
ஜானி ட்ரை ஙுயென்.
அமெரிக்காவில் வசிக்கும் இவர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் டூப் நடிகராகவும் நடித்திருக்கிறார், 24 படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தற்காப்புக்கலை வல்லுநராகவும் இருக்கும் இவர் பிறந்தது தென் வியட்நாமில்.
8 வயதிலெயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்ட இவரது அம்மா சீனாவைச் சேர்ந்தவர்.எனவே இவர் பாதி சீனர், பாதி வியட்நாமியர்.
இவரது அண்ணன் சார்லி ஙுயென் தான் ”த ரீபெல்” படத்தை இயக்கியவர்.
சூர்யா நடித்த திரைப்படத்தில் வில்லனுக்கு கைதட்டும், விசிலும் பறப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டோங் லீ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.
சும்மா அம்பது அடி தூரத்தில் இருந்து கொண்டு ஒருத்தனை மெஸ்மெரிசம் செய்தல் சாத்தியமா, 5 விநாடிக்குள் ஒருவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தல் சாத்தியமா என்ற லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ”டோங் லீ” என்ற பாத்திரத்தில் நடித்த ஜானி ட்ரை ஙுயெனின் நடிப்பு அட்டகாசம்.
அவரது உடல் மொழி, நடக்கும் விதம், அடுத்தடுத்து ஆளைத் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டே போவது, கொஞ்சம்கூட வில்லத்தனம் செய்யாமல் வில்லன் வேலையைச் செய்யும் விதம் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்திருக்கிறது.
சண்டை ஒவ்வொன்றும் இயல்பாய் இருக்கிறது. கிட்டத்தட்ட விமர்சனம் எழுதிய எல்லோரும் போட்டுச் சாத்திய அதே விஷயத்தை நாமும் எழுதாமல் நல்லதாய் எழுதுவோம் என நினைத்ததால் இந்தப் பதிவு.
இந்தப் பட விமர்சனங்களை தமிழ்கூறும் நல்லுலகின் வலைப்பதிவர்கள் கிட்டத்தட்ட போஸ்ட்மார்ட்டமே செய்துவிட்டதால் அங்கே சென்று படித்துக் கொள்க.
ஜானி ட்ரை ஙுயென் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்
5 comments:
நன்று. ரொம்ப நாள் கழித்து பதிவு போல உள்ளதே. நன்றி.
Welcome back..! Is this post is to check still your blog is active ? :-)
snkm & Raghavendran Madhavan வருகைக்கு நன்றி நண்பர்களே..
ரொம்பநாளா ஏதும் எழுதாம இருக்கேனு ஒரு போஸ்ட். இனிமேல் தொடர்ச்சியா எழுத முயல்வேன்.
ஹேய்,, சிங்கம் கெளம்பிரிச்சு
ஹேய்,,,,
சிங்கம் கெளம்பிரிச்சு
Post a Comment