Wednesday, December 26, 2007

கத்தாரில் வலைப் பதிவர்கள் மாநாடு.

எனக்கு ஒரு ப்ளாக் தொடங்கனும்கிற ரொம்பநாள் ஆசைய அக்டோபர் 2ம்தேதி தீத்துக்கிட்டேன்.. கத்தர்ல இருந்துகிட்டு ப்ளாக் போடறோமே துணைக்கு யாராவது இரு்ப்பாங்களா அப்படிங்க்கிற பயமெல்லாம் முதப் பதிவு போட்டதுமே ஆதவன கண்ட பனி போல விலகிருச்சி..


அண்ணன் " ரசிகன்" இருக்காக..

நவீன இளவரசர் " பாரதிய நவீன இளவரசன் இருக்காக..

அப்புறம் "கடகம்" இருக்காக..

அப்படின்னு ஆரம்பிச்சாரு நம்ம ரசிகன். அப்ப நம்ம தனியா இல்லபோலயே.. கும்மி அடிக்க ஏகப்பட்ட பேரு இருக்காக போலன்னு ஆனதுக்கப்புறம்தான் கொஞ்சம் தைரியம் வந்துச்சு.

அப்புறம் ரசிகனோட பல முறை பேசி தொடர்புகள உண்டாக்குனதுக்கு அப்புறம் ஒரு பதிவர் மாநாடு (நாலு பேர் சேர்ந்தா மாநாடுங்கிற தமிழ் கலாசாரத்தை அடியொற்றி...!) போட்ரலாம்னு தீவிரமா யோசிச்சு அப்புறம் ஈகைப் பெருநாள் விடுமுறையில போட்ருவோம்னு தீர்மானிச்சு அப்புறம் பல காரணங்களால அதுவும் முடியாம இப்ப சீக்கிறம் சந்திச்சிருவோம்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கத்தார்ல எல்லோரும் ஓட்டமா ஓடுற வேலைபாத்தாலும் இந்த ப்ளாக் எழுதுறதுக்கு மட்டு எப்படித்தான் நேரம் ஒதுக்குறங்கன்னே தெரியல. அதுலையும் இந்த கடகம் போடுற பதிவுகள பாத்தா வேலைக்குப் போறாரான்னே தெரியல.. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு பதிவு போடுறாரு.. சரக்கு இருக்கு.. போடுறாரு..


பாரதிய நவீன இளவரசன் -- இதுதான்னு இல்லாம எல்லாத் தலைப்புலையும் எழுதி கலக்குறாரு.. குறிப்பா எழுத்துல ஒரு தனி முத்திரை பதிச்ச லா.ச.ராமாமிர்தத்தோட அஞ்சலியில அவரே கைப்பட எழுதுன கடிதங்கள இணைச்சு நல்ல விதமா பதிஞ்சிருக்காரு இந்த பதிவுல

ரசிகனோட வலைப்பூவே கலக்கலா அமைச்சிருக்கார். ஆப்பு அடிக்கிறதுலஆரம்பிச்சு, சொந்தக் கதை, விமர்சனம், அட்வைஸ் அப்படி இப்படின்னு எல்லாத்தையும் நல்லா ரசிக்கும்படியா எழுதுறார். இவரோட வாசகர் வட்டம் ரொம்ப பெரிசு போல..


நமக்கு அந்த பிரச்சினை எல்லாம் ஏதும் இல்ல. ஏன்னா சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும். அதனால "ஒண்ணுமே எழுதாம இருக்க ப்ளாக் எதுக்கு" அப்படிங்கிற கமெண்டெல்லாம் அனுமதிக்க வேண்டி இருக்கு. என்னா உண்மையத்தானா சொல்றாங்க.


அடுத்த முறை எப்படியாச்சும் சந்திச்சு எங்க வலைப்பதிவர் மாநாடு பற்றிய குறிப்புகளை அலைகடலென திரண்டு வரப்போகும் உங்களுக்கு வழங்குகிறேன்.

(சிறு குறிப்பு. ரெண்டு பேர் சந்திச்சா அதுசந்திப்பு. மூணு பேர் பாத்துகிட்டு அவங்களுக்கு வலைப் பூவும் இருந்துட்டா அது வலைப் பதிவர் மாநாடு என்பதுதான் பின்நவீனத்துவ கலாசாரம்.)

15 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

//Labels: கத்தார், கும்மி, வலைப்பதிவர்கள் //

கத்தார் சரி. வலைப்பதிவர்கள் சரி.
அது என்ன 'கும்மி'?

கானகம் said...

கூட்டமா அடிக்காட்டாலும் கூட்டத்த சேத்துகிட்டு அடிக்கிறதுதான் கும்மி. ( இது எந்த நவீனத்துவத்திலும் சேராது)

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன்...!

ஆயில்யன் said...

என்னது வலைபதிவர் மாநாடாஆஆஆ

என்னப்பா பீதிய கிளப்புறீங்க!
நான் வர்லை இந்த ஆட்டத்துக்கு (கும்மிக்கு)

:-)))))

ரசிகன் said...

"கத்தாரில் வலைப் பதிவர்கள் மாநாடு."

ஆஹா...கலக்கறிங்களே..கத்தாரைப் பற்றி இங்க இருக்கிறவங்களுக்கே தெரியாத விசயங்களை பதிவா போட்டு பின்னிட்டிங்களே.. மாநாடு பத்தி சொல்லவா வேண்டும்.. பட்டைய கெளப்புங்க..

வாழ்த்துக்கள்..

அன்புடன் உங்கள்
ரசிகன்...

ரசிகன் said...

// சரக்கு இருக்கு.. போடுறாரு..///

அவ்வ்வ்வ்வ்....
ஏனுங்க ஆயில்யன் நெசமாவா? சொல்லவே இல்ல?...:P

ரசிகன் said...

// நமக்கு அந்த பிரச்சினை எல்லாம் ஏதும் இல்ல. ஏன்னா சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும். //

ஆஹா.. தன்னடக்க பாதாளத்துக்கே போயிட்டிங்களே மாம்ஸ்..மேல ஏறி வாங்களேன்.ஹிஹி..:)))

ரசிகன் said...

// ஆயில்யன் said...

என்னது வலைபதிவர் மாநாடாஆஆஆ

என்னப்பா பீதிய கிளப்புறீங்க!
நான் வர்லை இந்த ஆட்டத்துக்கு (கும்மிக்கு)///

எங்க நழுவறிங்க.. "ஆயில்"யன்.. கூடைய கவுத்துப்போட்டு புடிச்சிடமாட்டோம்:P:P:)))

ரசிகன் said...

// மூணு பேர் பாத்துகிட்டு அவங்களுக்கு வலைப் பூவும் இருந்துட்டா அது வலைப் பதிவர் மாநாடு என்பதுதான் பின்நவீனத்துவ கலாசாரம்.)///

அப்போ நாம நாளு பேரு சந்திச்சிக்கிட்டாக்கா.. மகாமாநாடு தானே?.. (எங்களுக்கும் pin நவினத்துவம் பத்தி கொஞ்சம் தெரியுமில்ல..:P)

ஹரன்பிரசன்னா said...

நடக்காத மாநாட்டுக்கே இவ்ளோ அலப்பறையா! இன்னும் மாநாடு நடந்துட்டா... கஷ்டம்தான்.

ஆயில்யன் said...

//ரசிகன் said...
// சரக்கு இருக்கு.. போடுறாரு..///

அவ்வ்வ்வ்வ்....
ஏனுங்க ஆயில்யன் நெசமாவா? சொல்லவே இல்ல?...:P
//
இதெல்லாமா போய் வெளியில சொல்லிக்கிட்டிருப்பாங்க

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி..:)))

ஆயில்யன் said...

//ஹரன்பிரசன்னா said...
நடக்காத மாநாட்டுக்கே இவ்ளோ அலப்பறையா! இன்னும் மாநாடு நடந்துட்டா... கஷ்டம்தான்
//

நெசம்தான் :)))))

பத்மகிஷோர் said...

பின் நவீனத்துவ சந்திப்பிற்கு முக்கியாக ஒரு ஐட்டம் தேவை, கத்தாரில் டாசுமாக்கு உண்டா சார்?

பாரதிய நவீன இளவரசன் said...

//பின் நவீனத்துவ சந்திப்பிற்கு முக்கியாக ஒரு ஐட்டம் தேவை//

ஐட்டம்மா???????????????

நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு!!!

பாரதிய நவீன இளவரசன் said...

//கத்தாரில் டாசுமாக்கு உண்டா சார்?//

டாசுமாக்கு உண்டான்னு தெரியாது. ஆனால், ரமதாவில் ஒரு ஸ்தலம் உண்டு. பின்னே...
ஷெரட்டன்,
இண்டர்காண்டினென்டல்,
சோஃபிடல்,
இன்னுமொரு ரமதா,
முவன் பிக்டவர்ஸ்,
ரிட்ஜஸ்,
ரிட்ஸ்கார்ட்டன்,
டிப்ளோமேட்டிக்,

இல்லாங்காட்டி, சோஃபிட்டல் கட்டிடத்தில் உள்ள மெர்கூர்,
கெஸ்ட் பேலஸ்,
கல்ஃப் ஹாரிஸன்... இதுபோன்ற ஸ்தலங்களும் உண்டு.

இதுதவிர, ஏதேனும் ஸ்தலங்களூம் அதன் ஸ்தலபுராணங்களும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.