
சலீம் அஹமது கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் கொச்சின் ஹனீஃபா ஈரல் புற்றுநோயால் அவதிப்பட்டு இன்று (02.02.2010) சென்னையில்மரணம் அடைந்தார்..
நகைச்சுவை கலந்த வில்லனாக மலையாளத்தில் பெரும்பான்மையாகவும், தமிழில் பல படங்களிலும் சில இந்திப் படங்களுமாக கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறார். சிறு வேடங்கள் முதல் பெரிய வேடங்கள் வரையாக தமிழில் 80 படங்களில் நடித்திருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை அவரது உடல் மொழிதான் அவரது பலம். மலையாளத்தில் கிரீடம் , திலக்கம், பஞ்சாபி ஹவுஸ் என்ற மூன்று படத்திலும் அவரது நகைச்சுவையைக் கண்டு வியந்திருக்கிறேன்.
தமிழில் மகாநதி, சிவாஜி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரை மலையாள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் இழந்துவிட்டது.
அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக.
7 comments:
பட்டியல் திரைப்படத்தில் கூட நகைச்சுவைத்தனமான வில்லனாக அசத்தியிருப்பார். இவரை இழந்து தவிக்கும் உள்ளங்கள் அமைதி பெறட்டும் !
நல்ல நடிகர். பாவம். ஓவரா தண்ணியடிப்பாராம். அதான், கல்லீரல் பிரச்னையாகி...
ஆன்மா சாந்தியடைய வாழ்த்துவோம்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரிஷான் மற்றும் ஆடுமாடு.
அவர் ஒரு அருமையான நடிகர். எந்தப் படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கும்
அவரது ஆத்மா சாந்தியட்டும்.
துயரச் செய்தியைப் பகிர்ந்ததற்கு நன்றி
எனக்குப் பிடித்த காமெடியன்களில் ஒருவர்...மனுஷன் கலக்குவார்...சே !!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment