
ஊடகங்களில் குரலால் மட்டுமே பிரபலம் அடைய வேண்டியது வானொலியில்தான்.. தமிழகத்தில் அனைவரையும் காலை 6.40க்கு மாநிலச் செய்திகளுக்கு முன்னதாக வரும் “ இன்று ஒரு தகவலை” கேட்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் தனது வித்தியாசமான குரலால் நல்ல நல்ல தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்வதை தமிழகமே கேட்டு மகிழ்ந்தது ஒரு காலத்தில்...
கிராமங்களில் இன்னிக்கு தென்கச்சி கதை நல்லா இருந்துச்சில்ல என ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளும் அளவு பிரபலமாக இருந்தது அவரது நிகழ்ச்சியும், அவரது குரலும்.
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றியின் காரனமே துனுக்குச் செய்திகளை கேட்க விரும்பும் நமது மனநிலைதான் என எண்ணுகிறேன். அதை தென்கச்சி அவர்கள் தனது குரலில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி கதை சொல்லும் பானியில் சொல்லி இறுதியில் ஒரு நகைச்சுவை துனுக்குடன் சொல்லியவிதம் நம்மையெல்லாம் ரசிக்க வைத்தது.
இவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்ச்சி 1988 ஜூலையில் தொடங்கியது. அவர் வேலை செய்த நிலைய இயக்குனர் திரு.செல்வம் சொன்னதைத் தட்ட முடியாமல் ஆரம்பித்து பின்னர் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகவும், அதிக பட்சவருவாயை ஈட்டித்தரும் நிகழ்வாகவும் ஆனபின்பு அந்நிகழ்ச்சி தென்கச்சி அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஆனதாக அம்புலிமாமா வலைத்தளத்திற்கு அளித்த நேர்கானலில் கூறி இருக்கிறார்.
இனிய உதயம் என்ற இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:
நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.
அது “ஈழத் தமிழர்கள்!'
அனைவராலும் விரும்பப்படும் அரிய மனிதராக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.தென்கச்சி கோ. சாமிநாதன்.
ஒரு அருமையான கதை சொல்லியை இழந்து வாடும் தமிழர் அனைவருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது அஞ்சலிகள்.
அண்ணாகண்ணன் அவர்களுக்கு தென்கச்சி அளித்த நேர்கானல் இங்கே
9 comments:
குறுகிய காலத்தில் ஒரு தகவலினை - புதிதாய்- நகைச்சுவையோடு சொல்லி முடிக்கும் திறன் பெற்ற மனிதர் என்பதில் மற்றவர்களிடமிருந்து தனித்து நின்றவர்!
வானொலியிலிருந்து ஒய்வு பெற்றபோது கூட எத்தனையோ உள்ளங்கள் மீண்டும் இ.ஒ.த தொடருமாறு வற்புறுத்தியதாக வந்த செய்திகளை படித்ததுண்டு!
ஆன்மா நிம்மதியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்!
Good post
Nala Karuthukal Thinamum
Kalai mani 7.40, on AIR not 6.40.
இன்று ஒரு தகவல் என்று மனிதனின் இயல்புகளை அழகாக சொன்ன மனிதர். இனி இன்னொருவர்???
ஆயில்யன் மற்றும் பாஸ்கி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
புலவன் புலிகேசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மனிதர்.... இன்று எம்முடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.வன்னியில் பதுங்கு குழியிலிருந்து கூட அன்னாரின் "இன்று ஒரு தகவல்" கேட்ட நாட்கள் இன்றும் நினைவில் உண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் ஈழத் தமிழன்
http://www.youtube.com/watch?v=hmsyVwZkz4E&feature=PlayList&p=BD2875EF0F32A4B0&index=2
வருகைக்கு நன்றி கண்ணீர்
தென்கச்சியாருக்கு நல்லதொரு அஞ்சலி.
பதிவின் ஊடே, ஈழத் தமிழரின் துயரத்தையும் வெளிப்படுத்தி விட்டீர்கள்.
வாழ்த்துகள்!
பெயர்சொல்ல விருப்பமில்லை.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இட்லிவடைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment