Thursday, March 20, 2008

வைக்கம் முகம்மது பஷீரின் - ஜென்ம தினம் பற்றிய எனது எண்ணங்கள்.



வைக்கம் முகம்மது பஷீரின் ஜென்ம தினம் என்ற கதையை காலச்சுவடில் தற்செயலாக படித்தேன். இப்படி ஒரு யதார்த்தமான கதைகளை இன்றுவரை படித்ததில்லை நான்.

ஒரு மனிதனின் ஒரு நாள் உணவுக்கான போராட்டம் மட்டுமே கதை. ஆனால் அதில் கதாநாயகனுக்கு ஏற்படும் யாசகம் கேட்க ஏற்படும் கவுரவசிக்கல்கள், வயிறும் ஏற்படுத்தும் உணவுக்கான உந்துதல்கள் , கடைசியில் என்ன ஆனாலும் சரி என பக்கத்து அறை நண்பன் சமைத்ததை எடுத்து உண்டுவிட்டு பசி அடங்கியதும் அதனால் ஏற்படப்போகும் மானக்கேட்டிற்காக அஞ்சி நடுங்குவதும் பின்னர் அந்த விஷயம் சாதாரணமாக முடிந்து ( நான் வெளிய சாப்டுட்டு வந்துட்டேன் என பக்கத்து அறை நண்பன் சொல்லுமிடம்) , படிப்போர்க்கு "அப்பா.. மானக்கேட்டிலிருந்து தப்பிச்சுகிட்டார்" என்ற ஒரு எண்ணமும், நிம்மதியும் வருமாறு அருமையாக கதையை கொண்டுசென்றுள்ளார் முகம்மது பஷீர்.

கதை எழுதுவதற்கு கதைக்கருவை எங்கும் தேடி அலையவில்லை அவர். தனது வாழ்க்கையையே கதையாக்கியதால் கதையின் ஓட்டம் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் செல்கிறது. புனைவில்லை, அலாங்கராங்கலில்லை வெகு யதார்த்தமாய் கதை நம்முள் படிகிறது..

வாசிப்பனுபவம் என்ற பதத்திற்கான அர்த்தத்தை மேகருன்னிசா என்ற கதைக்குப்பின்னர் இந்த கதைதான் முழுதும் கொடுத்தது எனக்கு.

எளிய நடை, படிப்பவருக்கு தன்னைச்சுற்றி நடக்கும் வாழ்க்கையை கதையில் பார்ப்பதால் கதையில் முழுதும் தன்னை செலுத்திவிடமுடிகிறது.

அவரைப்பற்றி காலச்சுவடில் சுகுமாரன் எழுதிய கட்டுரையில் அவரது வாழ்க்கைக்கதையும், உலகத்தின் மீதும், எளிய மக்களின்மீதும் கொண்டிருந்த அன்பையும், அவர்களையும் தன்னையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அவரது எல்லாக்கதைகளும் எழுதியதாகக்குறிப்பிடுகிறார். (அங்கிருந்துதான் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகளை படிக்க ஆரம்பித்தேன் - அவரது கதைகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தனர்)

நான் படித்த இரண்டாவது கதை பஷீர் எழுதியதில் தேன் மாம்பழம். நான் படித்த முதல் கதையைப்போலவே எளிமையான கரு. சீரான நடையில் கதை சொல்லல் எல்லாம் இருந்து பஷீரை தேடி படிக்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்கிவிட்டார்..

நான் வாழ்கின்ற காலத்திலேயே வாழ்ந்த ஒரு நல்ல எழுத்தாளரை அவரது மறைவு மறைவுக்குப் பின் படிக்கிறேன். உலகில் இருக்கின்ற அனைத்துப்புத்தகங்களையும் படித்துவிட முடிகிறதா என்ன??

இன்னும் வாழ்க்கைப்பாதையில் எத்தனை ஆச்சரியங்கள் எழுத்து ரூபத்தில் காத்திருக்கிறதோ யாருக்குத்தெரியும்...????

நீங்களும் முதல் முறையாய் வைக்கம் முகம்மதுவை படிப்பபராய் இருந்தால் நான் ஆரம்பித்த இந்த கதையிலிருந்தே தொடங்குங்கள்.

ஜெயக்குமார்.

Sunday, March 2, 2008

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...


நம்மூர்ல இருக்குற ஆட்களுக்கு இங்க ( மத்திய கிழக்கு நாடுகள்ள) அப்படியே பெட்ரோலும், டீசலும் வீட்டுல பின்னாடி இருக்குற குழாயில பிடிச்சிக்கிற மாதிரியும் நம்மூர்ல அப்பிடியே ஒவ்வொரு நாளும் விலை ஏறிக்கிட்டே இருக்குன்னு கவலைப் படுறதும் அதுக்கு அமேரிக்காக்காரன் மேலயும், ஓபெக் (OPEC - Organization of Petroleum Exporting Countries) போட்டுட்டு விலை எப்ப குறையும்னு மோட்டுவளையப் பாத்துக்கிட்டே புதுக்கார் அல்லது பைக் வாங்குறதப் பத்தி யோசிக்கிறதுதான் நம்ம பொழப்பு.

விஷயம் என்னன்னா, உலகத்துல எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகள்ல முதல் பத்து இடத்துல இருக்குற கத்தார்லயும் டீசலுக்கு தட்டுப்பாடு வந்துச்சுன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா..????



ஆனா அதுதான் உண்மை. இவங்ககிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைய இருக்கு. ஆனா சுத்திகரிக்கிற வசதி கம்மியாயிருக்கு, எப்படின்னா, போனவருஷம் செப்டெம்பர் கணக்குப்படியே இந்த நாட்டுல ஐஞ்சு லட்சம் வண்டிக இருக்கு. ( மொத்த மக்கள் தொகை 9 லட்சம் வெளிநாட்டுக்காரங்களையும் சேத்து) இத்தன வண்டிக்கும் சேத்து ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான் இருக்கு. அது கத்தார் பெட்ரோலியம் என்ற அரசுக்குச் சொந்தமான கம்பெனிதான் நடத்துது.

திடீர்னு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினாலயும், புதிய புதிய கட்டுமான வேலைகள் வந்ததுனாலயும் வாகனங்களின் பெருக்கத்துனால டீசல் தட்டுப்பாடு வந்துருச்சி. அதுலயும் கட்டுமான வேலைகளுக்குப் பொதுவா கனரக வாகனங்கள்தான் தேவைப்படுறதுனாலயும், அவைகள் டீசலில் இயங்குறதுனாலயும் அவங்களால திடீர்னு இவ்வளவு எண்ணெய்த்தேவைகளை சமாளிக்க முடியாம திணறிக்கிட்டிருக்காங்க. ஆனா முன்னெச்செரிக்கையா இன்னொரு சுத்திகரிப்பு நிலையம் ஒன்னும் கட்டிக்கிட்டிருக்காங்க. அது முடிஞ்சிருச்சுன்னா எல்லாப்பிரச்சினையும் தீந்துரும்னு நம்புறாங்க. நாமளும் நம்பவேண்டியதுதான். காருக்கு பெட்ரோல் தட்டுப்பாடு வராதவரைக்கும் நாம இந்த செய்திய பதிவுல போட்டுட்டு ஜாலியா இருக்கவேண்டியதுதான்..




ஓபெக் நாடுகள்:- (13 நாடுகள்) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்குவடார், இந்தோனேசியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வெனிசூலா.


உலகத்தோட மொத்த உற்பத்தியில நாற்பது சதவீதத்த இந்த நாடுகள்தான் தருது.அதாவது ஒருநாளைக்கு எம்பத்தாறு மில்லியன் பேரலாம். ( ஒரு மில்லியன்னா தெரியும்ல.. பத்து லட்சம்)

இந்த பெருந்தலைகள்தான் இப்ப பெட்ரோலிய பொருட்களோட விலைய எப்படி நிர்னயிக்கிறதுன்னு தெரியாம் முழிக்குது. எதனால? எல்லாம் டாலரோட வீழ்ச்சியினாலதான்..பெட்ரொலிய பொருட்களோட விலைகள் எங்குபோய் முடியும்னு தெரியாம ஒபெக்கே இருக்குன்னா நம்ம யோசிச்சு என்ன ஆகப்போகுது??

இந்த கூட்டத்துல ( OPEC) கனடாவும் பிரேசிலும் கூடிய சீக்கிரமே சேரும்போல தெரியுது. நம்ம இந்தியா இந்த கூட்டத்துல சேர்ர நாள் என்னைக்கோ??