுக்கு வந்தாயிற்று. பறப்பதென்னவோ ஒரு மணி நேரம். ஆனால், 4 மணி நேரம் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்கும்படி வேண்டுகின்றனர் பாக்தாத் விமான நிலையத்தார்.

ஏர்போர்ட்டுக்கு 4 கிலோமிட்டர் முன்னதாகவே நாம் இறங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விமான நிலையமே வைத்திருக்கும் ஜிம்சி அல்லது செவர்லேயில் ஷேரிங் டாக்ஸியில் விமான நிலையம் நோக்கி பயணம்.

முதலில் ஒரு செக்போஸ்ட். பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் இருக்கிறதா என.

அடுத்தது மோப்ப நாய்கள் வந்து செக் செய்யும் செக் போஸ்ட். வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கி தூரமாய் போய் நிற்க வேண்டும்.

அதற்கு அடுத்த செக் போஸ்ட்டில் மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் பரிசோதனை மற்றும் லக்கேஜ் செக்கிங். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கீழே எடுத்துப்போட்டு செக்கிங். ஈராக்கியர்களுக்கு தாவு தீர்ந்து விடும். இந்தியன் என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸ்.

அதன் பின்னர் மீண்டும் எக்ஸ்ரே ஸ்கேனிங். நமக்கும் ஸ்கேனிங்.

ஏர்போர்ட் வந்தாயிற்று. மீண்டும் சாமான்களுக்கு எக்ஸ்ரே ஸ்கேனிங் மற்றும் நமக்கு ஸ்கேனிங்.

அடுத்து ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தாயிற்று. இப்போது உங்கள் விமானம் புறப்பட 1 மணி நேரம் முன்பு மட்டுமே செக்கின் கவுண்டருக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

அனுமதித்த பின்னர் மீண்டும் ஸ்கேனிங். லாப்டாப்பை வெளியே எடுத்து எல்லா சாமக்கிரியைகளும் மீண்டும்.

அடுத்து போலிஸின் உடல் சோதனை. அப்பாடா என செக்கிங் கவுண்டர் வந்து பெட்டியை போட்ட பின்னர்தான் நிம்மதி.

இப்போது இமிக்ரேஷன். பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். அரைவலில் போட்டோவும் எடுப்பார்கள்,

இதைத் தாண்டியபின்னர்தான் முழுதும் ஃப்ரீ. பெல்ட், வாட்ச் எல்லாம் எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

ஒருவகையில் இத்தனை செக்கிங் இருப்பதால்தான் இன்றுவரை ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததில்லை, பாக்தாதே பற்றி எரிந்தாலும். 


(29.05.2014 ல் எழுதியது)

No comments: