Sunday, September 5, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அதனால்தான் மகாகவி பாரதியார்கூட

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

என்றார்.

எனது பள்ளி வாழ்க்கை மிக மிக இனிமையாக அமைந்த ஒன்று. குட்டி ஒண்ணாப்பில் (அரை கிளாஸ்) ஆரம்பித்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தேன். இன்றும் எனது பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் சந்திக்கிறேன்.

குறிப்பாய் 12ம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த சாந்தி அக்கா, பழனிச்சாமி அய்யா ஆகியோர் என மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர்கள்.

எனது பள்ளி வாழ்க்கை குறித்த எனது அனுபவங்களை முன்னரே எழுதியிருக்கிறேன்

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு


இது தவிர காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் எனக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல் என்மீது மிக அன்பாய் இருந்தனர். பள்ளியோ, கல்லூரியோ ஒருபோதும் சுமையாக உணர்ந்ததில்லை நான். அந்த வகையில் எல்லா ஆசிரியர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்.

எழுத்தறிவித்தவன் என்ற வகையில் எனது அன்பு நண்பன் டாக்டர் ஆர்.பிரகாஷையும் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவனால்தான் சராசரியைவிட மோசமான மாணவனாய் இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக்க முடிந்தது. உனது நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது எனது விஷயத்தில் மிக உண்மை.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நேசிப்பவராய் இருந்து சொல்லிக் கொடுத்த ஆசிரியரை நன்றியுடன் நினைப்பவராய் இருந்தால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

5 comments:

Anonymous said...

I have read a few of your writings.This one is really good.
I like the word kutty onnappu.
Keep writing.
All the best.

-Uma Prakash.

Unknown said...

அருமையான பதிவு;)) என்னுடைய ஆசிரியர்களான திருமதி பீனா, திருமதி அமர கீதா, திருமதி உமா, திரு.ஜோதி, திரு.சுகுமாரன் மற்றும் எல்.கே ஜியிலிருந்து எம்.ஏ வரை பாடம் நடத்திய அனைத்து ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

உங்கள் மற்றைய பதிவுகளையும் வாசித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

கானகம் said...

உமாஷக்தி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. முழுதாய்ப் படித்து விட்டு விரிவாய் எழுதப்போவதற்கு அட்வான்ஸ் நன்றிகள்.

Anonymous said...

படித்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன். குருவை மதிப்பவன் வாழ்வு என்றும் செழிக்கும். வளம் கொழிக்கும். உங்களதும் அஃதே. வாழ்க! என்னுடைய ஆசான்களின் நினைவை உண்டாக்கி விட்டீர் இப்பதிவின் மூலம். மிக்க நன்றி.

Unknown said...

Rasithen. Nandru