








இந்த முறை போன மாதம் 26ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப் பட்டபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னர்தான் சொன்னார்கள் மஸ்கட்டில் ஒரு கோர்ஸ் ஒன்று ( Dangerous Goods Handling - Air Cargo) முடித்து விட்டு பின்னர்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என. (அதில் பாஸ் செய்தது சந்தோசமான விஷயம்)
நம்ம ஊர் நன்றாகவே உள்ளது, குறிப்பாக மதுரை மற்றும் சென்னை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்தது என்னை புதுப்பித்தது போல உனர்ந்தேன்.
இந்த பயணத்தில் எனது பள்ளிக்கு சென்று வந்ததுதான் ஹைலைட். சில போட்டோக்களை இணைத்திருக்கிறேன்..எப்படி இருக்கிறது எங்கள் பள்ளி என கூறுங்கள்.