
தசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி.
ஒரு மோசமான திரைப்படத்தைக் கூட எப்படி விற்பனை செய்வது பற்றி கமலிடம் தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. ஜக்கிசானை வைத்து ஒலிபேழை வெளியீடு என்ன.. மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி அணிவகுப்பு என்ன, எண்பத்தைந்து வயதுள்ள முதியவருக்கு படத்தைப் போட்டுக்காட்டி அவரைக் கட்டிபிடித்து பாராட்டிய செய்திகளை வெளியிடுவதென்ன என இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இமாலய உயரத்திற்கு ஏற்றிவிட்டு ஒரு சொத்தைப் படத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் கமல்.
வித்தியாசமான கோணங்களை அமைத்ததற்காக ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு. சுனாமி காட்சிகள், விஷ்னுசிலையை கடலில் வீசும் காட்சி தவிர மற்ற அனைத்தும் சராசரி வகையே.
பத்து வேடங்களில் கமல் நடித்தாலும் (??) உண்மையில் கவர்வது பூவராகவனும், தெலுங்கு மாட்லாடும் உளவு அதிகாரியும் மட்டுமே. மற்ற அனைவரும் வருந்தி உள்நுழைக்கப் பட்டது அப்பட்டமாக தெரிகிறது. எப்படியாவது பத்து வேடங்களில் திரையில் வந்துவிட வேண்டும் என நினைத்த கமல் கொஞ்சம் மக்கள் பார்ப்பதுபோல இருக்க வேண்டும் எனவும் சிந்தித்திருக்கலாம்.
இனி அடுத்த படத்திற்கும் எதாவது ஒரு கேனத்தனமான தயாரிப்பாளர் கிடைத்தால் லைட்பாயிலிருந்து இயக்கம், வெளியீடு மற்றும் தியேட்டரில் பார்த்தல் வரை கமலே செய்யுமாறு பணமும் நேரமும் செலவழித்த ஒரு அப்பாவி ரசிகன் வேண்டுகோள் விடுக்கிறான். செய்யுங்கள் உலக நாயகனே என உசுப்பேத்தப்பட்டுள்ள கமலஹாசன்.
ஜெயக்குமார்
10 comments:
எங்க பாத்தாலும் ஒரே தசாவதார விமர்சன மயமா இருக்கப்பா...தாங்கல.
நான் இன்னும் படத்தை பர்க்கவில்லை. பார்க்கலமா வேண்டாமா என்று கூட முடிவெடுக்கவில்லைல்.
ரெண்டே ரெண்டு கருத்து தான் நம்ம கிட்டேருந்து.
1. ரொம்ப நாள் எடுத்த படம் எதுவும் ஓடினதா சரித்திரம் இல்லை
2.மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை எந்த படமும் பூர்த்திசெய்ததில்லை
பத்மகிஷோர் சொல்வது:
2.மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை எந்த படமும் பூர்த்திசெய்ததில்லை
குறைந்தபட்ச கமல் படத்திற்கான எதிர்ப்பார்ப்புகளையும் இந்த படம் பூர்த்திசெய்யவில்லை என்பதே உண்மை.
ஜெயக்குமார், உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
என் விமர்சனத்தையும் நேரம் இருந்தால் பார்க்கவும்.
www.manjoorraja.blogspot.com
படத்தின் விமரிசனம் உடனே எழுத வேண்டுமென்று இரண்டாவது நாளே பார்த்துவிட்டேன். என் கருத்தையும் பாருங்களேன்
சகாதேவன்
அன்பின் ஜெயக்குமார்,
இவ்வளவு சீக்கிரமாக இந்தப்படத்தை எங்கு பார்த்தீர்கள் நண்பரே?
படத்தைப் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவிட்டது ஊடகங்கள்.
படத்தில் அப்படியென்ன இருக்கிறது என்ற ஆவலே படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது.
பத்மகிஷோர்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் திரை விமர்சனம் எல்லாம் எழுதினதில்ல.. ஆனா இந்த படம் பொறுமைய சோதிச்சிருச்சி. அதான் என்னோட முதல் விமர்சனம். ரொம்ப நாள் எடுத்த படம் எதுவும் ஒடுனதில்லைங்கிறது உண்மையா இருந்தாலும் கமல் வழக்கமா சொல்ற காரணம் அதை சிறப்பா செய்றதாக சொல்றதுதான்.. இந்தப்படத்திலிருந்து ஒரு பாடம் என்னன்னா அவசரப்பட்டு கமல் படத்த சீக்கிறம் பாத்துரக்கூடாதுங்கிறதுதான்.
மஞ்சூர் ராசா, உங்கள் விமர்சனமும் கண்டேன்.. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி
மீண்டும் வருக:)
சகாதேவன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரிஷான்..
வருகைக்கு நன்றி. முந்தாநாள் இரவு டிக்கெட் கிடைத்தது. தோஹா சினிமாவில். பக்கத்தில் அமர்ந்திருந்த குடும்பத்தலைவர் சொன்ன கமெண்ட்.. இன்னும் ரெண்டு தடவ பாத்தா புரியுமோ என்னமோ...
எலே நீ நெசமாவே தசாவதாரந்தான் பாத்தியாலே? சந்தேகமா இருக்கு! :)
ஒரு முடிவோடதான் படம் பாத்துருக்கீங்க போலருக்கு. ஹேராம், குணா, மகாநதி ரேஞ்சுக்கு இந்தப் படம் இருக்கும்னு யாராச்சும் சொன்னாங்களா? இப்படி நம்பி மோசம் போயிட்டீங்களே!
படம் கமலின் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். அதற்காக மோசமான படம் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை.
இது வணிக ரீதியிலான பொழுதுபோக்குப் படம். படத்தில் நிறை எதுவும் உங்கள் கண்ணில் தட்டுப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எனிவே, படம் வசூலை வாரிக்குவித்து தயாரிப்பாளரின் தலையில் துண்டு விழாமல் காப்பாற்றிவிடும் என்று தோன்றுகிறது. பிறகு ஹேராம் மாதிரி அட்டகாசமாக ஒரு படத்தைக் கமல் கொடுப்பார். நாமும் வழக்கம்போல அதை திரையரங்குகளிலிருந்து அதை விரட்டிவிட்டு, தசாவதாரத்தின் வெற்றிக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்வோம்.
கமலுக்கு வாய்த்தது அவ்வளவுதான்.
எல்லோரும் சகட்டுமேனிக்கு தசாவதாரத்தை தாக்கி விமர்சனம் எழுதுக்கிறார்கள் என்று சில அதி தீவிர கமல் ரசிகர்கள் புலம்புகிறார்கள். ஆனால் ஏன் என்பதை மறந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம்:கமல் போன்ற ஒரு மாபெரும் நடிகர் இவ்வளவு கோடியை கொட்டி எடுத்திருக்கும் படத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம்தானே தவிர அவரை குறைசொல்லவேண்டும் என்பதற்காக அல்ல இது என்பதை நண்பர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.
Post a Comment