Thursday, January 23, 2014

வடக்கு ருமைலா - Iraq

இன்று வடக்கு ருமைலா என்ற இடத்தில் ஒரு வியாபார சந்திப்பு. பாஸ்ராவிலிருந்து 100 கிலோமீட்டர்கள் பாக்தாத் போகும் வழியில். செக்போஸ்ட் சோதனைகள் முடிந்து உள்ளே சென்றால் தனி உலகம். எல்லாக் கம்பெனிகளும் தங்களது கிளையை இங்கேயும் வைத்திருக்கின்றன.

நான் சந்திப்புக்குச் சென்றது ஒரு ஈராக்கிய கம்பெனிக்கு. சந்திப்புக்கு அழைத்திருந்தவர் பாக்கிஸ்தானி.. அந்த நிறுவண சி.ஈ.ஓ ஒரு இந்தியர்.

சந்திப்பெல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் வரைக்கும் அந்த சி.ஈ.ஓ வை எங்கேயோ நெருக்கமாக சந்தித்திருக்கிறேன் என மனது சொல்லிக்கொண்டே இருந்தது. புறப்படும்போது சட்டென ஞாபகம் வந்துவிட்டது.

ஈராக் கிளையை ஆரம்பிக்கும்போது ஒரு ஆர்டருடன் ஈராக்கில் நுழைந்தால் கைக்காசு செலவில்லாமல் கம்பெனியை ஆரம்பித்துவிடலாம் என அவரிடம் ஒரு பைப்லைன் வேலையை எங்கள் கம்பெனிக்கு ஒதுக்கித் தரும்படி கேட்கப் போயிருந்தேன்., 2012 செப்டம்பரில்.

உங்களால் ஈராக்கிலெலாம் வேலை செய்ய முடியாது. விசாவில் ஆரம்பித்து, சாதனங்களை ஈராக்குக்குள் கொண்டு வருவதும், வெளியே கொண்டு செல்வதும் பெரிய கம்பெனியான எங்களாலேயே முடியவில்லை. அதனால் உங்களுக்கு ஆர்டரைக்கொடுத்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட முடியாது எனச் சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.

இன்றைய சந்திப்புக்குப் பின்னர் எப்படிப் போகுது ஈராக் பிஸினஸ் எல்லாம் என்றார்.. நீங்க முடியாதுன்னு சொன்ன உடனேயே எங்கே ஈராக்கில் கம்பெனி திறக்க முடியாதோ என்ற பயத்தில் முழுசா இறங்கி அடுத்த மாசமே கம்பெனி லைசென்ஸ் அப்ளை செஞ்சு 2013 ஜனவரிக்குள்ளேயே நாங்கள் ரெடியாகி இதுவரை 3 பெரிய ப்ரஜக்டுகளை முடித்து விட்டேன். நீங்கள் என்னை சந்திப்புக்கு அழைத்திருக்கும் இந்த வேலையின் மிகப்பெரிய பகுதி ஒரு துருக்கிக் கம்பெனியிடம் உள்ளது. அந்த வேலையை நாங்கள்தான் செய்கிறோம் என்றதும் மிக்க மகிழ்ச்சி எனச் சொல்லி கை குலுக்கினார்.

போகும்போது ”I was wrong Jay. We should have given the job to you guys. The contractor killed us you know?" என்றார்.

இப்படிப் பட்ட பொட்டல்காட்டில்கூட எதிர்பாராத ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே சினிமா டயலாக் “ ரொம்ப ஸ்மால் வேல்டுங்க”

சந்திப்புக்கு பின்னர் சுற்றிப் பார்த்ததில் நிறைய தமிழ் முகங்கள். திருச்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற புதிய நண்பர் கிடைத்தார். பார்த்த 5 நிமிடங்களிலேயே நண்பர்கள்... 

இன்னும் சில தமிழர்கள் வேலைக்காக சைட்டுக்கு சென்றிருந்தனர். அவர்களிடம் போனில் பேசினேன்.

எல்லோரும் சில நிமிட உரையாடலுக்குப் பின்னர் கேட்கும் ஒரே கேள்வி, எப்ப சார் அடுத்து ஊருக்கு? 

A CM who never respects the law of the land - கேஜ்ரிவால்

Date : 21.01.2014

நம் நாட்டின் தலைநகர் இன்றைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த்
கேஜ்ரிவால் கும்பல்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. 

குடியரசு தினவிழா நடைபெறப்போகும் இந்த வேளையில் இந்த நாடகத்தை அரங்கேற்ற அர்விந்த் கேஜ்ரிவால் தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் டெல்லியில் பேரழிவு ஏற்படுத்த வழி எற்படுத்தவே என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வங்கிக் கொண்டு கேஜ்ரிவாலை சிறையில் அடைத்து இந்த ரவுடித்தனத்திற்கு முற்றுப்புள்ளீ வைக்க வேண்டும். ஆனால் அறிக்கைப்போர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காளான் நம் நாட்டின் தலைநகரின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்பொதுகூட செயலபட மாட்டார்கள் என்றால் நம்மை விட அழுகிப்போன ஜனநாயகம் வேறு இருக்காது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் குடியரசு தின விழா குறித்த கருத்து அவர் உண்மையில் எந்த நாட்டு உளவாளி என்ற சந்தேகம் வலுக்கிறது. வழக்கமான தேசத்துரோகிகளான கம்யூனிஸ்ட்டுகளும், அடிப்படைவாத இஸ்லாமிய கும்பல்களும், நக்சல்பாரிகளும் பேசும் பேச்சை அர்விந்த் கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பம்பாய் நிகழ்வை நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது ஆம் ஆத்மியும், அதன் தலைவர் கேஜ்ரிவாலும் மற்றும் இதை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காங்கிரஸும்.

இருக்குடா உங்களுக்கெல்லாம் ஆப்பு... இன்னும் கொஞ்ச நாள்தான்..

கல்யாண சமையல் சாதம்..

கல்யாண சமையல் சாதம்.. ( என்னது எம்.ஜி.ஆர் செத்துட்டாரா பார்ட்டிகள் ப்ளீஸ் எக்ஸ்கியூஸ்..)

லேகா வாஷிங்டன் நடித்து சமீபத்தில் வந்த கல்யாண சமையல் சாதம் நேற்று பார்த்தேன். படத்தை தூக்கி நிறுத்துவதில் லேகா வாஷிங்டன் முதலில் நிற்கிறார். மற்றபடி ஹைஃபை பிராமண குடும்ப கல்யாணம். அது நடக்கும் முன்னர் ஏற்படும் சிறு குழப்பம் கடைசியில் சுபம். இவ்வளவே. ஆனால், முழுப்படத்தையும் லேகா வாஷிங்டனுக்காகவே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாதாரன உடை, நாகரீக உடை, பாரம்பரிய உடை என எல்லாவற்றிலுமே அழகாக தெரிகிறார். நேற்றுதான் சப்பி சீக்ஸ், டிம்பிள் சின், ரோஸி லிப்ஸ், கர்லி ஹேர், வெரிஃபேர் , ஐஸ் ஆர் ப்ளூ, லவ்லீ டூ, என்ற பாடலை ஸ்கைப் மூலம் என் மகளுடன் சேர்ந்து பாடி அவளை அங்கு ஆடவைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது மகளுக்கு அடுத்து இந்த குணங்கள் அனைத்தும் கொண்டவராய் லேகா வாஷிங்டன் இருக்கிறார். 

எப்படிப் பார்த்தாலும் அழகாய் இருக்கிறார். பிரசன்னா லேகாவாஷிங்டனுடன் நடித்திருக்கிறார். ஓரளவு நன்றாகவே செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கதையை சொதப்பாமல் எடுத்த இயக்குனருக்கு பாராட்டு.

நகைச்சுவைதான் பிரதானம் என முடிவு செய்து படமெடுத்திருப்பதால் அப்படியே கிரேஸீ மோகனின் மேடை நாடகத்தை திரையில் கண்டது போல எண்ணம்.

ஆஹா, ஓஹோ எனச் சொல்ல முடியாவிட்டாலும் நல்ல பொழுதுபோக்கு பட வரிசையில் வைக்கலாம்.