விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Tuesday, January 26, 2010
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
வலையுலகில் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
பாரதத்தாயானவள்,
வரும் ஆண்டுகளில் இந்தியர்கள் அனைவரும் தமது நாட்டைப் பற்றி குறைந்தபட்சம் சிந்திக்கவும்,
நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கவும், இல்லையெனில் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் கருப்புப் பணம், கள்ளக்கடத்தல், பதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடாமலிருக்கவும்,
அரசியல்வாதிகள் பிற மத தீவிரவாதிகளால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து உண்மையான கவலைகொண்டு செயலாற்றவும், சிறுபான்மையினரின் வாக்குவங்கிகளுக்காக நாட்டை பலிகொடாதிருக்கவும்,
சக இந்தியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாவிடினும் பிரிவினையை தூண்டாதிருக்கவும்,
நமது நாட்டின் சுதந்திரம் குறித்து சிறிதளவாவது தெரிந்துகொள்ளவும், தற்போதைய தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாக சுதந்திரத்திற்காக உழைத்த “நேதா” ஜி குறித்தும், ”சர்தார்” குறித்தும், தாதாபாய் குறித்தும், ஜெயப்ரகாஷ் நாராயணன் குறித்தும் தெரிந்து கொள்ளவிழைவோம்.
தாயைக் காப்பதும், நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்.. - பாரதிதாசன்..
பாரத நாட்டின் புதல்வர் நாம்.. நம் தாயை பாதுகாக்க உறுதி கொள்வோம்..
ஜெயக்குமார்
குறிச்சொற்கள்
Republic day
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அனானி,
வருகைக்கு நன்றி. :-)
உங்கள் மறுமொழி எனது தளத்தின் தரத்திற்கு மிகக்கீழாய் இருப்பதால் பதிக்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொஞ்சம் நாகரீகமாக நீங்கள் எழுதும்போது அவசியம் பதிக்கிறேன். அன்புடன்,
ஜெயக்குமார்
Post a Comment