தோஹாவில் கடற்கரை மட்டுமே செலவு இன்றி பொழுதுபோக்கும் இடம். மாற்ற இடங்களில் எல்லாம் ( ஷாப்பிங் மால்கள், கிளப்புகள் வகையறா) பணம் இருப்பின் மட்டுமே இருக்க முடியும்.
ஒரு மாலை நேரத்தில் கடற்கரையில் இருந்து கடலில் உள்ள ஒரு சிறு திட்டை படம் எடுத்தேன். நன்றாக இருப்பதாக நான் நினைத்ததால் உங்கள் பார்வைக்கு..
கடற்கரையை ஒட்டிய நடைபாதையும், கடற்கரையும்.
தொலைவில் தெரிவது இஸ்லாமிய பொருட்காட்சிகள் நடக்கும் இடம். தற்போது விரிவாக்கம் நடைபெறுகிறது.
பொழுதுபோக்குப் படகு. ஒரு ஆளுக்கு பதினைந்து ரியால்களும் மொத்தமாக வாடகைக்கு எடுக்க அறுபது முதல் எழுபது ரியால்கள் வரையும் வாங்குகிறார்கள். முப்பது நிமிட பயணத்திற்கு. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதில் சென்று வந்தால் அருமையாக இருக்கும்.
அடுத்த பகுதி போட்டோக்கள் விரைவில்..
2 comments:
//தோஹாவில் கடற்கரை மட்டுமே செலவு இன்றி பொழுதுபோக்கும் இடம். மாற்ற இடங்களில் எல்லாம் ( ஷாப்பிங் மால்கள், கிளப்புகள் வகையறா) பணம் இருப்பின் மட்டுமே இருக்க முடியும்.
//
ஹிஹி.,. நாங்க பெரும்பாலும் ஷாப்பிங் மால் பக்கம்ல்லாம் சும்மா சுத்திப் பாக்கத்தானே போவோம்:))
முதல் படம் ,கடல் அலை கொந்தளிப்பு பொங்குவது போல .. அருமை.
நான் பார்த்த வரை அலையில்லாத கடல் அத்தனை ஆர்வமூட்ட வில்லை. நல்லா காற்றடிக்கும்போது படம் எடுத்திருப்பீர்களோ?
Post a Comment