Friday, June 18, 2010

ராவணன்




மணிரத்னத்தின் இன்னுமொரு மெகா முயற்சி. ராமாயணமும், மஹாபாரதமும் இன்னும் எத்தனையோ படங்களுக்கு கதை தரும் போல.. மீண்டும் ஒரு ராமாயணக் கதை கொஞ்சம் மாடர்னாக பர்னச்சாலையில் இருந்து ஆரம்பித்து ராவணன் இறப்பதுவரையாக தொடர்கிறது.

அண்ணன் விக்ரம்தான் ராவணன். ஐஷ்வர்யாதான் சீதா, கார்த்திக்தான் கிட்டத்தட்ட அனுமார், விக்ரமின் தம்பியாக வருபவர்தான் விபீஷணன்.

ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டு வரும் ராமர்தான் பிரித்விராஜ்.

இப்படியும் புரிந்து கொள்ளலாம்..

அல்லது

தமிழ்த் தேசியவாதியாக இறப்பதற்கு முன்னும், இன்னும் ஆக்கப்பட்ட வீரப்பர் கதையைப் போலவும் இதைப் புரிந்துகொள்ளலாம். போலிஸ் அராஜகங்களில் இருந்து மலைவாழ் மக்களை காக்கும் காவலாளியாக விக்ரமையும், முத்துலட்சுமியாக ரஞ்சிதாவையும், அவனது அடிப்பொடிகளாக பிரபு வகையறாக்களையும், சேர்க்கலாம்.

அல்லது

தங்கையைக் (பிரியாமணி) கொன்ற போலீஸ்காரர்களை பழிவாங்கும் அண்ணனின் கதையாகவும் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அழகான காடுகளிலும், அருவிகளிலும் அலைந்து திரிந்து வருகிறோம், நாம். நல்ல தியேட்டரில் பார்க்கக் கொடுத்துவைத்திருந்தால் அருவியின் சாரல் நம்மீது அடிப்பதைக் கூட உணரலாம்.

துல்லியமான ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவனும் அவரது உதவியாளர் ஒருவரும் கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் எல்லோருக்கும் படத்தில் பிடித்த மிக நல்ல அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கும்.

இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஓரிரு பாடல்கள்தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். பிண்ணனி இசை, ஓவர் சத்தம்.

சுகாசினியின் வசனங்கள் சுமார் ரகம். சந்தன வீரப்பனின் கிறுக்குத்தனமான உடல் மொழிகளுக்கேற்ற சில ஒலிகளை விக்ரம் அடிக்கடி விட்டுக்கொண்டே இருக்கிறார். ஓரளவுக்குமேல் எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஐஷ்வர்யா பச்சன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இவரே. மிக மிக அழகாய் இருக்கிறார். எளிமையான உடையில், கண்ணை உறுத்தாத கவர்ச்சி காட்டுகிறார்.

அழகாய் இருப்பதாலோ என்னவோ, அவரது முகபாவனைகளும், அவரது உடல்மொழிகளும் மிக நன்றாய் இருக்கிறது.

விக்ரம்.

இந்த பாத்திரத்திற்கேற்ற உடல் முறுக்கும், வேஷங்களுமாக சூப்பராய் இருக்கிறார். ஐஷ்வர்யாவுடனான சொல்லாமலே காதல் காட்சிகளில் உடல்மொழிகளிலும், சிரிப்புகளுமாக கலக்குகிறார். படத்தின் இன்னொரு முக்கிய பலம் இவரே.

பிரித்விராஜ்.

மிக நல்ல நடிகர். இந்ந்தப்படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கடத்திச்செல்லப்பட்ட மனைவியை மீட்பது மட்டுமே இவரது வேலை. இவரது திரைவாழ்க்கையில் ஐஷ்வர்யாவின் ஜோடி என்பது மிக முக்கியமானதொரு விஷயமாய் இருக்கும்.


விக்ரமும், ப்ரித்விராஜும் தொங்கு பாலத்தில்போடும் சண்டை மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட். இருவருமே கலக்கியிருப்பார்கள்.

ரஞ்சிதா.

நித்தி கேசுக்குப் பின்னர் வெளியாகும் ரஞ்சிதா நடித்த படம் இது. ஐஷ்வர்யாவைவிட மிக அதிக கைதட்டல் கிடைப்பது இவருக்குத்தான். இவர் திரையில் தோன்றும் முதல் காட்சி முதல் எப்போதெல்லாம் திரையில் தோன்றுகிறாரோ அப்போதெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அருகிலிருந்த மலையாளி கூட்டம், எதுக்குடா இந்த சப்பை பிகருக்கு இந்தக் கைதட்டல் என நினைத்திருக்கும். படத்தில் ஏன் இவர் இருக்கிறார் எனத்தெரியவில்லை. இவர் இருக்கும் பகுதிகளை வெட்டியிருந்தால்கூட படத்தில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது. படத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். நித்தி கேசினால் மட்டுமா இல்லை, மணிரத்னமே போதும் என நினைத்ததாலா எனத் தெரியவில்லை.

பிரியாமணி

படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் கதையில் வரும் இவர் இருக்கும் சில நிமிடங்களில் நன்றாய்ச் செய்திருக்கிறார். போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரிப்பதும், அதன் பின்னர் கிணத்தில் விழுந்து இறப்பதுடன் அவரது பகுதி முடிந்து விடுகிறது. இதற்குத்தான் அண்ணன் விக்ரம் பழிவாங்கப் புறப்படுகிறார்.

கார்த்திக்

சிறிய வேடம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். புரியும்படி வசனம் பேசிய அவரது மிகச்சில படங்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும்.

மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே. குத்துப்பாட்டுகள், அனாவசிய சண்டைகள் ஏதுமின்றி ஒரு படம் காணக்கிடைப்பதே அரிதாய் இருக்கும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு இலுப்பைப் பூ சர்க்கரைதான்.

உயிரே படத்தில் எல்லையோரக் காவல்படையை வில்லனாக்கியிருந்தார். இந்தப் படத்தில் தமிழகக்காவல் துறையை வில்லனாய்க் காட்டியிருக்கிறார், மணிரத்னம்.


6 comments:

ஆயில்யன் said...

பார்த்துட்டு வந்தாச்சா? சூப்பரூ :))))

சுழியம் said...

சுருக்கமான, அபிப்பிராயங்களைத் திணிக்காத விமர்சனம். அருமை.

அதைக் கெடுக்க என் அபிப்பிராயங்களை இங்கே திணிக்கிறேன்.

இது ரி-மிக்ஸ் காலம். ஒரிஜனலை உல்டா செய்து, சொதப்பி, அசிங்கப்படுத்தி கலைச் சேவை செய்து காசு சம்பாதிக்கும் வேளை.

இளையராஜா அவர்களின் மகனான ஒரு இசை அமைப்பாளரிடம், காஃபி குடிக்கச் சொல்லும் விஜய் டிவி ப்ரோக்ராமில் ரி-மிக்ஸ் எனும் காப்பி அடிக்கும் நிலையைப் பற்றி சுகாசினி கேள்வி கேட்டார்.

அப்போது, இளையராஜாவின் பிள்ளை சொன்னது முக்கியமானது. ரி-மிக்ஸ் எடுப்பதன் மூலம் ஒரிஜனலை அவமானப்படுத்துகிறோம். அது மட்டுமல்ல கிரியேட்டிவிட்டி என்பதை சுத்தமாக அழித்துவிடுகிறோம் என்ற கருத்தில் பதில் சொன்னார்.

தமிழ் சினிமாக்களின் கதைகளில் ஒரிஜினாலிட்டி என்பது எப்போதும் இருந்ததே இல்லை (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து).

இத்தனை நாட்களாக ராமாயண, மகாபாரதக் கதைகளைத்தான் உல்டா செய்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெயர்களை மற்றும் சுரேஷ், ரமேஷ், ஷில்பா என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது ரி-மிக்ஸ் செய்வதை வெளிப்படையாகச் செய்கிறார்கள். ராமனைவிட ராவணன் நல்லவன், அவனைச் சீதை விரும்புகிறாள் என்பது போலச் சொல்லிவிட்டால் புரட்சிக் காரர், சீர்திருத்தவாதி, புதுமை விரும்பி என்றெல்லாம் பெயர்கள் கிடைக்கும். (மணியின் இந்தப் படத்தில் இப்படித்தான் கதை போகிறதா என்று தெரியாது. நான் படம் பார்க்கவில்லை. ஏனென்றால், நான் எந்தத் தப்பும் செய்யவில்லை.)

மேலும், எல்லைக் காவல்படை, தமிழகக் காவல்படைகளை இந்து இலக்கியங்களைக் கேவலப்படுத்துவது போல தாரளமாகக் கேவலப்படுத்தலாம். எல்லையில் காவல் காத்துக் கொண்டிருக்கும் வீரர்கள், எல்லையில் இருந்து புறப்பட்டு வந்து மணிரத்தினத்தைக் கேள்வி கேட்கப் போவதில்லை. தமிழகக் காவல் படை கிளம்ப அழகிரியோ அல்லது அவரது குண்டர் படைகளில் ஒருவரோ உத்தரவு கொடுக்க வேண்டும்.

அதே போல இந்து இலக்கியங்களைத் தாராளமாகக் கேவலப்படுத்தலாம். (மணி கேவலப்படுத்தி இருக்கிறாரா என்பது தெரியாது. பொதுவான உண்மையைச் சொல்லுகிறேன்.)

ஏனென்றால், இத்தகைய கேவலப் படுத்துதலக்ளை எதிர்ப்பு எழுகிறது என்பதை மீடியாக்கள் முற்றிலும் மறைத்துவிடும். சமூகமும் அசிங்கப்படுவதைப் பெருமையாக எண்ணிக் கொள்கிறது.

இசுலாமிய ஆண், இந்துப் பெண்களைக் காதலித்து மரியாதையாய் நடத்துவதாகப் படம் எடுத்தால் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், இந்து ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலித்து மரியாதையாக வைத்துக் காப்பற்றுவதாய் படம் எடுத்தால் வீட்டிற்கு வந்து குண்டு வைப்பார்கள். குண்டு வைத்தவர்களை அரசாங்கமே சாப்பாடு போட்டு நன்கு கவனித்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை செய்துவிடும். விடுதலை செய்யப்பட்ட தியாகி என்று இசுலாமிய சமூகத்தினரும் குண்டு வைத்தவர்களுக்குப் பணம், காசு, பவிசு, உதவிகள் செய்வார்கள். (மணி ரத்தினத்திற்கு நடந்ததைத்தான் சொல்லுகிறேன்.)

உறவுக்காரரான கமலஹாசனை அதே இசுலாமிய சமூகத்தினர் பேட்டி எடுத்து, “எங்க வீட்டுப் பொண்ணுகளுக்கு ஏதாவது ஆயிரக்கூடாதில்ல” என்று அவர் சொல்லுவதை வெளியிட்டு இந்துக்கள் பயந்து கிடக்கிறார்கள் என்று பெருமையாகக் காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.

மேலும், இப்படிப் படம் எடுத்து ஏதேனும் அசிங்கப் படுத்தி வைத்தால் வேலையற்ற நான்கு ரௌடிகள் இந்து இயக்கம் என்ற பெயரில் படத்தைக் கொளுத்தி, தியேட்டரைக் கொளுத்தி படத்திற்கு வேறு யாரும் தரமுடியாத பிரபலத்தை உண்டாக்கிவிடுவார்கள். யாரும் அப்படி எல்லாம் செய்யாவிட்டால், சீந்தப் படாத படத்தை எதிர்த்து ஏதாவது ஒரு மாய்க்கானை வைத்து கோர்ட்டில் கேசு போடச் செய்து அதைப் பத்திரிக்கைகளில் பெரிதாகப் பேசுவார்கள். காசு செலவில்லாமல் பிரம்மாண்ட விளம்பரம். விடுவானேன்?

எனவே, அசிங்கப்படுத்தினாலும் ரோசப்படாத சுரணையற்ற இந்துக்களைப் பற்றி, இந்து இலக்கியங்களைப் பற்றித் தாராளமாகப் படம் எடுக்கலாம்.

இளைத்துக் கிடப்பது பிள்ளையார் கோயில் ஆண்டி மட்டுமல்ல, பிள்ளையாரும்தான். பெருச்சாளிகள்தான் பெருத்துக் கொண்டிருக்கின்றன.

கானகம் said...

//ஆயில்யன் said...
பார்த்துட்டு வந்தாச்சா? சூப்பரூ :))))//

ஆமா, ராத்திரி 11.30 காட்சி. :-)அண்ணன் ஆயில்யன் ட்விட்டரில் கொடுத்த தகவலினால்..

கானகம் said...

//சுழியம் said...
சுருக்கமான, அபிப்பிராயங்களைத் திணிக்காத விமர்சனம். அருமை.//

நன்றி.

//ராமனைவிட ராவணன் நல்லவன், அவனைச் சீதை விரும்புகிறாள் என்பது போலச் சொல்லிவிட்டால் புரட்சிக் காரர், சீர்திருத்தவாதி, புதுமை விரும்பி என்றெல்லாம் பெயர்கள் கிடைக்கும்//

//இளைத்துக் கிடப்பது பிள்ளையார் கோயில் ஆண்டி மட்டுமல்ல, பிள்ளையாரும்தான். பெருச்சாளிகள்தான் பெருத்துக் கொண்டிருக்கின்றன//

உண்மைதான்.

வருகைக்கு நன்றி, ஆயில்யன் மற்றும் சுழியம்.

மணிரத்னமும் அதே சாக்கடைக்குள்தான் விழுந்திருக்கிறார், பட்டத்திற்காகவோ, அல்லது அவரது சாக்கடை மனநிலையாலோ.

ஆயில்யன் said...

//அண்ணன் ஆயில்யன் /

என்னாது அண்ணனா????????? நல்லா கெளப்புறீங்க பீதியை அவ்வ்வ்வ்வ்!

parottacricket said...

தல,
"மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே."அப்படினு சொல்லி முடிக்காம
மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான்..........இப்படி தொங்க விடறது சரியா இருக்குமோ..