விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Saturday, April 12, 2008
கன்னியாகுமரி, ஜெயமோகன் எனது எண்ணங்கள்.
கன்னியாகுமரி, ஜெயமோகன் எனது எண்ணங்கள்.
ஒரு நெடுங்கதையாக எழுதப்பட்ட ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கை வரலாறு எனக்கொள்ளலாம், இக்கதையை.
கன்னியாகுமரியை கதைக்களனாக மட்டுமின்றி இயக்குனரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இடமாக குறிப்பிட்டு இந்த கதையை பின்னி இருக்கிறார் ஜெயமோகன்.
தோல்வியடைந்த ஒரு திரை இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவரை சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி கொண்டு சென்றதில் கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதைபோல இருக்கிறது....
பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது. கதையில் வரும் இயக்குனர் ரவிக்கும் அவனது தோழிக்கும் (??) நிகழும் விவாதங்களும் சண்டைகளும் யார் வெல்வது என்ற போட்டியில் இருக்கும் இரண்டு பேர்களைக் குறிக்கிறது.
ரவியின் தோழியாய் வருபவள் எரிக்கா யங் படிக்கிறாள்.. (பிரவீனா )அறிவுஜீவித்தனமாக உரையாடுகிறாள் .. படுக்கையில் ரவிக்கு சுகம் கொடுக்கும் அதே நேரத்தில் அவன் அவளை வெல்ல முடியாது என்பதையும் தனது உடல் மொழியின் மூலம் அவனுக்குத் தெரிவிக்கிறாள். இதனால் விழையும் இருவருக்குமான மனப்போரட்டங்களும் ... ஒருவரை ஒருவர் வெல்வதற்கான் முயற்சி என ரவி கருதுவதும்..
ரவியின் வாழ்க்கையில் வரும் முன்று பெண்களையும் அவன் வெல்லத்துடிப்பதும் மூவரும் அவனை வென்றுவிட்டதான ஒரு மாயையில் சிக்குண்டு அவன் தன்னை தோற்றுவிட்டவனாக கருதுவதுடன் கதை முடிகிறது.
அதில் வரும் விமலா என்ற பாத்திரத்திடனுடனான அவனது அனுபவங்களும் (முன்னாள் காதலி) கன்னியாகுமரிக்கு ரவியுடன் அவள் வருவதும் அங்கு அவள் அவன் கண்முன்னாலேயே முரடர்களால் வன்புணர்ச்சி செய்யப்படுவதும், தன்னுடன் இருந்தபோது அவள் வன்புணர்வு செய்யப்பட்டவள் இன்று அதையெல்லாம் அவள் மறந்துவிட்டு வாழ்க்கையை இயல்பாய் கழிப்பதும் அவனுக்குள் இருக்கும் மிருகத்தை துண்டிவிட்டு அவளை அவமானப்படுத்துவதற்காக அவளை வன்புணர்ச்சி செய்தவனையே அவளை சந்திக்குமாறு செய்து விமலாவை கேவலப்படுத்த நினைக்கும்போது வன்புணர்வு செய்தவன் தவறுகளை நினைத்து மன்னிப்புக் கேட்கும் தொனியில் இருப்பதும் அவள் அவனுடைய பெண்குழந்தைகளின் வாழ்வுக்கு முடிந்த அளவு உதவி செய்வதாகவும் உறுதிமொழி கொடுக்கும்போது மீண்டும் அவன் தோற்கடிக்கப் படுகிறான்.
இந்த கதையில் தோற்கடிக்கப் பட்டவன் எவ்வளவு துரம் கீழிறங்கி மற்றவர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தான் உயர்ந்தவன் என தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்ள முனைவான் என்பதை ரவியின் செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன.
பிரவீனாவுக்கும் ரவிக்குமான உரையாடல்கள், பிரவீனா, ரவி, மற்றும் விமலாவும் சந்திக்கும் இடம், விமலா தான் வன்புணர்வு செய்யப்பட்டபோது ஏற்பட்ட எண்ணங்கள் அதன் பின்னர் ரவி தன்னை கைவிட்டதும் அந்த சூழ்நிலையை கையாண்ட விதத்தை சொல்லுமிடம் எல்லாம் அருமை.
வழக்கம் போல் நவீனத்துவ எழுத்துக்களில் காணப்படும் அனைத்து வசவுகளும் படிக்கக் கிடைக்கின்றன இக்கதையில்..
ஜெயக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//
பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.//
அப்படியா? யார் சொன்னது?
இயல்பான மனநிலை உடையவர்கள் அப்படியில்லைன்னு தோனுது:)
//வழக்கம் போல் நவீனத்துவ எழுத்துக்களில் காணப்படும் அனைத்து வசவுகளும் படிக்கக் கிடைக்கின்றன இக்கதையில்..//
ஹா..ஹா... நல்லவேளை அந்த வசவு சொற்களை படிக்காமலேயே கதையின் சாரம்சத்தை தெரிஞ்சுக்க செஞ்சிருக்கிங்க.. நன்றிகள் மாம்ஸ்:)
தோல்வியடைந்த ஒரு திரை இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவரை சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி கொண்டு சென்றதில் கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதைபோல இருக்கிறது....
மிக நல்ல எழுத்து நடை..
தோல்வியடைந்த ஒரு திரை இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவரை சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி கொண்டு சென்றதில் கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதைபோல இருக்கிறது....
மிக நல்ல எழுத்து நடை..-- prabhu rajK (www.prabhuraj.com)
Post a Comment