Sunday, March 2, 2008

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...


நம்மூர்ல இருக்குற ஆட்களுக்கு இங்க ( மத்திய கிழக்கு நாடுகள்ள) அப்படியே பெட்ரோலும், டீசலும் வீட்டுல பின்னாடி இருக்குற குழாயில பிடிச்சிக்கிற மாதிரியும் நம்மூர்ல அப்பிடியே ஒவ்வொரு நாளும் விலை ஏறிக்கிட்டே இருக்குன்னு கவலைப் படுறதும் அதுக்கு அமேரிக்காக்காரன் மேலயும், ஓபெக் (OPEC - Organization of Petroleum Exporting Countries) போட்டுட்டு விலை எப்ப குறையும்னு மோட்டுவளையப் பாத்துக்கிட்டே புதுக்கார் அல்லது பைக் வாங்குறதப் பத்தி யோசிக்கிறதுதான் நம்ம பொழப்பு.

விஷயம் என்னன்னா, உலகத்துல எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகள்ல முதல் பத்து இடத்துல இருக்குற கத்தார்லயும் டீசலுக்கு தட்டுப்பாடு வந்துச்சுன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா..????ஆனா அதுதான் உண்மை. இவங்ககிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைய இருக்கு. ஆனா சுத்திகரிக்கிற வசதி கம்மியாயிருக்கு, எப்படின்னா, போனவருஷம் செப்டெம்பர் கணக்குப்படியே இந்த நாட்டுல ஐஞ்சு லட்சம் வண்டிக இருக்கு. ( மொத்த மக்கள் தொகை 9 லட்சம் வெளிநாட்டுக்காரங்களையும் சேத்து) இத்தன வண்டிக்கும் சேத்து ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான் இருக்கு. அது கத்தார் பெட்ரோலியம் என்ற அரசுக்குச் சொந்தமான கம்பெனிதான் நடத்துது.

திடீர்னு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினாலயும், புதிய புதிய கட்டுமான வேலைகள் வந்ததுனாலயும் வாகனங்களின் பெருக்கத்துனால டீசல் தட்டுப்பாடு வந்துருச்சி. அதுலயும் கட்டுமான வேலைகளுக்குப் பொதுவா கனரக வாகனங்கள்தான் தேவைப்படுறதுனாலயும், அவைகள் டீசலில் இயங்குறதுனாலயும் அவங்களால திடீர்னு இவ்வளவு எண்ணெய்த்தேவைகளை சமாளிக்க முடியாம திணறிக்கிட்டிருக்காங்க. ஆனா முன்னெச்செரிக்கையா இன்னொரு சுத்திகரிப்பு நிலையம் ஒன்னும் கட்டிக்கிட்டிருக்காங்க. அது முடிஞ்சிருச்சுன்னா எல்லாப்பிரச்சினையும் தீந்துரும்னு நம்புறாங்க. நாமளும் நம்பவேண்டியதுதான். காருக்கு பெட்ரோல் தட்டுப்பாடு வராதவரைக்கும் நாம இந்த செய்திய பதிவுல போட்டுட்டு ஜாலியா இருக்கவேண்டியதுதான்..
ஓபெக் நாடுகள்:- (13 நாடுகள்) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்குவடார், இந்தோனேசியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வெனிசூலா.


உலகத்தோட மொத்த உற்பத்தியில நாற்பது சதவீதத்த இந்த நாடுகள்தான் தருது.அதாவது ஒருநாளைக்கு எம்பத்தாறு மில்லியன் பேரலாம். ( ஒரு மில்லியன்னா தெரியும்ல.. பத்து லட்சம்)

இந்த பெருந்தலைகள்தான் இப்ப பெட்ரோலிய பொருட்களோட விலைய எப்படி நிர்னயிக்கிறதுன்னு தெரியாம் முழிக்குது. எதனால? எல்லாம் டாலரோட வீழ்ச்சியினாலதான்..பெட்ரொலிய பொருட்களோட விலைகள் எங்குபோய் முடியும்னு தெரியாம ஒபெக்கே இருக்குன்னா நம்ம யோசிச்சு என்ன ஆகப்போகுது??

இந்த கூட்டத்துல ( OPEC) கனடாவும் பிரேசிலும் கூடிய சீக்கிரமே சேரும்போல தெரியுது. நம்ம இந்தியா இந்த கூட்டத்துல சேர்ர நாள் என்னைக்கோ??

2 comments:

ரசிகன் said...

பொது விஷய்ங்களை நீங்க சொல்லற விதமே அருமைதான்.. அல்ஷைன் ரிஃபைனரிக்கு டிரைனிங்குக்கு ஆள் ,QP ரிஃபைனரிக்கு 2 நாள் முன்னாடிதான் வந்தாஙக:)
SEEF ரிஃபைனரி ஏற்கனவே கூடுதலா புரடக்‌ஷனுல இருக்கு.:) உங்க பதிவை படிச்சப்பறம் தான் தெரியுது. எதுக்கு கூடுதலா சுத்திக்கரிப்பு நிலையங்களை திட்டமிடறாங்கன்னு.. நன்றிகள்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜெயக்குமார்,

இன்றுதான் இப்படியொரு விஷயமே கேள்விப்படுகிறேன்.
கத்தாரில் கூட எரிவாயுப் பிரச்சினையா?
ஆச்சரியமாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நண்பரே :)