
இனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி அனைவரது இடத்திலும் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா காலமானார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்..
இப்போது தினமும் படிக்கும் சுஜதாவின் புத்தகம் ஓரிரு எண்ணங்கள். பின்பக்க அட்டைப்படத்தில் உள்ள சுஜாதாவோடு தினமும் மானசீகமாய் பேசுவேன். எப்படிசார் இப்படி நகைச்சுவை இழையோட எல்லா விஷயத்தையும் எழுத முடிகிறதென.?? நல்ல ஆசான்.. நல்ல மானசீக நன்பர் பெரும்பான்மையோருக்கு, என்னைப் புத்தகம் படிக்க வைத்த எழுத்தாளர்.. அவரது ஓரிரு எண்ணங்களில் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ( நடன பெண்களுக்கு - வயது அல்லது இடுப்பு 40க்குமேல் ஆடாமல் இருக்க)
தமிழ் இனையப் பல்கலைகழகம் செய்யவேண்டியது பற்றி..
அவர் எழுதிய காகித சங்கிலிகளை சினிமாக்காரர்கள் செய்த குளருபடிகள் பற்றி..
இன்னும் எத்தனை எத்தனையோ கட்டுரைகளையும், அறிவியல் தொடர்களையும், (சுஜாதாவைக் கேளுங்கள்) ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகமும், போன்றவைகளை எழுதி நிறைய பேர்களை கதை மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்படுத்திய இன்னும் குறிப்பாய் அனைவரையும் எழுதத்தூண்டிய சுஜாதா இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவரது ஏகலைவன்கள் உலகம் முழுதும் பரவியுள்ளனர். அவர்களுக்கும் நமது ஆறுதல்கள் உரித்தாகுக.
அவர் முழுஅன்புடன் வணங்கிய அந்த ஸ்ரீரங்கன் அவரை தன்னுடன் அழைத்துக்கொள்வானாக..
இது அவரை முழுதும் படித்த ஒருவனால் எழுதப்பட்ட ஒரு நிறைவான அஞ்சலி அல்ல.. சுஜாதா எழுதியதில் கொஞ்சம் படித்ததிலேயே அவர்பால் ஈர்க்கப்பட்ட அவரது வாசகனின் வருத்தங்களை தெரிவிக்கும் ஒரு முயற்சி..
ஜெயக்குமார்
1 comment:
//இனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி அனைவரது இடத்திலும் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா //
உண்மை.அவர் மறைவிற்க்கு வருந்துகிறேன்.:(
Post a Comment