Friday, February 13, 2015

புதுப்பேட்டை... கொக்கி குமாரு

அரசியல்வாதிகள் இல்லாமல் கொக்கி குமார்களோ, கொக்கி குமார்கள் இன்றி அரசியல்வாதிகளோ இல்லை. கொக்கி குமார்கள் அந்த உலகில் நிலைத்து நிற்பது வெற்று தைரியத்திலும், முதல்கொலைக்குப் பின்னர் வரும் இனி என்ன ஆகிவிடும் என்ற தைரியத்திலும்தான்.

எத்தனை கொலைகள் செய்தவனானாலும் தனக்கென குழந்தை, குடும்பம் என ஆகிவிட்டால் அருகில் இருப்பவன் “பயப்படுறியா குமாரு” எனக் கேட்கும் அளவு பயந்துவிடுகிறார்கள். 

பணம், பொதுமக்களின் பயம், மமதை என்ன வேண்டுமானாலும் செய்யத்தூண்டும். குடும்பமும் சூழலுமே யாரையும் கொக்கிகுமாராக்குகிறது. 

இதில் எந்த உபதேசமும் இல்லை. ஒரு ரவுடியின் வாழ்க்கையின் ஒரு துண்டு. ஆனால், அதை உண்மையாய் எடுத்த விதத்தில் செல்வராகவன் பட்டையைக் கெளப்பி இருக்கிறார். படிச்சநாயே கிட்ட வராதே.. பிச்சைக்காரன் - அடியாள் - ஏரியா தாதா - அடியாள் தலைவன் - கட்சிசார் அடியாள் - கட்சியின் வட்டச் செயலாளர் - மீண்டும் அரசியல் ரவுடி மற்றும் குடும்ப அநாதை - ஜெயில் - மீண்டும் அரசியல். 

இத்துனூண்டு கொசு போலிருக்கும் தனுஷின் தலையில் இத்தனை பெரிய பூசனிக்காயை வைத்தும் அட்டகாசமாக சமாளிக்கிறார். ஸ்நேகா / சோனியாஅகர்வால் இருவருமே அவரவருக்கான பங்கைச் செய்திருந்தாலும் ஸ்நேகா சூப்பர். 


நம்ம பாட்டையாவும் கலக்கலாக வழக்கம்போல முதல்வராக நடித்துள்ளார். சாதா முதல்வரல்ல, நிரந்தர முதல்வர்.. :) இப்படிப்பட்ட படங்கள் எடுத்த செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை எடுத்ததும், அதன் பின்னால் காணாமல் போனதெல்லாம் ஆச்சரியமே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் பார்த்திபன் மீண்டதைப்போல செல்வராகவனும் ஏதேனும் ஒரு படத்தில் மீளுவார் என நம்பலாம். என்னது சிவாஜி செத்துட்டாரா? என அதிர்ச்சியடைவோர் ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ்.. :)